ரோஜா மார்பு ஆலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோஜா மார்பு ஆலா
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: நீள் சிறகு
கடற்பறவை
பேரினம்: Sterna
இனம்: S. dougallii
இருசொற் பெயரீடு
Sterna dougallii
Montagu, 1813

ரோஜா மார்பு ஆலா ( Roseate tern ) என்பது நீள் சிறகு கடற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஆலா இனமாகும். இதன் விலங்கியல் பெயரில் உள்ள ஸ்டெர்னா என்ற பேரினப் பெயர் பண்டைய ஆங்கில "ஸ்டெர்ன்", "டெர்ன்", [2] என்பதிலிருந்து பெறப்பட்டது. மேலும் விலங்கியல் பெயரில் உள்ள இனப்பெயரான டகல்லி என்பது ஸ்காட்டிஷ் மருத்துவரும் சேகரிப்பாளருமான டாக்டர் பீட்டர் மெக்டௌகலை (1777–1814) குறிப்பதாக உள்ளது. [3] "ரோஸேட்" என்பது இனப்பெருக்க காலத்தில் முதிர்ந்த பறவையின் பறவையின் நெஞ்சில் காணப்படும் இளஞ்சிவப்பு இறகுகளைக் குறிக்கிறது. [4]

வகைபிரித்தல்[தொகு]

ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஜார்ஜ் மாண்டேகு 1813 இல் ரோஜா மார்பு ஆலாவை விவரித்தார் மரபணு ரீதியாக, இது வெள்ளை-முன் டெர்ன் ( எஸ். ஸ்ட்ரைடா ) உடன் மிக நெருக்கமான தொடர்புடையது. இவற்றின் பொதுவான மூதாதையரான கறும்பிடரி ஆலாவுடன் ( எஸ். சுமத்ரானா ) சகோதர வம்சாவளியைக் கொண்டுள்ளது. [5]

இந்த இனம் பல மரபியல் இனங்கள் கொண்டுள்ளது. அவை முக்கியமாக அலகு நிறம் மற்றும் சிறிய இறகு நிறங்களில் வேறுபடுகின்றன.

விளக்கம்[தொகு]

இது ஒரு சிறிய-நடுத்தர ஆலா ஆகும். இது காக்கையை விட அளவில் சிறியது. சற்று மெலிந்தாற்போற் காணப்படும். இது 33–36 cm (13–14 அங்) நீளமும், 67–76 cm (26–30 அங்) இறக்கை அகலம் கொண்டது. பெரும்பலும் ஆற்று ஆலாவை ஒத்த இதன் வாலில் சாம்பல் நிறத்தைக் காண முடியாது. வால் தூய வெண்மையாக இருக்கும். ரோஜா மார்பு ஆலாவுக்கு மெல்லிய கூர்மையான அலகு உள்ளது. இதன் அலகு குளிர் காலத்தில் கருப்பாகவும் கோடைக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இது குறுகிய இறக்கைகளை கொண்டது. மேல் இறக்கையின் மேற்பகுதி வெளிர் சாம்பல் நிறமாகவும், அதன் அடிப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். முதிர்ந்த பறவைகளுக்கு மிக நீண்ட, நெகிழ்வான வாலும் ஆரஞ்சு-சிவப்பு நிற கால்களும் உள்ளன. கோடையில், முதிர்ந்த பறவைகளின் அடிப்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனால் தான் இதற்கு ரோஜா மார்பு ஆலா என்ற பெயர் வந்தது. குளிர் காலத்தில் நெற்றியிலும் கருங்கோடுகளைக் காணலாம்.

நடத்தையும் சூழலியலும்[தொகு]

உணவு[தொகு]

ரோஜா மார்பு ஆலா முகம்

மற்ற ஸ்டெர்னா டெர்ன்களைப் போலவே, ரோஜா மார்பு ஆலாவும் மீன்களை கடல் பரப்பின் மீது அமர்ந்தும், முக்குளித்து பிடிக்கவும் வல்லது. இது பொதுவாக கூடுதலாக கடல் சார்ந்தது வாழும். கரையோரம் உள்ள நன்னீர் தடாகங்களில் குளிப்பதற்கு அரிதாகவே செல்லும். மேலும் நன்னீரில் மீன்பிடிக்காது. பெண் பறவைக்கு ஆண் பறவை மீனை பரிசாக கொடுத்து காதலூட்டத்தில் ஈடுபடும்.

குளிர்காலத்தில், இதன் நெற்றி வெள்ளையாகவும், அலகு கருப்பு நிறமாகவும் மாறும்.

இனப்பெருக்கம்[தொகு]

முட்டை சேகரிப்பு அருங்காட்சியகம் வைஸ்பேடன்
Sterna dougallii bangsi முட்டைகள் - அருங்காட்சியகம் டி துலூஸ்

இந்த இனம் கடலோரங்களில் மற்றும் தீவுகளில் உள்ள பறவைக் கூட்டங்களுடன் இனப்பெருக்கம் செய்கிறது. ஆத்திரேலியப் பிரதேசத்தில், இது கறும்பிடரி ஆலா ( எஸ். சுமத்ரானா ), லெசர் க்ரெஸ்டெட் டெர்ன் ( தலாசியஸ் பெங்காலென்சிஸ் ), க்ரெஸ்டட் டெர்ன் ( டி. பெர்கி ), ஃபேரி டெர்ன் ( ஸ்டெர்னுலா நெரிஸ் ), பிரிடில்ட் டெர்ன் ( ஓனிகோப்ரியன் ), சில்வர் குல் ( Croicocephalus novaehollandiae ) ஆகியவற்றுடன் கூடு கட்டுவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [6] வெற்றுத் தரையில் அல்லது அடர்ந்த தாவரங்களின் அடியில் உள்ள சிறு பள்ளத்தில், ஒன்று அல்லது இரண்டு (அரிதாக மூன்று) முட்டைகளை இடுகிறது.

வெள்ளை வயிற்றுக் கடற்கழுகு ( Halieetus leucogaster ) மற்றும் வெள்ளிக் கட்காக்கை போன்றவை இதன் முட்டைகளையும், குஞ்சுகளையும் வேட்டையாடுவதாக அறியப்படுகிறது. அதே சமயம் கல்திருப்பி உள்ளான் ( Arenaria interpres ), கருப்பு எலி ( Rattus rattus ) மற்றும் கிங்ஸ் ஸ்கின்க் ( Egernia kingii ) ஆகியவையும் வேட்டையாடுவதாக சந்தேகிக்கப்படுகிறது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Sterna dougallii". IUCN Red List of Threatened Species 2018: e.T22694601A132260491. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22694601A132260491.en. https://www.iucnredlist.org/species/22694601/132260491. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Sterna". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  3. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling. 
  4. "Roseate". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  5. Bridge, Eli S; Jones, Andrew W; Baker, Allan J (2005). "A phylogenetic framework for the terns (Sternini) inferred from mtDNA sequences: implications for taxonomy and plumage evolution". Molecular Phylogenetics and Evolution 35 (2): 459–469. doi:10.1016/j.ympev.2004.12.010. பப்மெட்:15804415. http://scholar.library.csi.cuny.edu/~fburbrink/Courses/Vertebrate%20systematics%20seminar/Bridge%20et%20al%202005%20.pdf. 
  6. 6.0 6.1 Department of the Environment (2015). "Sterna dougallii — Roseate Tern". Canberra, Australian Capital Territory: Department of the Environment, Water, Heritage and the Arts, Australian Government. http://www.environment.gov.au/cgi-bin/sprat/public/publicspecies.pl?taxon_id=817. Department of the Environment (2015).

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sterna dougallii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_மார்பு_ஆலா&oldid=3788417" இருந்து மீள்விக்கப்பட்டது