புளுட்டோனியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளுட்டோனியம்(III) அயோடைடு
இனங்காட்டிகள்
13813-46-2
InChI
  • InChI=1S/3HI.Pu/h3*1H;/q;;;+3/p-3
    Key: OYUSUDICDNMHEI-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145816492
  • [I-].[I-].[I-].[Pu+3]
பண்புகள்
தோற்றம் பச்சை நிறத் திண்மம்[1]
அடர்த்தி 6.92 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 777 °செல்சியசு[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு நேர்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Ccmm (எண். 63)
Lattice constant a = 433 பைக்கோமீட்டர்[2], b = 1395 பைக்கோமீட்டர்[2], c = 996 பைக்கோமீட்டர்[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புளுட்டோனியம்(III) ஐதரைடு
புளுட்டோனியம்(III) புளோரைடு
புளுட்டோனியம் (III) குளோரைடு
புளுட்டோனியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நெப்டியூனியம்(III) அயோடைடு
அமெரிசியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புளுட்டோனியம்(III) அயோடைடு (Plutonium(III) iodide) என்பது PuI3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புளுட்டோனியத்தின் அயோடைடு உப்பாக இது கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

புளுட்டோனியத்துடன் பாதரச(II) அயோடைடு வினைபுரிவதால் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது:[3]

2 Pu + 3 HgI2 → 2 PuI3 + 3 Hg

புளுட்டோனியமும் ஐதரசன் அயோடைடும் 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்தாலும் புளுட்டோனியம்(III) அயோடைடு உருவாகிறது. இவ்வினையில் சிறிதளவு ஆக்சஜன் மற்றும் நீர் மட்டுமே பங்கேற்றாலும் உருவாக்கப்படும் புளுட்டோனியம்(III) அயோடைடு உடனடியாக புளுட்டோனியம் அயோடைடு ஆக்சைடு ஆக நீராற்பகுப்பு அடைகிறது.[3]

2 Pu + 6 HI → 2 PuI3 + 3 H2

பண்புகள்[தொகு]

புளுட்டோனியம்(III) அயோடைடு 777 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். பச்சை நிற திடப்பொருளாக இது காணப்படுகிறது. a = 433 பைக்கோமீட்டர், b = 1395 பைக்கோமீட்டர் மற்றும் c = 996 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்கள் கொண்டதாக Ccmm (எண். 63) என்ற இடக்குழுவுடன் புளுட்டோனியம்(III) புரோமைடு போல நேர்சாய்சதுரக் கட்டமைப்பில் புளுட்டோனியம்(III) அயோடைடு படிகமாகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 1969, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 71, Transurane, Teil C, S. 154–155.
  3. 3.0 3.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band II, Ferdinand Enke, Stuttgart 1978, ISBN 3-432-87813-3, S. 1304.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளுட்டோனியம்(III)_அயோடைடு&oldid=3815032" இலிருந்து மீள்விக்கப்பட்டது