அசுவினி அக்குன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அசுவினி சிதானந்தா செட்டி அக்குன்சி (Ashwini Akkunji. பி. 7 அக்டோபர் 1987) ஒரு இந்திய குறுவிரையோட்ட வீரர்; இவர் கர்நாடகத்திலுள்ள உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சித்தாபுராவைச் சேர்ந்தவர். இவர் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் 4x100 மீ தொடரோட்டப் போட்டியில் மன்சீத் கவுர், மந்தீப் கவுர், சினி சோசு ஆகியோருடன் இணைந்து தங்கம் வென்றார். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீ தடையோட்டத்தில் தங்கம் வென்றார்; மேலும், மன்சீத் கவுர், மந்தீப் கவுர், சினி சோசு ஆகியோருடன் இணைந்து 4x100 மீ தொடரோட்டப் போட்டியிலும் தங்கம் வென்றார். இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு விவசாயி. தற்போது இவர் இந்திய இரயில்வேயில் பணிபுரிகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவினி_அக்குன்சி&oldid=2267599" இருந்து மீள்விக்கப்பட்டது