உள்ளடக்கத்துக்குச் செல்

புரோசன் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Frozen
இயக்கம்
தயாரிப்புPeter Del Vecho
திரைக்கதைJennifer Lee
இசை
நடிப்பு
ஒளிப்பதிவுScott Beattie (layout)
Mohit Kallianpur (lighting)
படத்தொகுப்புJeff Draheim
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 19, 2013 (2013-11-19)(El Capitan Theatre)
நவம்பர் 22, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்102 minutes[1]
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)[2][3]
மொத்த வருவாய்ஐஅ$1.276 பில்லியன் (9,125.4 கோடி)[3]
ப்ரோசன் திரைப்பட வெளியிட்டு பதாகை

ப்ரோசன் தமிழ் : உறைபனி என்பது வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு 2013 அமெரிக்கன் 3D அனிமேஷன் இசை கற்பனைத் திரைப்படம் ஆகும் . ஃப்ரோஸன் .[4] 53 வது டிஸ்னி அனிமேஷன் திரைப்படம் , இன் இந்த திரைப்படம் ஹான்ஸ் கிரிஸ்துவர் ஆண்டர்சன் விசித்திர கதை " ஸ்னோ குயின் " என்ற கதையின் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 2013 ல் வெளிவந்தது .

கதைச்சுருக்கம்

[தொகு]

அன்டெண்டிலாவின் இளவரசி எல்ஸா பனியை கட்டுப்படுத்தும் அமானுஷ்ய சக்திகளைக் கொண்டிருக்கிறார்,

ஒரு கட்டத்தில்  தெரியாமல் அவருடைய சக்திகளால் சகோதரி அனா காயப்படுகிறார் . பின்னர் அரசரும் அரசியும் அவளை ட்ரோல்ஸ் எனும் சிறிய மனிதர்களிடம் அழைத்து சென்று குணமாக்குகின்றனர் .இனிமேல் எல்சா வின் சக்தி அனாவுக்கு பாதிப்பை உருவாக்க கூடாது என்று அரசரும் அரசியும் முடிவு எடுத்து இருவரையும் தனிமைப்படுத்துகின்றனர் .ஒரு கட்டத்தில் கடல்புயலால் அரசரும் அரசியும் காலமான பின்னர்

அவருடைய 21 ம் வயதில் எல்சா மகாராணியாக பதவியேற்கும்போது அனாவை ஒரு இளவரசன் நேசிப்பதை அறிந்து அவருடைய முடிசூடும் விழாவில் எதிர்பாராமல் கோபப்பட்டு சக்திகளை பயன்படுத்துகிறார். இதனால் எல்லோரும் எல்சா வின் சக்திகளை தெரிந்துகொண்டதை அடுத்து அவர் தனிமையில் சென்று பனியில் ஒரு கட்டிடத்தை அமைத்து அங்கே தங்குகிறார் .

இந்த சம்பவத்தை அடுத்து வரலாறு காணாத குளிர்காலம் உருவாகிறது . அனா எல்சாவை கண்டுபிடித்து, குளிர்காலத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார் , எல்சா வை தேடும்போது கிறிஸ்டோஃப் மற்றும் அவரது வளர்ப்பு கலைமான் ஸ்வென் ஐ சந்திக்கிறார் , அவர்களின் உதவியுடன் எல்சா வை தேடும் பயணத்தில் ஆலாப் என்ற உயிருள்ள பனிமனிதனை சந்திக்கிறார் ,

இந்த நேரத்தில் அனா நேசித்த இளவரசன் சுயநலத்தால் எல்சா வை கொல்ல திட்டம் போடுகிறார் .

பனிக்கட்டிடம் அடையும்போது அனா எல்சா வை சந்தித்து திரும்ப சொல்லும்போது எல்சா தற்செயலாக அனாவை பனிசக்தியால் தாக்குகிறார் , இந்த நிலையில் சுயநலமான இளவரசனின் படைகளும் அங்கு வரும்போது எல்சாவுக்கும் படையினருக்கும் உருவாகும் மோதலுக்கு பின்னால் அங்கிருந்து தப்பிச்சென்ற அனா மற்றும் கிறிஸ்டோஃப் ட்ரால்ஸிடம் உதவி கேட்கும்போது ஒரு உண்மையான அன்பின் செயல் மட்டுமே எல்சாவின் பனிசக்தி தாக்குதலில் இருந்து அனாவை காப்பாற்ற முடியும் என்று தெரிந்துகொள்கின்றனர் .

எல்சாவை இளவரசன் சிறைபிடித்து சென்றதும் அனா ஒரு கட்டத்தில் இளவரசன் மோசமானவன் என தெரிந்துகொள்கிறார் . எல்சா சிறையில் இருந்து தப்பிச்செல்லும்போது இளவரசன் பனிப்புயலில் மாட்டிக்கொண்ட எல்சாவை கத்தியால் தாக்கும்போது அனா தடுக்கிறார் , ஆனால் பனிசக்தி அவளை பனிச்சிலையாக மாற்றிவிடுகிறது . எல்சா அனாவின் தியாகத்தை எண்ணி துயரத்தில் அழும்போது அது உண்மையான அன்பின் செயலாக இருப்பதால் அனா திரும்பவும் உயிர்பெறுகிறார் . கடைசியில் இளவரசன் சிறையில் அடைக்கப்படுகிறான் .பனிக்காலம் முடிவடைகிறது , பிரிந்திருந்த சகோதரிகள் சேர்ந்து வாழ்கின்றனர் .

தொழில்நுட்ப மேம்பாடு

[தொகு]

காட்சிகளில் பயன்படுத்தப்பபடும் தொழில்நுட்ப வரைகலைக்காக ஸ்டூடியோ பல புதிய கருவிகளை உருவாக்கியது, அவை யதார்த்தமான மற்றும் நம்பமுடியாத காட்சிகளை உருவாக்கின.[5] மேலே குறிப்பிட்டபடி, பல டிஸ்னி கலைஞர்களும் சிறப்புப் பணியாளர்களும் வியோமிங்கிற்கு ஆழமான பனி வழியாக நடந்து செல்வதற்குப் பயணம் செய்தனர்.பனியில் நடந்து செல்லும் காட்சிகளுக்காக வரைபடங்களை உருவாக்க அனுபவம் கிடைக்க டிஸ்னி ஸ்டூடியோ வரைகலை கலைஞர்கள் நிஜத்திலும் பனிப்பிரதேசத்தில் நடந்து சென்றனர் [6] கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஒரு பேராசிரியரான டாக்டர் கென்னத் லிபிரெச்ச்ட், பனி மற்றும் பனிக்கட்டி வடிவங்கள் மற்றும் ஸ்னோஃப்ளேக்ஸ் தனித்தன்மை வாய்ந்தவை என்பதைப் பற்றிய விளைவுகளை படத்தில் பனிக்கால காட்சிகளில் சேர்க்க குழுவுக்கு வழங்குவதற்காக அழைக்கப்பட்டார்.[6] இந்த அறிவைப் பயன்படுத்தி, விளைவுகள் குழு ஒரு ஸ்னோஃபிளேக் ஜெனரேட்டரை உருவாக்கியது, அவை படத்திற்காக 2,000 தனிப்பட்ட ஸ்னோஃபிளாக் வடிவங்களை தோராயமாக உருவாக்க அனுமதித்தன.[5]

வரவேற்பு

[தொகு]

வசூல்

[தொகு]

வட அமெரிக்காவில் 400 மில்லியன் டாலர்கள் மற்றும் உலக அளவில் மற்ற நாடுகளில் 800 மில்லியன் டாலர்கள் வசூலை இந்த திரைப்படம் ஈட்டியது [7][8][9][10][11] எல்லா செலவுகளையும் கணக்கிடுகையில் [12] 2013 ஆம் ஆண்டின் மிக உயர்ந்த வசூல் நிறைந்த படம் [13][14] , ஆக ப்ரோசன் திரைப்படம் இருந்தது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Frozen". Ontario Film Review Board. நவம்பர் 12, 2013. Archived from the original on சனவரி 16, 2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 15, 2014.
  2. Smith, Grady (நவம்பர் 27, 2013). "Box office preview: "Frozen" ready to storm the chart, but it won't beat "Catching Fire"". Entertainment Weekly இம் மூலத்தில் இருந்து நவம்பர் 28, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131128190249/http://insidemovies.ew.com/2013/11/27/box-office-preview-frozen-catching-fire/. பார்த்த நாள்: நவம்பர் 29, 2013. 
  3. 3.0 3.1 "Frozen (2013)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on ஆகத்து 12, 2014. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2014.
  4. "Disneyland Resort Debuts "World of Color – Winter Dreams," a Merry New Spectacular for 2013 Holiday Season". PR Newswire. ஜூலை 27, 2013 இம் மூலத்தில் இருந்து ஆகத்து 7, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130807092912/http://www.prnewswire.com/news-releases/disneyland-resort-debuts-world-of-color----winter-dreams-a-merry-new-spectacular-for-2013-holiday-season-216954411.html. பார்த்த நாள்: ஜூலை 27, 2013. "from the upcoming Walt Disney Pictures animated feature "Frozen"" 
  5. 5.0 5.1 . 
  6. 6.0 6.1 Emanuel Levy, "Frozen: Setting and Visual Look" பரணிடப்பட்டது 2014-02-24 at the வந்தவழி இயந்திரம், Emanuel Levy Cinema 24/7, திசம்பர் 26, 2013.
  7. "Frozen (2013) - International Box Office Results - Box Office Mojo".
  8. "Frozen (2013) - International Box Office Results - Box Office Mojo".
  9. "Frozen (2013) - International Box Office Results - Box Office Mojo".
  10. "Frozen (2013) - International Box Office Results - Box Office Mojo".
  11. "Frozen (2013) - International Box Office Results - Box Office Mojo".
  12. "2013 Most Valuable Blockbuster – #7 'Monsters University' Vs. #10 'Thor: The Dark World'; #2 'Frozen' Vs. #15 'The Great Gatsby'".
  13. "Box Office Milestone: 'Frozen' Becomes No. 1 Animated Film of All Time". http://www.hollywoodreporter.com/news/box-office-milestone-frozen-becomes-692156. 
  14. "GLOBAL: 'Captain America' Takes $75.2M Debut Ahead of North American Release; 'Noah' on the Verge of Hitting $100M; 'Frozen' is the Top Animated Film of All Time; 'Rio 2' Takes Record Breaking Brazilian Debut to Climb to $29.7M" இம் மூலத்தில் இருந்து 2014-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140402185057/http://www.boxoffice.com/latest-news/2014-03-30-global-captain-america-takes-752m-debut-ahead-of-north-american-release-noah-on-the-verge-of-hitting-100m-frozen-is-the-top-animated-film-of-all-time-rio-2-takes-record-breaking-brazilian-debut-to-climb-to-297m. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோசன்_(2013_திரைப்படம்)&oldid=3587656" இலிருந்து மீள்விக்கப்பட்டது