வெள்ளை வயிற்றுக் கடற்கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளை வயிறு கடற்கழுகு
In Gippsland, Victoria
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: Haliaeetus
இனம்: H. leucogaster
இருசொற் பெயரீடு
Haliaeetus leucogaster
Gmelin, 1788
Range of both this species and Sanford's sea eagle shown in green, but the latter demarcated within a paler blue circle
வேறு பெயர்கள்

Ichthyaetus blagrus Blyth, 1843

இலங்கையின் பூந்தல தேசிய வனத்தில், பறக்கும் ஒரு வயது வந்த வெள்ளை வயிறு கடற்கழுகு

வெள்ளை வயிறு கடற்கழுகு அல்லது வெண்மார்பு கடற்கழுகு (white-bellied sea eagle அல்லது white-breasted sea eagle) என்று அழைக்கப்படுவது பாறுக் குடும்பத்தைச் ஒரு பெரிய பகலாடி கொன்றுண்ணிப் பறவை ஆகும். இதை 1788 ஆம் ஆண்டில் ஜோஹன் ஃப்ரெட்ரிக் க்மெலின் முதலில் விவரித்தார். இது சாலமன் தீவுகளின் சான்ஃபோர்டின் கடல் கழுகுடன் நெருக்கமாக தொடர்புடையது. மேலும் இவை இரண்டும் நெருங்கிய தொடர்புடைய உயிரினக் குழுவாக கருதப்படுகின்றன. வயது வந்த இந்த கடற் கழுகுகளின் தலை, மார்பு, அடிவயிறு, பிட்டம் போன்றவை வெள்ளை நிறத்தில் இருக்கும். முதுகும், சிறகுகளும் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை பறக்கும்போது சிறகுகளின் அடிப்பகுதி சரிபாதி வெள்ளை நிறத்திலும் இறகுகள் கருப்பு நிறத்திலும் இருப்பது நன்கு புலப்படும். அனைத்து கடல் கழுகு இனங்களையும் போலவே இதன் வால் குறுகியதாகவும், ஆப்பு வடிவத்திலும் இருக்கும். இக் கழுகுகளில் பெண் பறவைகள் ஆண் பறவைகளை விட சற்று பெரியதாக இருகும். மேலும் இவை 90 cm (35 அங்) நீளமும், 2.2 m (7.2 அடி) வரையிலான சிறகுகளுடன், 4.5 kg (9.9 lb) எடையுடன் இருக்கும். இந்தக் கழுகுகளில் இளம் பறவைகள் துவக்கத்தில் இதன் பெற்றோரைப் போல தோன்றாது. இளம் பறவைகளின் சிறகுகள் கருப்பு நிறத்துக்கு பதில் கரும் பழுப்பு நிறமாக தோன்றும். பறக்கும்போது இளம் பறவையின் வால்பகுதி பாதி அளவுக்கு வெண்மை நிறத்துக்கு பதில் கருஞ்சாம்பல் நிறதில் காணப்படும். இவை ஐந்து அல்லது ஆறு வயதுக்குள் படிப்படியாக தன் பெற்றோரின் நிறத்துக்கு மாறும். இந்த பறவையில் ஒலியானது காட்டு வாத்தின் ஓசையை ஒத்து இருக்கும்.

இவை இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து தென்கிழக்காசியா வழியாக ஆத்திரேலியா வரை கடற்கரைகள் மற்றும் முக்கிய நீர்வழிகளில் வசிக்கின்றன. இந்த கடல் கழுகுகள் தண்ணீருக்கு அருகில் இனப்பெருக்கம் செய்தும் வேட்டையாடி வாழ்ந்தும் வருகின்றது. இவற்றின் உணவில் மீன் பாதியளவு இடம்பெறுகிறது. இவை வாய்ப்பு கிடைத்தால் இறந்த பலவகையான விலங்குகளின் இறைச்சியையும் உண்கின்றன. உலகளவில் இவை தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் என மதிப்பிடப்பட்டாலும், தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆத்திரேலியாவின் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், தெற்கு ஆஸ்திரேலியா, தசுமேனியாவில் பாதிக்கப்படக்கூடியதாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாழ்விடத்திற்கு மனித இடையூறு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் கூடுகளுக்கு அருகில் மனிதர்களின் செயல்பாடுகளாலும், இதன் இனப்பெருக்கம் பாதிக்கிறது. மேலும் கடற்கரைக்கு அருகில் இவை கூடு கட்ட பொருத்தமாக உள்ள மரங்களை வெட்டுவதினாலும் இந்த கழுகுகளின் எண்ணிக்கை குறைய காரணமாகிறது. வெள்ளை வயிற்றுக் கடல் கழுகானது ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களால் மதிக்கப்படுகிறது. மேலும் அது குறித்து பல்வேறு நாட்டுப்புறக் கதைகளும் அவர்கள் மத்தியில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]