பு. வெ. சிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புசார்லா வெங்கட சிந்து
P.V. Sindhu.png
நேர்முக விவரம்
பெயர்புசார்லா வெங்கட சிந்து
பிறந்த தேதி5 சூலை 1995 (1995-07-05) (அகவை 25)
பிறந்த இடம்ஹைதராபாத், தெலுங்கானா, இந்தியா[1]
உயரம்1.79 மீ
எடை65 கிகி
நாடு இந்தியா
கரம்வலக்கை
பயிற்சியாளர்புல்லேலா கோபிசந்த்
பெண்கள் ஒற்றையர்
பெரும தரவரிசையிடம்9 [2](13 மார்ச் 2014[3])
தற்போதைய தரவரிசை10 [2](7 ஏப்ரல் 2016[4])
பி.வி.சிந்து பதக்கப்பட்டியல்

புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: సింధూ, பிறப்பு: 5 சூலை 1995) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகத்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.[5] இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.[6]ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.[7]

பிறப்பு[தொகு]

பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.

ரியோ ஒலிம்பிக்ஸ்[தொகு]

இவர் 2016 ஆகத்து மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார். [8] ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.

போட்டி எதிராளி முடிவு ஆட்டமுடிவு புள்ளிகள்
பொது மிச்செல் லி வெற்றி 2–1 19–21, 21–15, 21–17
பொது லாரா சாரோசி (ஹங்கேரி) வெற்றி 2–0 21–4, 21–9
காலிறுதிக்கான முன்சுற்று தை சூ யிங் (சீனத்தைப்பே) வெற்றி 2–0 21–13,21–15
காலிறுதி வாங் யிஹான் (சீனா) வெற்றி 2–0 22–20, 21–19
அரையிறுதி நோசோமி ஓக்குஹரா (ஜப்பான்) வெற்றி 2–0 21–19, 21–10
இறுதி கரோலினா மாரின் (எசுப்பானியா) தோல்வி 1–2 21–19, 12–21, 15–21

ஆட்டக்கால சாதனைகள்[தொகு]

 • உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
 • 2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
 • 1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
 • உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
 • பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
 • இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்[9].
 • 2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[10]
 • 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[11]
நிகழ்வு 2010 2011 2012 2013
மகாவ் ஓப்பன்[12] 3Gold medal icon.svg தங்கம்
தென் கொரியா கொரியா ஓப்பன்[12] சுற்று 2
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் இளநிலை வாகையாளர் போட்டிகள்[12] சுற்று 3
சீனா சீனா ஓப்பன்[12] தகுதிநிலை அரையிறுதி
இந்தோனேசியா இந்தோனேசியா ஓப்பன்[12] சுற்று 2
இந்தியா இந்திய ஓப்பன்[12] அரையிறுதி சுற்று 1 காலிறுதி
சப்பான் சப்பான் ஓப்பன்[12] சுற்று 2
நெதர்லாந்து டச்சு ஓப்பன்[12] 3Silver medal icon.svg வெள்ளி
இந்தியா இந்திய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட்[12] சுற்று 2 சுற்று 2 3Silver medal icon.svg வெள்ளி
மலேசியா மலேசிய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் Malaysia Open Grand Prix Gold[12] 3Gold medal icon.svg தங்கம்
சுதிர்மான் கோப்பை 3Gold medal icon.svg தங்கம்
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் வாகையாளர் போட்டிகள்இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்[12] 3Bronze medal icon.svg வெண்கலம்

மேற்சான்றுகள்[தொகு]

 1. "bwf world superseries - P V Sindhu Profile".
 2. 2.0 2.1 "BWF World Rankings". பார்த்த நாள் 2 April 2015.
 3. "BWF World Rankings - BWF世界排名榜". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்த்த நாள் 3 November 2015.
 4. "BWF World Rankings". இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. பார்த்த நாள் 19 March 2016.
 5. "Sindhu breaks into world top 20 ranking". த இந்து. 21 September 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3918416.ece. பார்த்த நாள்: 21 September 2012. 
 6. "BWF Girl's Singles Ranking of Sindhu". tournamentsoftware.com (2012-09-21).
 7. "கிராண்ட் பிரீஸ் ஓபன் பேட்மிண்டன்சிந்து சாம்பியன்". தீக்கதிர்: pp. 6. 2 திசம்பர் 2013. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013. 
 8. PV Sindhu loses to World No 1 Carolina Marin, claims Olympic silver
 9. ஜனவரி 9,2014 வெளிவந்த 'தி இந்து- 2013 சுவடுகள்' , பக்கம்-05
 10. https://tamil.thehindu.com/sports/article25756741.ece பார்த்த நாள்:17.12.2018
 11. "தங்கம் வென்றார் சிந்து - உலக பாட்மிண்டனில் வரலாறு". தினமலர் (25 ஆகத்து 2019). பார்த்த நாள் 26 ஆகத்து 2019.
 12. 12.00 12.01 12.02 12.03 12.04 12.05 12.06 12.07 12.08 12.09 12.10 "Tournaments of P.V.Sindhu". tournamentsoftware.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._வெ._சிந்து&oldid=2967501" இருந்து மீள்விக்கப்பட்டது