உள்ளடக்கத்துக்குச் செல்

பிரயோபைற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாக்கந்தியா-ஒரு ஈரலுருத் தாவரம்

பிரயோபைட்டா (bryophyte) தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால்(Non-vascular plant)[1] சூழப்பட்டும் இருக்கும். பிரயோபைற்றுக்கள் பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் வித்திகள் (Spores) எனப்படும்.

எ.கா: மாக்கந்தியா, Riccia, Pogonatum

பிரயோபைட்டா மூன்று வகைப்படும். அவை ஈரலுருத் தாவரம், கொம்புருத் தாவரம், பாசித் தாவரம் என்பனவாகும்.

வகைப்படுத்தல்

[தொகு]
மொஸ்-பாசித் தாவரங்கள்.
கொம்புருத் தாவரங்கள்.

கலனிழையத்தைக் கொண்டிராத நிலத்தாவரங்கள் அனைத்தும் பிரியோபைற்றுக்களென பாகுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் இப்பாகுபாடு ஓரளவுக்கு செயற்கையானதாகும். இப்பாகுபாட்டுக்குள் மூன்று கணங்கள் உள்ளன. ஈரலுருத் தாவரங்கள் ( Marchantiophyta), கொம்புருத் தாவரங்கள் (Anthocerotophyta) மற்றும் பாசி (Bryophyta) என்பனவாகும்.

எம்பிரியோபைற்றுக்கள்

ஈரலுருத் தாவரங்கள் 




பாசித் தாவரங்கள் 




கொம்புருத் தாவரங்கள் 



கலனிழையத் தாவரங்கள்




பிரயோபைற்றுக்கள்

பிரையோபைற்றுக்களின் வகைப்பாட்டில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. சில ஆராய்ச்சி முடிவுகள் மேற்படி வகைப்பாடை ஆதரித்தாலும், சில இதற்கு முரண்பாடான முடிவுகளைத் தருகின்றன. பாசித்தாவரங்களான மொஸ்களில் வேறு வகையான கடத்தும் இழையங்கள் விருத்தியடைந்திருந்தாலும், அவற்றின் கட்டமைப்பு வேறுபட்டிருப்பதாலும், அக்கலனிழையத்தில் லிக்னின் காணப்படாடதாலும், அவை கலனிழையத்தாவரங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதில்லை.

இன அழிவுக்கு உட்பட்ட சில இனங்களையும் வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மேற்படி வகைப்பாடு மேலும் சிக்கலான வடிவை அடையும். இவ்வகைப்பாட்டின் படி ஈரலுருத் தாவரங்களே மிகப் பழைமையான நிலத்தாவரங்களாகும். இவ்வகைப்பாட்டில் கோர்னியோடைட்டுக்கள் எனப்படும் அழிவடைந்த இனம் கொம்புருத்தாவரங்களுக்கும் கலனிழையத் தாவரங்களுக்கும் இடையே உள்ளன. பிரையோபைற்றுக்களைப் போல கோர்னியோபைட்டுக்களிலும் உண்மையான கலனிழையம் இல்லாவிட்டாலும், சில பண்புகளால் அவை கலனிழையத் தாவரங்களைப் போலுள்ளன.

நிலத் தாவரங்கள்

ஈரலுருத் தாவரங்கள்

மொஸ்கள்

கொம்புருத்தாவரம்

பொலிஸ்போரொன்கியோபைற்றுக்கள்

"புரோடிரக்கியோபைட்டு", உ-ம்: கோர்னியோபைற்று

கலனிழையத் தாவரங்கள்

பிரையோபைற்றுக்களின் வாழ்க்கை வட்டம்

[தொகு]

ஏனைய நிலத்தாவரங்களைப் போலவே பிரையோபைற்றுக்களும் சந்ததிப் பரிவிருத்தியைக் காண்பிக்கின்றன. கலங்களில் அரைவாசி நிறமூர்த்தங்களைக் (ஹப்லொய்ட்) கொண்ட புணரித்தாவரத்திலிருந்து முழுமையான நிறமூர்த்தங்களைக் கொண்ட (டிப்லொய்ட்) வித்தித்தாவரம் உருவாவதே இச்சந்ததிப் பருவிருத்தியின் அடிப்படையாகும். புணரித்தாவரம் விந்துக்களையும், முட்டைக் கலங்களையும் உருவாக்கும். இவை ஒன்றிணைந்து வித்தித் தாவரத்தை உருவாக்குகின்றது. வித்தித்தாவரம் வளர்ச்சியடைந்து வித்திகளை உருவாக்கும். வித்திகள் பின்னர் புணரித்தாவரங்களாக மாறுகின்றன. பிரையோபைற்றுக்களில் புணரித்தாவரமே ஆட்சியுடையதாகும். இதுவே தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் பெரும் பகுதியை ஆக்கின்றது. பிரையோபைற்றுக்கள் இனம்பெருக நீர் அவசியமாகும். இதனாலேயே இவை ஈரலிப்பான பிரதேசங்களில் வளர்கின்றன (விதிவிலக்குகள் உண்டு).

ஒப்பீடு

[தொகு]

புணரித்தாவரங்களின் ஒப்பீடு

[தொகு]
ஈரலுருத் தாவரங்கள் மொஸ்கள் (பாசி) கொம்புருத் தாவரங்கள்
கட்டமைப்பலகு பிரிவிலி உடல் அல்லது போலி இலைகள் போலி இலை வடிவம் பிரிவிலி உடல்
சமச்சீர்த்தன்மை இருபக்க அல்லது ஆரைச் சமச்சீர் ஆரைச் சமச்சீர் இருபக்கச் சமச்சீர்
ரைசொய்ட்டுக்கள் (வேர்ப்போலிகள்) ஒற்றைக்கலங்களாலானவை பலகலங்களாலானவை ஒற்றைக்கலங்களாலானவை
ஒரு கலத்திலுள்ள பச்சையுருமணிகளின் எண்ணிக்கை பல பல ஒன்று
முளைத்தலின் பின் வரும் இழை போன்ற கலங்கள் சிறியது காணப்படும் காணப்படாது
புணரிகளை உருவாக்கும் பகுதி வெளிப்படையாக இருக்கும் வெளிப்படையாக இருக்கும் மறைக்கப்பட்டிருக்கும்

வித்தித்தாவரத்தின் ஒப்பீடு

[தொகு]
ஈரலுருத் தாவரம் மொஸ் கொம்புருத்தாவரம்
கட்டமைப்பு சிறியது, பச்சையம் இல்லை பெரியது, பச்சையம் காணப்படும் பெரியது, பச்சையம் காணப்படும்
வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது மட்டுப்படுத்தப்பட்டது தொடர்ச்சியானது
போலித் தண்டுப்பகுதி இருக்கும் இருக்கும் காணப்படாது
வித்தகக் கட்டமைப்பு எளிமையானது சிக்கலானது Alongated
வித்திகளின் விருத்தி உடன் நிகழ்வது உடன் நிகழ்வது படிப்படியானது
வித்திகள் பரம்பலடையும் விதம் Elater Peristome teeth Pseudo-elaters
Columella இல்லை உள்ளது உள்ளது
வித்திகளை வெளியேற்றும் பகுதி கிடையானது அல்லது ஒழுங்கற்றது நெட்டாங்கானது கிடையானது
இலைவாய் இல்லை உள்ளது உள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Reviews glossary". பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயோபைற்று&oldid=3841085" இலிருந்து மீள்விக்கப்பட்டது