உள்ளடக்கத்துக்குச் செல்

இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு
சுருக்கம்பிடபுள்யூஎஃப்
உருவாக்கம்1934
வகைவிளையாட்டு கூட்டமைப்புகள்
தலைமையகம்மலேசியா கோலாலம்பூர், மலேசியா
உறுப்பினர்கள்
176 உறுப்பினர் சங்கங்கள்
தலைவர்
பவுல்-எரிக் ஓயர் லார்சன் (2012-நடப்பில்)
வலைத்தளம்www.bwfbadminton.org

இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (Badminton World Federation, சுருக்கமாக BWF) உடல் திறன் விளையாட்டுகளில் ஒன்றான இறகுப் பந்தாட்டத்திற்கான பன்னாட்டு கட்டுப்பாட்டு அமைப்பாகும். 1934இல் பன்னாட்டு இறகுப்பந்தாட்டக் கூட்டமைப்பு என்று ஒன்பது உறுப்பினர் நாடுகளுடன் (கனடா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்சு, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, நியூசிலாந்து, இசுக்கொட்லாந்து மற்றும் வேல்ஸ்) நிறுவப்பட்ட இவ்வமைப்பு இன்று உலகளவில் 169 உறுப்பினர் நாடுகளுடன் விரிவடைந்துள்ளது. செப்டம்பர் 24, 2006இல் மத்ரித்தில் கூடிய சிறப்புப் பொதுக்குழு புதிய பெயரான இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு (BWF) என்ற பெயரை ஏற்றுக்கொண்டது.[1]

நிறுவன நாள் முதல் இதன் தலைமையகம் ஐக்கிய இராச்சியத்தின் செல்டென்ஹாமில் அமைந்திருந்தது. ஆனால் அக்டோபர் 1, 2005இலிலிருந்து இது கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.[2] இதன் தற்போதையத் தலைவராக பவுல்-எரிக் ஓயர் லார்சன் பொறுப்பாற்றுகிறார்.[3]

கண்டவாரி கூட்டமைப்புகள்

[தொகு]
ஐந்து கண்டவாரிக் கூட்டமைப்புகளுடன் உலகப்படம்

இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு இறகுப் பந்தாட்டத்தை உலகெங்கும் பரப்பவும் வளர்க்கவும் வட்டார கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்படுகிறது. இந்த வட்டார அமைப்புகளாவன:[4]

வட்டாரம் கூட்டமைப்பு உறுப்பினர்கள்
   ஆசியா இறகுப்பந்தாட்ட ஆசியக் கூட்டமைப்பு (BAC) 41
   ஐரோப்பா இறகுப்பந்தாட்ட ஐரோப்பா (BE) 51
   அமெரிக்காக்கள் இறகுப்பந்தாட்ட பான் அம் (BPA) 33
   ஆப்பிரிக்கா இறகுப்பந்தாட்ட ஆபிரிக்கக் கூட்டமைப்பு (BCA) 37
   ஓசியானியா இறகுப்பந்தாட்ட ஓசியானியா (BO) 14
மொத்தம் 176

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Madrid Welcomes Badminton World Federation". BadmintonAsia.org. 2006-09-29 இம் மூலத்தில் இருந்து 2012-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120728111055/http://www.badmintonasia.org/newspage.aspx?newsID=141. பார்த்த நாள்: 2012-03-11. 
  2. "BWF Council / Executive Board". BWF. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.
  3. Leung, Edwin (18 May 2013). "Poul-Erik Hoyer Wins BWF Presidential Election". Badminton World Federation. http://bwfbadminton.org/news_item.aspx?id=73896. பார்த்த நாள்: 18 May 2013. 
  4. "BWF Members by Continental Confederation". BWF. பார்க்கப்பட்ட நாள் 2012-03-11.