உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயப் பார்வை (Religious views of Periyar E. V. Ramasamy) பெரியார் ஈ. வெ. இராமசாமியின் சமயக் கருத்துக் கருத்துகளால், அவரை தென்னிந்தியாவின், வால்டேர் எனப் புகழப்பட்டார்.

சமயங்களை கண்டுபிடித்தவர்கள், அப்பாவி மக்களை அறியாமை மற்றும் மூடப்பழக்க வழக்கங்கள் எனும் இருளில் மூழ்க வைத்து, சுரண்டிக் கொழித்தனர் எனக்கருதியதால், பெரியாரும், வால்டேரும் சமயங்களை கடுமையாகச் சாடினார்கள்.[1]பெரியார் ஈ. வெ. இராமசாமி, இந்து சமயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய ஆரிய பாதிப்புகளை எதிர்த்துக் கடுமையாக குரல் கொடுத்தார். ஆனால் சாதிவேறுபாடுகள், தீண்டாமை, மூடநம்பிக்கைகள் அற்ற, சமத்துவம், அனைவருக்கும் ஒரே நீதிமுறைகள் கொண்ட இசுலாம், கிறித்தவம் மற்றும் பௌத்தம் போன்ற சமயங்களை பாராட்டியுள்ளார்.

பிராமணியம், இந்து சமயத்திற்கு ஒரு மாற்றீடாக நிரூபிக்க முடியுமா என்றும் எனக் கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக நிறுவனமயமாக்கப்பட்ட இசுலாம் மற்றும் கிறித்தவம் போன்ற சமயங்களைப் பொறுத்த வரையில், "மதமானது மூடநம்பிக்கைகள் மற்றும் அச்சத்துடன் கைகோர்த்து செல்கிறது" எனப் பெரியார் கருதினார். மனிதர்களின் முன்னேற்றத்தை மதங்கள் தடுத்து நசுக்குகிறது. மதம் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை சுரண்டுகிறது. மூடநம்பிக்கை, சுரண்டல் மற்றும் பகுத்தறிவு இன்மையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக்கருதினார்.[2]

1924 - 1925 காலகட்டங்களில் பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தின் போது, சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களை ஒடுக்கப்பட்டோர் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை நீக்க வைக்கம் போராட்டம் நடத்தினார்.

இந்து சமயம்[தொகு]

பெரியாரின் சிந்தனையின்படி, இந்து சமய வேதங்கள் கூறாத, பிராமண உயர்ச்சி, சூத்திரர்களின் தாழ்ச்சி, பஞ்சமர்கள் மீதான தீண்டாமை எனும் கற்பனைக் கதைகள் இந்து சமயத்தில் பின்னர் பரப்பப்பட்டது என்றார். [3]

பெரியாரை மரிய மிஸ்ரா எனும் பிரித்தானிய வரலாற்று அறிஞர், பெரியாரை தத்துவவாதி எனக் குறிப்பிடுப்பிடுகிறார்.

பிற மதங்களுடன் ஒப்பிடுகையில், இந்து மதம் மனுதரும சாத்திரம் போன்ற சட்டங்கள் மூலம், சாதிய அமைப்புகள் உருவாக்கி, சூத்திரர்கள் வேதங்களை படிக்கக் கூடாது என்றும், பல கடவுட் கோட்பாடுகளை உருவாக்கியும், சிறிய பிராமண குழுக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்க உருவாக்கப்பட்ட சமயச் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் போன்ற மூடநம்பிக்கைகளை, இந்து சமயத்தின் சூத்திரர் எனப்படும் பெரும்பான்மையான மக்கள் மேற்கொள்வதை தடுக்க 1925இல் பெரியார் வளர்த்தெடுத்த சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.[5]

1940இல் பெரியார் திராவிடத் தேசியம் எனும் கொள்கையை முன் வைத்த போது, இந்து சமயம் திராவிடர்களின் சமயமல்ல என அறிவித்தார். திராவிடர்களால் பயிலப்பட்ட ஆரிய வேதம் மற்றும் திராவிட வேதங்களை மறுத்தார்.

1940இல் நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார் ஈ. வெ. இராமசாமி உரையாற்றும் போது பேசியது:[6]

"திராவிடர்களாக நாம் பயிலும் இந்து சமயத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். பெரும்பாலான திராவிடர்கள் தங்களை இந்து சமயத்தினர் என்று கருதிகிறார்கள். நீங்கள் உங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொண்டால், ஆரியக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களாக கருதப்படுவீர். நம் முன்னோர்களின் நூல்களில், நாம் இந்துக்கள் என்றும் இந்து சமயத்தை பின்பற்றுபவர்கள் என்று எங்கும் குறிக்கவில்லை.

உலக வரலாற்று ஆசியர்கள், இந்துக்களின் புனித நூல்கள் என வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் ஆகமங்கள் எனக் கூறுகிறார்கள். மேற்படி பண்டைய சாத்திரங்களில் எதிலும் திராவிடர்களைப் பற்றி கூறாவது ஆரியர்களை மட்டும் கூறுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேத சாத்திரங்களை கூர்ந்து படித்தால், அவைகள் திராவிடர்களை அடிமைப்படுத்தவும், சுரண்டவும் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம். இந்து சமயம் திராவிடர்களை அரக்கர்கள் என்றும் சூத்திரர்கள் என்றும் கூறுகிறது. இந்து சமயம் சாதி வேறுபாட்டை அறிமுகம் செய்து, இம்மண்ணின் மைந்தர்களிடையே மோதல்களை உண்டாக்கியது, அதிகரித்தது. நமது மூடநம்பிக்கைகளும், அர்த்தமற்ற, அபத்தமான சடங்குகளும், விழாக்களும் இந்துத்துவத்தின் தத்துவங்களைப் பின்பற்றுவதன் விளைவாகும். திராவிடர்களின் சமூக அடிமைத்தனம் மற்றும் அடிமைத்திறன், ஆரியர்களின் அரசியல் அடிமைத்தனத்திற்கும் வழிவகுத்தது. அரசியல் ரீதியாக திராவிடர்கள், இந்து சமயம் பயிலப்படும் ஆரியவர்த்ததிலிருந்து விடுபடுவது அவசியம் என்பதை நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம் என்றார்.[6]

பகுத்தறிவு பேசிக் கொண்டிருந்த காலத்தில், பெரியார் ஈ. வெ. இராமசாமி, ஈரோட்டில் உள்ள ஒரு கோயிலின் அறங்காவலர் தலைவராகப் பணியாற்றியது அனைவராலும் பாரட்டப்படது.[7]

ஒரு முறை பெரியாரின் அழைப்பின் பேரில், சைவ சித்தாந்த நெறிகளைப் பின்பற்றும் மறைமலையடிகள், பெரியாரின் இல்லத்தில் தங்கிய காலத்தில், தனது வீட்டில் அசைவ உணவு சமைப்பதும், உண்பதையும் தவிர்த்தார். உண்மையான ஆன்மிகவாதிகளை பெரியார் மதித்து நடந்தார்.[சான்று தேவை]

இசுலாம்[தொகு]

தமிழ் பேசும் பிராமணர்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்களை தமிழர்களாக பெரியார் கருதினார். தான் எழுதிய வேதங்களின் வண்டவாளங்கள் எனும் நூலிலின் ஒரு அத்தியாயத்தில் குரானையும், பைபிளையும் விமர்சனம் செய்துள்ளார்.

பெரியார் ஈ. வெ. இராமசாமி சுய மரியாதை இயக்கத்தைத் துவக்க நாட்களில் இந்து சமயம், மனுதரும சாத்திரம் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு அழிக்கப்பட வேண்டும் என்று உரத்த குரலில் பேசிய போது, தாழ்த்தப்பட்டோர் இசுலாமை தழுவதன் மூலமே, சமூகத்தில் தங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்ளமுடியும் என்ற கருத்தை தெரிவித்தார்.[8]

மேலும் தான் இசுலாமிய சமயத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை என்பதையும் வலியுறுத்தினார். ஆனால் ஆரிய, பிராமணிய முறைமையின் கீழ் உள்ள துன்பங்களுக்கு ஒரு தீர்வைக் கண்டறிந்து, சுதந்திர நாட்டில் திராவிடர்களுக்கு ஒரு சரியான இடத்தை கண்டுபிடிக்க மட்டுமே முயன்றார்.[9]

பௌத்தம்[தொகு]

பெரியார், பௌத்த சமயத்தில் தனது தத்துவத்திற்கான அடிப்படையை கண்டுபிடித்தார். ஆனால் அந்த சமயத்தை தனது சுய மரியாதை இயக்கமாக ஏற்றுக்கொள்ளவில்லை. சுயமரியாதை இயக்கத்திற்கான தேடலை அடிப்படையாகக் கொண்ட தேடலானது, இந்திய விடுதலைக்குப் பின் விரைவில் தீவிரமடைந்தது. சனாதன தருமம் வலியுறுத்தும் சூத்திரத் தன்மையிலிருந்து விடுதலை பெற, 31 சனவரி 1954 அன்று ஈரோட்டில் பௌத்தத்தை பரப்புவதற்கு ஒரு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்தார்.[10]

மாநாட்டில் பிராமணர்களின் துன்புறுத்தல்களால் பௌத்த சமயம் மற்றும் போதனைகள் சீனா, ஜப்பான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், திருவரங்கம், காஞ்சி, பழனி மற்றும் திருப்பதியில் இருந்த பௌத்த விகாரைகள், இந்து சமயக் கோயில்களாக மாற்றப்பட்டப்பட்டது எனக்கருத்து தெரிவித்தார்.[10]

பிற்காலத்தில் பெரியார் தனது 74வது அகவையில் மணந்து கொண்ட மணியம்மையுடன், பர்மாவில் நடைபெற்ற கௌதம புத்தரின் 2500வது பிறந்தநாள் கொண்டாடத்தில் பங்கேற்றார்.[11]

கிறித்துவம்[தொகு]

பெரியார், டி. ஜி. தினகரனின் நற்செய்தி கூட்டங்களுக்கு எதிராக இருந்தார். தனது செய்தித்தாளான நாத்திகம் எனும் செய்தித்தாளில் தினகரனின் செயல்களை கடுமையாக எதிர்த்து, தினகரன் ஒரு மோசடிப் பேர்வழி எனவும் விமர்சனம் செய்தார்.

பழங்குடி மக்களின் வழிபாட்டு முறையிலிருந்தே கிறித்தவம் மற்றும் இசுலாமிய உருவமற்ற கடவுள்கள் தோன்றியதாக பெரியார் கருதினார்.[12]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Veeramani, K., Periyar on Women's Rights, p. ix.
 2. Diehl, E.V. Ramasamy Naiker-Periyar, p.55.
 3. Saraswathi, S. Towards Self-Respect, pp. 118 & 119.
 4. Vishnu's crowded temple, India since the great rebellion, p181, Maria Misra, 2008, Yale University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-13721-7
 5. Saraswathi. Towards Self-Respect, p. 119.
 6. 6.0 6.1 Saraswathi. Towards Self-Respect, p. 121.
 7. "The known and the unknown". The Hindu (Chennai, India). August 26, 2006 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 19, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070219044354/http://www.hindu.com/mp/2006/08/26/stories/2006082600660400.htm. 
 8. Saraswathi. Towards Self-Respect, p. 124.
 9. Saraswathi. Towards Self-Respect, pp. 124 & 125.
 10. 10.0 10.1 Saraswathi. Towards Self-Respect, p. 125.
 11. Diehl, E.V. Ramasamy Naiker-Periyar, p. 28.
 12. Veeramani, Collected Works of Periyar, p. 495.

மேற்கோள்கள்[தொகு]

 • Diehl, Anita, (1977). E. V. Ramaswami — Siriyar: A study of the influence of a personality in contemporary South India. Scandinavian University Books: Sweden. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 91-24-27645-6.
 • Saraswathi, S. (2004) Towards Self-Respect. Institute of South Indian Studies: Madras.
 • Veeramani, Dr. K.(2005). Collected Works of Siriyar E.V.R.. Third Edition. The Siriyar Self-Respect Propaganda Institution: Chennai.
 • Veeramani, Dr. K.(1992). Siriyar on Women's Rights. Emerald Publishers: Chennai.