செரெக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரெக்
இயக்கம்
  • ஆன்ட்ரூ ஆடம்சன்
  • விக்கி ஜென்சன்
விநியோகம்ட்ரீம்வொர்க்ஸ் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 22, 2001 (2001-04-22)(மான் வில்லேஜ் திரையரங்கம்)
மே 18, 2001 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்1:30 மணி நேரம்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$60 மில்லியன் (429.1 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$484.4 மில்லியன் (3,464.2 கோடி)[1]

செரெக் (Shrek) என்பது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த கணினி மூலம் தயாரிக்கப்பட்ட அமெரிக்க நகைச்சுவைை இயங்குபடம் ஆகும். இது 1990 ஆம் ஆண்டு வில்லியம் ஸ்டெயிக் எழுதிய கற்பனை தேவதை கதை படப் புத்தகமான செரெக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர்களான ஆன்ட்ரூ ஆடம்சன் மற்றும் விக்கி ஜென்சன் ஆகியோர் இயக்கினர். இந்த திரைப்படத்தில் மைக் மையர்ஸ், எடி மர்பி, கேமரூன் டயஸ் மற்றும் ஜான் லித்கோ ஆகியோர் முதன்மைை கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தனர். இந்தக்கதையில் செரெக் (மையர்ஸ்) என்று அழைக்கப்பட்ட ஒரு ஓகர் தனது சதுப்பு நிலமானது மன்னனாக ஆசைப்படும் ஊழல்வாதி பிரபு பர்குவாத்தால் (லித்கோ) துரத்தப்பட்ட விசித்திர கதாபாத்திர உயிரினங்களால் ஆக்கிரமிக்கப்படுவதை காண்கிறது. பர்குவாத் திருமணம் செய்ய ஆசைப்படும் இளவரசி பியோனாவை (டயஸ்) காப்பாற்றிக் கொண்டு வருவதன் மூலம் தன்னுடைய சதுப்பு நிலத்தை திரும்பப்பெறும் ஒரு ஒப்பந்தத்தை பர்குவாத்துடன் செரெக் ஏற்படுத்திக் கொள்கிறது. ஒரு கழுதையின் உதவியுடன் செரெக் தனது பயணத்தை தொடங்குகிறது. ஆனால் செரெக்கின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு ரகசியத்தை கொண்டுள்ள இளவரசியுடன் செரெக் சீக்கிரமே காதல் கொள்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Shrek". Box Office Mojo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரெக்&oldid=3211589" இலிருந்து மீள்விக்கப்பட்டது