வலைவாசல்:வைணவம்/சிறப்புக் கட்டுரை/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள். வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில் திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.* வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்). தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),