வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
வகை | துணை |
---|---|
நிறுவுகை | அக்டோபர் 16, 1923 |
தலைமையகம் | பர்பேங்க், கலிபோர்னியா 500 தெற்கு பியூனா விஸ்டா தெரு |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | சீன் பெய்லி (தலைவர், தயாரிப்பு) வனேசா மோரிசன் (தலைவர், ஸ்ட்ரீமிங்) |
தொழில்துறை | திரைப்படத்துறை |
தாய் நிறுவனம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் |
வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் என்பது வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான அமெரிக்க நாட்டு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் மற்றும் த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமாகும்.[1] இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவன பிரிவின் கீழ் நேரடி திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு முக்கிய நிறுவனம் ஆகும். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் அமைந்துள்ளது. இது 1983 ஆம் ஆண்டில் அதன் தற்போதைய பெயரைப் பெற்றது. வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் பிக்ஸர் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் திரைப்படங்களை இந்த நிறுவனத்தின் கீழ் விநியோகம் செய்கின்றது.
இந்த நிறுவனத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு தி லயன் கிங் என்ற திரைப்படத்தை மறு ஆக்கம் செய்து உலகளவில் 6 1.6 பில்லியனுடன் அதிக வசூல் செய்த படமாகும்.[2] மற்றும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற திரைப்படம் மிகவும் முக்கிய திரைப்படமாகும். இதன் தொடர்சிகள் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வெளியாகி உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 1 பில்லியன் டாலர் சம்பாதித்ததுஉள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Walker, RV (March 28, 2015). "The Disney Logo: A Brief History of its Evolution and Variations". Nerdist Industries. http://nerdist.com/the-disney-logo-a-brief-history-of-its-evolution-and-variations/. பார்த்த நாள்: October 16, 2015.
- ↑ Mendelson, Scott (August 11, 2019). "'The Lion King' Just Broke A Disney Box Office Record, But It's Not Exactly Clear Which One". Forbes. https://www.forbes.com/sites/scottmendelson/2019/08/11/lion-king-frozen-beauty-and-the-beast-disney-star-wars-avengers-marvel-harry-potter-black-panther-jurassic-box-office/#23033179196e.