உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 5

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிழ்ச்சி

[தொகு]

தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள் முதலிய பல்வேறு இடங்களில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முறையான அறிமுகத்தை அளித்து வருவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் பணி--இரவி (பேச்சு) 06:55, 4 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:20, 4 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தங்களின் செயலறிந்து மகிழ்கிறேன். இதன்மூலம், அரசு நிறுவனங்கள் முறையான தமிழைப் பயன்படுத்துவார்கள் எனவும், புதியவர்களின் வருகையால் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் பிற தமிழ் சார்ந்த திட்டங்களும் வளரும் என உறுதியாக நம்பலாம். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:57, 4 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி தமிழ்க்குரிசில்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:07, 4 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

அண்மையில் மதுரையில் உள்ள பேருந்து நிலையங்களைப் பற்றிய கட்டுரைகளைச் செப்பம் செய்தமைக்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 03:39, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி, சுந்தர். மதுரையிலுள்ள கோ.புதூர், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் போன்ற பிற பேருந்து நிலையங்கள் குறித்து நேரம் கிடைக்கும் போது தாங்கள் எழுதலாமே.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:42, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
என் உள்மன விருப்பப் பட்டியிலில் இணைத்துக் கொண்டுள்ளேன் தேனியாரே. ;) -- சுந்தர் \பேச்சு 03:50, 8 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் மாநாடு

[தொகு]

டிசம்பர் 15 அன்று சென்னையில் கணினித் தமிழ் மாநாடு நடைபெறவுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அறிஞர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடா? அரங்கிலே பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் உள்ள மாநாடா? இரண்டாம் வகையாயிருந்தால், என் போன்ற கணிப்பொறியியல் மாணவர்களும் கலந்து கொள்ள இயலும். நான் வீட்ல சும்மா தான் இருக்கேன். ;-)கலந்துகொண்டால் பயனுள்ள வகையில் இருக்கும். கற்பேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு)

நன்றி

[தொகு]

இனிய இணையதள நண்பருக்கு நன்றியுடன் கலந்த வணக்கங்கள்! --Premloganathan (பேச்சு) 07:08, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:55, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி

[தொகு]

வணக்கம் தேனியாரே!, நேற்று ஒரு பழைய வலைப்பதிவைப் படித்தேன். அதில், குறைந்த கட்டுரைகளைக் கொண்டிருந்த தமிழ் விக்கிப்பீடியாவின் பழைய நிலை பற்றி வருந்தி எழுதியிருந்தார் ஆசிரியர். அவரும் தமிழ் விக்கிப்பீடியரே! இன்றைய சூழலில், இணையத்தில் ஆவணப்படுத்தினால் பிறரும் நம்மை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றும் த.விக்கி பரவ வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில், தேனி மாவட்டம் தொடர்பான பல செய்திகளை நாள்தோறும் சேர்த்ததன்மூலம், தமிழ் விக்கியை தேனி மாவட்டத்திலும், தேனி மாவட்டத்தை தமிழ் விக்கியிலும் பிரபலபடுத்தி, கலைக்களஞ்சியத்தை வளப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் தஞ்சை மாவட்ட செய்திகளை சேர்க்க இருக்கிறேன். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:08, 26 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசில், நன்றி. தாங்கள் குறிப்பிடுவது உண்மைதான். நான் தேனி மாவட்டத்தில் இருப்பதால், இம்மாவட்டம் குறித்த தகவல்களை அதிக அளவில் சேர்க்க முடிகிறது. தமிழ் விக்கிப்பீடியர்கள், பிற கட்டுரைகளுடன், அவர்களது மாவட்ட அளவிலான தகவல்களையும் சேர்த்தால் கூடுதல் கட்டுரைகள் கிடைக்கிறதோ இல்லையோ, அம்மாவட்டம் குறித்த பல்வேறு தகவல்கள் பார்வையிடுபவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் கிடைக்கக் கூடும் என்கிற எண்ணமும் ஏற்படக் கூடும். தாங்களும், தங்களது பிற கட்டுரைகளுடன் தஞ்சை மாவட்டம் குறித்த பல தகவல்களையும் சேர்த்து உதவுங்கள்...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:46, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஐயா வணக்கம்.இன்று (இப்போது) தொழிற்சாலைகள் சட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டு இருந்தேன்.இடையிலேயே நீக்கிவிட்டீர்களே ஐயா! நியாயம்தானா?--MUTTUVANCHERI NATARAJAN (பேச்சு) 17:10, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

MUTTUVANCHERI NATARAJAN,தொழிற்சாலைகள் சட்டம் கட்டுரை முழுமையடையாமல், கேள்விகளாக அமைக்கப்பட்டதால் ஏதோ தெரியாமல் உருவாக்கப்படுவதாக நினைத்து நீக்கப்பட்டது. தாங்கள் கட்டுரை முழுமையடையாமல் சேமிக்கும் நிலையில் கட்டுரையில் தொகுப்புப் பணி நடைபெறுகிறது என்பதை அறிவிக்கும் வார்ப்புருவை இட்டிருக்கலாம். {{ }} இந்த அடைப்புக்குறிக்குள் underconstruction என்று தட்டச்சு செய்து விட்டால் நீக்கத்தைத் தவிர்த்திருக்கலாம். தாங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரையை இந்தியத் தொழிற்சாலைகள் சட்டம் 1948 எனும் தலைப்பில் தொடங்குங்கள்... நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:24, 3 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை

[தொகு]





50,000 மாவது கட்டுரை

[தொகு]
தாங்கள் எழுதிய கட்டுரை 50,000 இலக்கை தொட்டது குறித்து மகிழ்ச்சி வாழ்த்துக்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 05:33, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 06:07, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்

[தொகு]
சிறப்புப் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவின் 50,000' ஆவது கட்டுரையை எழுதியமைக்கும் சேர்த்துத்தான் இந்தப் பதக்கம்!

என்றென்றும் அன்புடன் -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:22, 21 திசம்பர் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

நன்றி மா. செல்வசிவகுருநாதன்...!

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

[தொகு]

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:21, 26 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

[தொகு]
  • உங்களின் தீபாவளி வாழ்த்துகளுக்கு (மிகவும்) தாமதமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்!
நன்றி, செல்வசிவகுருநாதன். வார்ப்புருக்களின் பட்டியலுக்கு இப்பக்கத்தைப் பார்வையிடலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் இடம் பெற்றிருக்கும் அனைத்து வார்ப்புருக்களுக்கும் தனியான பகுப்பு இல்லை என்றே நினைக்கிறேன். பயனர்களால் உருவாக்கப்பட்ட பல வார்ப்புருக்கள் தொடர்புடைய கட்டுரைகளின் பகுப்பில் மட்டுமே கிடைக்கின்றன.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:13, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]
பகுப்பு:வார்ப்புருக்கள் இதில் பெரும்பாலான வார்ப்புருக்கள் இணைக்கப்பட்டிருக்கும், இதில் அனைத்து வார்ப்புருக்களையும் பார்க்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 03:42, 1 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

[தொகு]

மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:20, 12 சனவரி 2013 (UTC)

நன்றி

[தொகு]
நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:23, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆப்பனாட்டு மறவர்

[தொகு]

தேனியாரே, நீங்கள் ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர் கட்டுரையில் அவர்கள் மாமன் மகளை மணப்பதில்லை எனக் கூறியிருந்தீர்களே. பூலித்தேவன் ஆப்பனாட்டு மறவர் வழி வந்தவர் தானே. அவர் தன் மாமன் மகள் கயல்கன்னியை தானே மணந்தார். நீங்கள் அங்கு கொடுத்தது சரியான தகவல் தானா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:06, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தென்காசியாரே, நான் ஆப்பனாடு கொண்டையங்கோட்டை மறவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல் சரியானது. தங்கள் புரிதலில்தான் தவறுள்ளது. கட்டுரையில் அந்த சாதியினரிடம் அக்காள் மகளை மணக்கும் வழக்கம் இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மாமன் மகளை மணப்பது இல்லை என்றும் கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை. மாமன் மகளை மணந்து கொள்ளும் வழக்கம் அனைத்து சாதியினருக்கும் பொதுவானதுதான்.

1. இல்லத்துப் பிள்ளைமார், ஆப்பனாடு கொண்டயங்கோட்டை மறவர், நன்குடி வேளாளர் போன்ற சமூகத்தினர் தாய் வழி உறவு முறையைக் கொண்டுள்ளனர். இந்த சாதியினரில் அதாவது ஆண் ---> பெண் இருவருக்கும் பிறக்கும் குழந்தை பெண்ணின் வழித்தோன்றலாக இருக்கிறது. இதனால் பெண்ணின் உடன் பிறந்தவர் (தாய்மாமன்) குழந்தையும் ஒரே குழுவினராகி விடுகின்றனர். எனவே இவர்கள் தாய்மாமனை மணந்து கொள்ளும் வழக்கமில்லை. ஆனால் தாய்மாமன் மகளை மணக்கலாம். ஏனெனில் தாய்மாமனின் மகள் இச்சாதியின் வழக்கத்திலுள்ள பெண் வழித்தோன்றல்படி அத்தையின் குழுவில் ஒருவராக இருக்கிறார்.

2. பிற சாதியினரில் ஆண் ---> பெண் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆணின் வழித் தோன்றலாக இருக்கிறது. இதனால் தாய்மாமன் எதிர்குழுவினராக இருக்கிறார். இதனால் தாய்மாமனை மணந்து கொள்ளும் வழக்கம் உள்ளது. இவர்களும் தாய்மாமன் மகளை மணக்கலாம். ஏனெனில் தாய்மாமனின் மகள் இச்சாதியின் வழக்கத்திலுள்ள ஆண் வழித்தோன்றல்படி மாமன் குழுவில் ஒருவராக இருக்கிறார்.

முந்தைய காலத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லாத நிலையில் அதிகக் குழந்தைகள் இருக்கின்ற போது, அக்காள், தம்பி இருவருக்குமான வயது வித்தியாசம் அதிகமிருந்த நிலையில், சொந்தம் (சொத்துக்கள்) விட்டுப் போய்விடக் கூடாது எனும் அடிப்படையில் அக்காள் மகளை மணமுடிக்கும் வழக்கம் வந்திருக்கும். இந்த அக்காள் மகளை மணக்கும் வழக்கம் இன்னும் சிறிது காலத்தில் இல்லாமல் போய்விடும். தற்போது வீட்டுக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் நிலையில் அக்காள் மகள் என்ற நிலை காணாமல் போய்விடும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:03, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஆப்பனாட்டு மறவர் என்ரவுடன் புலித்தேவன் நினைவில் வந்தார். நீங்கள் எழுதியது குழம்பிவிட்டது. :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:51, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாரணம் ஆயிரம்

[தொகு]

//ஆயிரம் (1000) என்கிற எண்ணிக்கையை இன்றுதான் கடந்துள்ளது//

ஆனால் அந்த கட்டுரைகளில் நான் பார்த்த அளவு நிரைய கட்டுரைகள் தகவல் செறிவுள்ளவை. அதனால் அவை யானை போன்றவை.

சுப்பிரமணி, ஊடகங்கள், பட்டறைகள் என்று பல்வேறு வகையிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மிகச் சிறப்பாக பங்காற்றி வருகிறீர்கள். எனது உளமார்ந்த வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 16:57, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் தேனியாரே. --குறும்பன் (பேச்சு) 19:54, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:03, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தேனி சுப்பிரமணியம், இன்றளவில் 1000 கட்டுரைகளை தமிழ் விக்கியில் உருவாக்கி பேராக்கம் தத்துள்ளமையை ஒட்டி தங்களுக்கு ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்க உங்கள் நற்பணி! அன்புடன்--Kanags \உரையாடுக 22:04, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்!! வளர்க உங்கள் நற்பணி! --ஸ்ரீதர் (பேச்சு) 23:26, 16 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  • உங்களது பல கட்டுரைகள் அன்றாட வாழ்வியலுக்கு மிகப் பயனுடையவாகத் திகழ்ந்தன. தற்போது ஒரே நாளில் விருதுபெற்ற பல தமிழ் இலக்கியவாதிகளைக் குறித்த கட்டுரைகள் பிரமிப்பூட்டுகின்றன. விக்கிப் பரப்புரையிலும் முன்னணியில் நிற்கிறீர்கள். விக்கிக்கும் அரசுக்கும் ஓர் பாலமாக விளங்குகிறீர்கள். விக்கி சமூகத்திலும் அமைதியாக பங்கெடுத்து வருகிறீர்கள். உங்கள் சிறந்தப் பணி தொடர இந்த மைல்கல் ஒரு தூண்டலாக இருக்கட்டும். எனது உளமார்ந்த வாழ்த்துகள் !! வளர்க நும்தம் சீரியப் பணி !!--மணியன் (பேச்சு) 08:02, 17 சனவரி 2013 (UTC)[பதிலளி]
  • 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:20, 19 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் தெரிவித்த தென்காசி சுப்பிரமணியன், இரவி, குறும்பன், சஞ்சீவி சிவகுமார், Kanags, செல்வா, ஸ்ரீதர், மணியன், மதனாஹரன் ஆகியோர்க்கு என் இதயப்பூர்வமான நன்றி... நன்றி! --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:55, 18 சனவரி 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் தெரிவித்த தமிழ்க்குரிசில், கலை ஆகியோர்க்கு என் இதயப்பூர்வமான நன்றி... நன்றி!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:30, 7 மார்ச் 2013 (UTC)

புதுப்பயனர் மறுமொழி

[தொகு]

(தனிப்பக்கமாய உருவாக்கியிருந்தார்) முதல் நாள் பள்ளிக்குள் வந்த சின்னஞ்சிறு மகவாய் தயக்கமும் பயமும் மட்டறுத்து பழகிக் கொள்ள விழைகிறேன். கற்ற தமிழையும் உற்ற தோழமைகளையும் துணையாய் கொண்டு. வெகு விரைவில் எனது படைப்பாக்கங்களை சமர்ப்பிக்கிறேன். நன்றி.--Nilaamaghal (பேச்சு) 16:42, 22 சனவரி 2013 (UTC)நிலாமகள்.[பதிலளி]


இன்றைய உதவிக்குறிப்பு

[தொகு]

வணக்கம் தேனியாரே! விக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு பக்கம் நீண்ட நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருப்பதாகத் தோன்றுகிறது... இற்றைப்படுத்தி உதவவும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:35, 24 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை நீக்கல்

[தொகு]

தேனியார், அண்மையில் புல்மோடை என்னும் கட்டுரையை நீக்கியிருக்கிறீர்கள். விக்கி நடையில் அல்லது விக்கி முறையில் எழுதப்படவில்லை என்பதே அதன் குறையாக இருந்தது. ஏன் அது நீக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் முழுமையான ஒரு கட்டுரைக்கான தகவல்கள் அனைத்தும் அதில் இருந்தன. கட்டுரை ஓரளவு குழம்பிப் போயிருந்ததால் அதனை நீங்கள் நீக்கியிருக்கக்கூடும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 01:09, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

உண்மைதான். கட்டுரை சற்று குழப்பமாகவே இருந்தது. மேலும் கட்டுரையின் இடையில் //. tlf;Nf Nfhfpsha; thtpAk; mike;Js;sJ ,r;rpwpa fpuhkj;jpy; 15000f;Fk; mjpfkhd kf;fs; tho;fpd;wdu; ,g;gpuNjr kf;fs; kPd; gpb kw;Wk; tptrhak; Nghd;w njhopy;ffis gpujhdkhf nfhz;Ls;sdu; // என்றும் இடம் பெற்றிருந்தது. இதனால் இக்கட்டுரையை சோதனை முயற்சியாக இருக்கும் என்கிற எண்ணத்தில் நீக்கிவிட்டேன். தற்போது அக்கட்டுரையைத் தாங்கள் மீட்டமைத்து சிறப்பானதாக்கி விட்டீர்கள். நன்றி. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:31, 28 சனவரி 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

[தொகு]

நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:45, 31 சனவரி 2013 (UTC)[பதிலளி]

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

[தொகு]

வணக்கம், Theni.M.Subramani/தொகுப்பு 5!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:15, 2 பெப்ரவரி 2013 (UTC)

உரையாடல்களைச் சிறு தொகுப்புகளாக குறிக்க வேண்டாம்

[தொகு]

சுப்பிரமணி, அண்மைய மாற்றங்களில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பலரும் சிறு தொகுப்புகளை மறைத்துப்பார்ப்பர். இதன் காரணமாக, உங்களுடனான சில முக்கிய உரையாடல்களை அண்மைய மாற்றங்களில் தவற விட்டு விட்டேன். நேரடியாக அந்தப்பக்கத்துக்குப் போய் பார்த்தால் தான் உங்கள் மறுமொழி வந்திருப்பது தெரிகிறது. எனவே, உரையாடல்களையும் பெரிய தொகுப்புகளையும் சிறு தொகுப்புகள் என குறிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:11, 8 பெப்ரவரி 2013 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை

[தொகு]

வணக்கம், சுப்பிரமணி. பல்வேறு அரசு அமைப்புகள் அறிமுகம் உள்ளவர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்பதை அறிந்திருப்பீர்கள். இது குறித்து ஏற்கனவே மின்மடலிலும் நிறைய உரையாடியுள்ளோம். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:16, 25 பெப்ரவரி 2013 (UTC)

பேரன்புடையீர், 1000 கட்டுரைகளுக்கும் மேலாக பங்களித்து தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு பெரும் பணிசெய்துள்ள நீவிர் வாழ்க.வளர்க நும் பணி. நான் விக்கியில் நான் பணியாற்றிய துறைபற்றிய சில சொற்களை விளக்கி எழுதியிருக்கிறேன்.என்னால் கோட்டுப் படங்களை இணைக்கத் தெரியவில்லை.இதனால் இப்பணி தடைபடுகிறது. அருள்கூர்ந்து உதவமுடியுமா? என்னைப் பற்றிய தகவல் களைத் தர இயலவில்லை. பயனர் தகவல் பொத்தானை அமுக்கியதும் திரையில் எதுவும் நிற்கவில்லை. அன்புடன், அருண்தாணுமாலயன்

வணக்கம். விக்கிப்பீடியாவின் இடது பகுதியிலுள்ள கருவிப்பெட்டியின் கீழுள்ள கோப்பைப் பதிவேற்று என்பதைப் பயன்படுத்தி தங்கள் படத்தை முதலில் பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு

[[படிமம்:கோப்பின் பெயர்|thumb|right| படக்குறிப்பு]]

என்று குறிப்பிட்ட கட்டுரையில் தேவையான இடத்தில் பயன்படுத்துங்கள்.

பகுப்புகளை நீக்குவதற்கான காரணம் என்ன

[தொகு]

இந்தியத் தமிழ் நூல்கள் என்ற பகுப்பை பல கட்டுரைகளில் இருந்து நீக்கி உள்ளீர்கள். காரணம் என்ன? ஒரு நூலில் மொழி, வெளியிடப்பட்ட ஆண்டு, இடம், துறை ஆகியவை அடிப்படைப் பகுப்புகளாக இருப்பது மிகவும் பொருத்தம். எனவே நீக்கியவற்றை தயந்து மீண்டும் சேர்க்கவும். நன்றி.

--Natkeeran (பேச்சு) 18:04, 10 மார்ச் 2013 (UTC)

ஒன்றிரண்டு நூல்களில் மட்டுமே இந்தியத் தமிழ் நூல்கள் பகுப்பு இருந்ததால் அவை நீக்கப்பட்டன. நான் தற்போது செய்து வரும் பகுப்புப் பணிகள் முடிவ்டைந்த பின்பு, அனைத்து இந்தியப் பதிப்பு நூல்களிலும் இந்தியத் தமிழ் நூல்கள் பகுப்பு சேர்க்கப்பட்டு விடும். நன்றி--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:34, 11 மார்ச் 2013 (UTC)

தமிழ் நூல்கள் மறுபதிப்பு

[தொகு]

நான் தொடங்கிய சில தமிழ் நூல்களின் கட்டுரைகளிலுள்ள நூல்கள் மறுபதிப்பின் வருடமே அதுவாகும். உதாரணம் களப்பிரர் பற்றிய நூல் முதலில் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டு விட்டன. ஆனால் அதை நாட்டுடைமை ஆக்கியதால் வேறு அச்சகங்கள் முதற்பதிப்பு என்று கொடுத்து மறுபதிப்பையே செய்கிறது. அத்னால் நூல்கள் விசயத்தில் முதற்பதிப்பு எதுவென கண்டறியும் வரை அதை பகுப்பினுள் இட வேண்டாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 11 மார்ச் 2013 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். மு.கோபி சரபோஜி கட்டுரையில் தகவற்பெட்டியில் அவரது படிமமும் அவரைப் பற்றிய பிற தகவல்களும் முடிந்தால் சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (வெளி இணைப்புகளில் ஒன்றாக முத்துக்கமலம் இதழில் அவர் குறித்து வெளியான பக்கம் இணைத்துள்ளேன்.)--Booradleyp (பேச்சு) 11:15, 18 மார்ச் 2013 (UTC)

படிமம் இணைத்தமைக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 04:04, 30 மார்ச் 2013 (UTC)

சந்தோஷம், நன்றிகள் பல

[தொகு]

திரு கொளஞ்சியப்பர் அரசினர் கலைக் கல்லூரி கட்டுரையில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திரு கி. தனவேல் பற்றிய குறிப்பை சேர்ந்திருந்ததைப் பார்த்தேன். மிகவும் சந்தோஷம் நன்றிகள் பல. அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 17:31, 20 மார்ச் 2013 (UTC)