வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வைணவ வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் வைணவ வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு       = வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரைகள்
}}

காப்பகம்[தொகு]

1 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/1 திருமால் அல்லது விஷ்ணு இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்று அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.


2 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/2

திருவரங்க கோவில் கோபுரம்

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும் அந்தப் பாடல்கள் மங்களாசாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன.

இவ்வாறு புகழ்பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.


3 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/3 திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில் திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்). தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),


4 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/4

நாதமுனிகள்

நாலாயிர திவ்விய (திப்பிய) பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தில் ஒரு முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.

கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் நாதமுனிகள் நாலாயிரத்திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார். இதில் திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

திவ்விய எனும் சொல் திருமாலையும் பிரபந்தம் எனும் சொல் பாடலையும் குறிக்கும்.


5 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/5

சக்ராயுதம்

இந்து தொன்மவியலின் அடிப்படியில் சக்ராயுதம் என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை சக்கரத்தாழ்வார் என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள். சுதரிசனம்,சுதர்சனம் என பல பெயர்களில் இவ்வாயுதம் வழங்கப்படுகிறது.சிவபெருமானை திருவீழிமிழலை தலத்தில் விஷ்ணு ஆயிரம் தாமரைப் பூக்களை கொண்டு தினம் அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்தது காணப்பட்டது. அதனை அர்ச்சனையின் போது அறிந்த விஷ்ணு தன் கண்களில் ஒன்றினை தாமரையாக்கி ஆயிரம்பூவாக முழுமையான பூஜை செய்தார். அதனால் சிவபெருமான் மகிழ்ந்து சக்ராயுதத்தினை விஷ்ணுவிக்கு வழங்கினார் என்று திருவீழிமிழலை தலபுராணம் கூறுகிறது.


6 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/6

பாஞ்சசன்யம்

பாஞ்சசன்யம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக்கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக பெறப்பட்டதாகவும், திருமாலுக்கு சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.


7 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/7

தசாவதாரத்தில் ஒன்றான கூர்மம்

தசாவதாரம் என்பது பத்து அவதாரங்களை குறிப்பதாகும். இறைவன் பூமியில் பிறப்பெடுப்பதை அவதாரம் என்று இந்துகள் குறிப்பிடுகின்றார்கள். வைணவ சமயத்தின் முழுபெரும் கடவுளான பெருமாள் உலகில் அதர்மம் ஓங்குகின்ற போது, பக்தர்களை காக்கவும், தர்மத்தினை நிலை நாட்டவும், அரகக்கர்களை அழிக்கவும் அவதாரம் எடுப்பதாக வைணவர்கள் நம்புகின்றார்கள். அவ்வாறு பெருமாள் எடுத்த அவதாரங்களில் பத்து அவதாரங்கள் தச அவதாரங்கள் என்று வழங்கப்படுகின்றன. தசம் என்றால் பத்து என்று பொருள். மோகினி, வெங்கடாஜலபதி, ஹயக்ரீவர் என இந்த தசவதாரப் பட்டியலில் இடம் பெறாத பெருமாளின் அவதாரங்களும் உள்ளன.


8 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/8

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் படுக்கையில் திருமால் திருமகள்

திருப்பாற்கடல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பத்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற இத்தலம் இப்பூமியில் இல்லாத தலமாகும். இந்து தொன்மவியலில் பாற்கடல் என்பது திருமாலின் இருப்பிடமாக கூறப்படுகிறது. இந்த பாற்கடலில் ஆதிசேசன் என்ற பாம்பு படுக்கையில் திருமால் படுத்துக் கொண்டிருப்பதாக திருமுறைகள் குறிப்பிடுகின்றன. இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்)பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான். இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர். இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன. விமானம் அஷ்டாங்க விமானம்.நிலவுலகில் இல்லாத இந்த திருப்பாற்கடல் மொத்தம் 51 பாக்களால் திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார் முதலிய பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்றது.


9 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/9

பாண்டவர்களுடன் திரௌபதி

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.


10 கட்டுரை[தொகு]

வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/10

இராமாயணம் எழுதும் வால்மீகி

இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது கிமு 400க்கும் கிபி 200 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியைச் சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது.


பரிந்துரைகள்[தொகு]

  1. திருப்பதி
  2. 108 வைணவத் திருத்தலங்கள்
  3. திருமண்
  4. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
  5. சக்ராயுதம்
  6. பாஞ்சசன்யம்
  7. தசவதாரம்
  8. பாற்கடல்
  9. மகாபாரதம்
  10. இராமாயணம்
  11. காளிங்க நர்த்தனம்