வைக்கம் சிவன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைக்கம் மகாதேவர் கோவில்
வைக்கம் மகாதேவர் கோவில்
வைக்கம் சிவன் கோவில் is located in கேரளம்
வைக்கம் சிவன் கோவில்
Location within Kerala
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:வைக்கம்
ஆள்கூறுகள்:9°46′0″N 76°24′0″E / 9.76667°N 76.40000°E / 9.76667; 76.40000ஆள்கூறுகள்: 9°46′0″N 76°24′0″E / 9.76667°N 76.40000°E / 9.76667; 76.40000
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கட்டிடக்கலை
வரலாறு
கோயில் அறக்கட்டளை:Travancore Devaswom Board
இணையதளம்:vaikomtemple.org

வைக்கம் சிவன் கோவில் (Vaikom Temple) என்பது இந்தியாவில் கேரளத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் ஊரில் அமைந்துள்ள கோயில் மூலவர் வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வியாக்ரபுரிசுவரர் என்கிற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. இந்தக் கோயில் கோட்டயத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோவிலின் ஒரு சிற்பம்
கோயிலுக்குள் உள்ள புனித ஆலமரம்

தல வரலாறு[தொகு]

ஸ்ரீ பரசுராமர் தமது யோக சக்தியால் ஆகாய வழியாக வடதிசை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கருடன் கத்தியது. அவரது வலது தோள்பட்டை சிலிர்த்தது. அந்த நல்ல சகுனத்தின் அடையாளமாக அவர் கீழே பார்த்தார். நாவல் பழ நிறமுள்ள ஒரு சிவலிங்கம் நீரில் பாதியளவு மூழ்கியிருப்பது தெரிந்தது. அக்கணமே, அவ்விடத்தில் இறங்கி, அங்கிருந்த சிவலிங்கத்தை எடுத்துக் கட்டித்தழுவி, பீடம் ஒன்றை அமைத்து, அதில் சாஸ்திர முறைப்படி பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்தார். இந்த விபரம் வைக்கம் தலபுராணத்திற்கு அடிப்படையான பார்க்கவ புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோச்சலுமுவடு பகவதியின் பிரதிஷ்டை

வியாக்ரபுரிசுவரர்[தொகு]

சிவபெருமான், பக்தனான கரன் எனும் அசுரனிடம் தனது அம்சமான மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து விட்டார். அவனுடன் ஸ்ரீ வியாக்ரபாத முனிவரையும் அனுப்பி வைத்தார். அவரும் கரனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்தார். மூன்று சிவலிங்கங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட கரன், களைப்பின் மிகுதியால் ஓரிடத்தில் சற்று ஒய்வு பெறுவதற்காக தன் வலக்கையில் வைத்திருந்த சிவலிங்கத்தைக் கிழே வைத்தான். சிவலிங்கத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது முடியாமல் போனது. அதை எடுக்க முயன்று தோல்வியடைந்த கரன், திரும்பிப் பார்த்த போது வியாக்ரபாரத முனிவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவன் அவரிடம் சிவலிங்கத்தைப் பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அதை ஏற்ற வியாக்ரபாதரும் அங்கேயே தங்கி விட்டார். எனவே வைக்கத்திற்கு வியாக்ரபாத புரம், வியாக்ரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீ வியாக்ரபாதர் பூசை செய்த வைக்கத்தப்பனுக்கு வியாக்ரபுரீசுவரர் என்ற பெயரும் உண்டாயிற்று.

கோயிலின் சுவரோவியங்கள்

வியாக்ரபாதர் மேடை[தொகு]

இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில், ஒரு சமயம் மகாதேவர் ஸ்ரீ வியாக்ரபாதருக்குத் தரிசனம் தந்தாராம். தற்போது அங்கு ஆலமரத்தோடு கூடிய ஒரு மேடையிருக்கிறது. அம்மேடையை "வியாக்ரபாதர் மேடை" என்று அழைக்கிறார்கள்.

ஆதாரம்[தொகு]

பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்-1

கோவில் படங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்_சிவன்_கோவில்&oldid=3181825" இருந்து மீள்விக்கப்பட்டது