பி. வி. ரமணா (விளையாட்டு வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.வி. ரமணா
தனிநபர் தகவல்
முழு பெயர்புசர்லா வெங்கட ரமணா
தேசியம்இந்தியக் குடிமகன்
பிறப்புதெலங்காணா, நிர்மல் மாவட்டம், நிர்மல்
வசிப்பிடம்தெலங்காணா, சிக்கந்தராபாத்
பதக்கத் தகவல்கள்

புசார்லா வெங்கட ராமணா (Pusarla Venkata Ramana) என்பவர் முன்னாள் தொழில்முறை கைப்பந்து வீரர் மற்றும் இந்திய இரயில்வே ஊழியர் ஆவார். மேலும் அவர் இந்திய தேசிய கைப்பந்து அணி உறுப்பினராவார்.[1]

1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வெண்கலப் பதக்கத்தை வென்ற கைப்பந்து அணியில் இருந்தார். 2000 ஆம் ஆண்டில் இந்திய கைப்பந்து அணியில் இவரது பங்களிப்புக்காக அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2]

குடும்பம்[தொகு]

ரமணனின் மனைவி விஜயா தேசிய அளவில் கைப்பந்து வீரராக இருந்துள்ளார். அவர்களின் இளைய மகள் சிந்து, ரியோ டி ஜெனிரோவில் 2016 ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]