கோகோ (2017 திரைப்படம்)
கோகோ | |
---|---|
இயக்கம் | லீ அன்க்ரிச் |
தயாரிப்பு | டார்லா கே. ஆண்டர்சன் |
திரைக்கதை |
|
இசை | மைக்கேல் கெய்சினோ[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | |
படத்தொகுப்பு | |
கலையகம் |
|
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோசன் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 20, 2017(மோரிசியா) நவம்பர் 22, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 110 மில்லியன்[3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம்[4] |
ஆக்கச்செலவு | $175–200 மில்லியன்[5] [6] |
மொத்த வருவாய் | $161.8 மில்லியன்[7] |
கோகோ (Coco) என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க முப்பரிமாண இசையை அடிப்படையாகக் கொண்ட கற்பனை இயங்குபடத் திரைப்படம் ஆகும். இதை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் வெளியிட்டது. லீ அன்க்ரிச்சின் யோசனையின் அடிப்படையில், அன்கிரிச்சின் இயக்கம் மற்றும் அட்ரியன் மொலினாவின் இணை இயக்கத்தில் இப்படம் வெளி வந்தது. இந்த கதையானது, மிகெல் என்ற 12 வயது சிறுவன் தற்செயலாக இறந்தவர்களின் உலகுக்கு சென்று விடுகிறான், அங்கு அவரது மூதாதையும் இசைக்கலைஞருமான எர்னஸ்டோவைத் தேடுகிறான். பின் உலகுக்கு திரும்பினானா என்பதே கதை.
இந்த திரைப்படத்தின் கதையானது மெக்சிகோவில் கடைபிடிக்கும் இறந்தோர் நாளை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் கதை அன்கிரிச், மோலினா, ஜேசன் காட்ட்ஸ் மற்றும் ஆல்ட்ரிக் ஆகியோரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு திரைக்கதையானது, மொனினா மற்றும் மத்தேயு ஆல்ட்ரிக் ஆகியோரால் எழுதப்பட்டது. இப்படம் $175–200 மில்லியன் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.
கோகோ 2017 அக்டோபர் 20 அன்று மெக்சிகோவில் நடந்த மோரிசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெக்ஸிகோவில் அடுத்த வாரமே வெளியிடப்பட்டது, நாட்டில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இது அமெரிக்காவில் 2017 நவம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது, உலகளவில் $ 160 மில்லியன் வசூலித்துள்ளது. இப்படம் அனிமேஷன், குரல் தேர்வு, இசை, பாடல்கள், உணர்ச்சிபூர்வமான கதை, மெக்சிகன் கலாச்சாரத்துக்கு மரியாதை ஆகியவற்றால் விமர்சகர்களால் போற்றப்படுகிறது.
கதை[தொகு]
மிகெல் மெக்சிகோவில் வசித்துவரும் ஒரு சிறுவன். காலணிகள் தயாரிப்பது அவர்களது குடும்பத் தொழில். மிகெல்லுக்குப் பிரபல மெக்சிகன் இசையமைப்பாளரான எர்னஸ்டோவைப்போலவே பாடகராகவும் கிதார் இசைக் கலைஞராகவும் ஆகவேண்டுமென்று ஆசை. ஆனால் மிகெல்லின் குடும்பத்தினருக்கு இசை என்றால் பிடிக்காது. என்பதால், யாருக்கும் தெரியாமல் ஒரு கிதார் வாங்கி, பயிற்சி செய்துவருகிறான். இவனது உற்றத் தோழன் ’டான்டே’ என்ற நாய்.
மெக்சிகோவில் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் நாள் ஒன்று உண்டு. இதை இறந்தோர் நாள் (Day of the Dead) என்று அழைப்பார்கள். நமது உலகுக்கும் இறந்தவர்களின் உலகுக்கும் இடையே ஒரு பாலம் இருக்கிறது. முன்னோர்களின் தினத்தன்று அவர்களின் கல்லறையில் பூக்களை வைத்து அன்புடன் நினைவு கூர்ந்தால், அவர்கள் அந்தப் பாலத்தைக் கடந்து நம் உலகுக்கு வரமுடியும் என்பது மெகிசிகோ மக்களின் நம்பிக்கை. அப்படி ஒரு முன்னோர்களுக்கான தினத்தில் மிகெல்லின் பாட்டியின் பாட்டியான கோகோ வீட்டுக்குவருகிறார். அப்போது பழைய படத்தில் ஒருவரது தலை கிழிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான் மிகெல். அவர் அவனது தாத்தாவுக்கும் தாத்தா என்பதையும், அவர்தான் பிரபல இசைக்கலைஞர் எர்னஸ்டோ என்பதையும் கண்டுபிடிக்கிறான்.
அதே நேரத்தில், மிகெல்லின் கிதாரை அவனது குடும்பத்தினர் கண்டுபிடித்து, உடைத்துவிடுகிறார்கள். கோபத்துடன் வெளியேறும் மிகெல், எர்னஸ்டோவின் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறான். அங்கே ஒரு பாலத்தில் ஏறி, இறந்தவர்களின் உலகுக்குச் சென்றுவிடுகிறான். அவனுடனே வனது நாயான டான்டேவும் நுழைந்துவிடுகிறது. அங்கே, ஹெக்டார் என்பவரின் உதவியுடன் தனது மூதாதையரான எர்னஸ்டோவைத் தேடுகிறான். முன்னோர்களின் தினம் ஒரே ஒருநாள் மட்டும் கடைபிடிக்கப்படுவதால், விடிவதற்குள்ளாக அவன் மறுபடியும் பாலத்தைக் கடந்து, நமது உலகுக்கு வந்தாகவேண்டும். இல்லையென்றால் அந்த உலகிலேயே தங்கிவிட நேரும் என்பதால், மிகெல் விரைவாக செயல்படுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே மீதி கதை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Giardina, Carolyn; Kit, Borys (July 14, 2017). "New 'Incredibles 2', 'Toy Story 4' Details Revealed at D23". The Hollywood Reporter. July 14, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Coco Award Categories". disneystudiosawards.com. டிசம்பர் 2, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 10, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Coco". Morelia International Film Festival. October 22, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "COCO (2017)". British Board of Film Classification. November 21, 2017. டிசம்பர் 1, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 22, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ D'Alessandro, Anthony (November 26, 2017). "Thanksgiving B.O. At $268M, +3% Over 2016 Spurred By 'Coco' & Holdovers – Sunday Update". Deadline.com. November 26, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Box Office: 'Coco' Topping 'Justice League' With $70 Million Over Thanksgiving Weekend". Variety. November 23, 2017. November 23, 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Coco (2017)". பாக்சு ஆபிசு மோசோ. ஐ.எம்.டி.பி இணையத்தளம். November 29, 2017 அன்று பார்க்கப்பட்டது.