விக்கிப்பீடியா பேச்சு:பிற நிறுவனங்களுடனான உறவாட்டம் குறித்த கொள்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் அக்கறை உடைய நிறுவனங்கள் அவ்வப்போது நம்மை அணுகி வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, அரசு அலுவலர்கள், விக்கிமீடியா இந்தியா போன்ற அமைப்பினர். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு தாங்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்று அவர்கள் வினவும் போது நம்மிடம் முறையான பதில் இல்லை. தவிர, இது போன்ற உரையாடல்கள் ஒரு சில பயனர்கள் மூலமாகவோ விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள களங்களிலோ நிகழும் போது முழுமையான, வெளிப்படையாக உரையாடி விக்கிப்பீடியா சமூகத்தின் ஒப்புதல் பெற்ற திட்டங்களை முன் வைக்க முடியவில்லை.

இச்சிக்கலை எதிர்கொள்ளும் பொருட்டு இந்த கொள்கை உரையாடல் பக்கம் தொடங்கப்படுகிறது. கவனம் சிதறாது இருக்கும் பொருட்டு இரண்டு அமைப்புகளை முன்னிறுத்தி உங்கள் பரிந்துரைகளை முன்வையுங்கள். 1) அரசு (இது தமிழக அரசாகவோ இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தேசிய அரசாகவோ இருக்கலாம்) 2) விக்கிமீடியா அமைப்பினர் (இது உலகளாவிய விக்கிமீடியா அறக்கட்டளையாகவோ இந்திய விக்கிமீடியர் சமூகத்தின் கிளையாகவோ இருக்கலாம்)

  • ஒருவர் எத்தனை பரிந்துரைகளை வேண்டுமானாலும் முன் வைக்கலாம்.
  • ஒரே பரிந்துரையை மீண்டும் மீண்டும் வைக்க வேண்டாம். பரிந்துரைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இடலாம். மாறுதல் தேவையெனில், கூடவே கருத்தையும் இடலாம். எதிர்ப்பு இருந்தாலும் கையெழுத்திட்டுத் தெரிவிக்கலாம்.
  • பொத்தாம் பொதுவான பரிந்துரைகளாக இல்லாமல், இலகுவாக திட்டமாக வரையறுத்துச் செயற்படக்கூடியவையாக இருப்பது நன்று. கூடுதல் ஆதரவு பெறும் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து கொள்கைப் பக்கத்தில் அறிவிப்போம். வருங்காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் நம்மை அணுகும் போது இக்கொள்கைப் பக்கத்துக்கான இணைப்பு மட்டுமே பகிரப்படும்.

தமிழ்நாட்டு அரசுக்கு முன் வைக்கும் பரிந்துரைகள்[தொகு]

அனைத்து பரிந்துரைகளுக்கும் பொதுவான கருத்துகள்[தொகு]

  • கீழே தந்துள்ள அனைத்து பரிந்துரைகளுமே எனக்கு உகப்புதான். பரிந்துரைகளை அரசின்முன் வைக்கும்போது மூன்று பரிந்துரைகளை முதலிலும், பிறவற்றைப் பிந்தியும் தரலாமோ எனத் தோன்றுகிறது. பெறக்கூடிய விளைவு, செயல்படுத்துவதில் எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் வரிசையாகத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 14:02, 20 பெப்ரவரி 2013 (UTC)
  • சுந்தர் கூறுவது போல கீழே தந்துள்ள அனைத்து பரிந்துரைகளுமே எனது விருப்பப் பட்டியலிலும் இருப்பவைதான். இருப்பினும் இவை எந்தளவில் செயலாக்க அரசுத்துறை முனைப்பாக இருக்கும் என்பதில் தயக்கம் உண்டு. தமிழ்நாடு அரசின் அலுவல்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்தும் இன்னமும் கோப்புக்களும் ஆவணங்களும் முதன்மையாக ஆங்கிலத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. தமிழ் மொழிபெயர்ப்பு பெயரளவிலேயே உள்ளது. அரசு வலைத்தளங்களும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இதற்கு பல காரணிகள் இருக்கலாம். அரசால் எளிதாக தரக்கூடியது மானியங்களும் அரசாணைகளும் தான்; அரசாணைகள், பொதுவிடங்களில் புகைபிடித்தலை தடுப்பது போல, மக்களிடையே முனைப்பு இல்லாதிருப்பின் செயலாக்கத்தில் வலுவின்றிதான் இருக்கும். மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதே நிலைத்த தீர்வாக அமையும்.--மணியன் (பேச்சு) 01:34, 26 பெப்ரவரி 2013 (UTC)

பாட நூலில் விக்கிப்பீடியா[தொகு]

தமிழ் அல்லது சமூக அறிவியல் நூலில் (தற்கால வரலாறு, குடிமையியல்) விக்கிப்பீடியாவைப் பற்றி ஒரு பாடம் இடம் பெற வேண்டும்.--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

  • தற்போது கல்விசார் கூடுதல் பயிற்சிகளில் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா குறித்து சிறப்புப் பயிற்சிகள் தரப்பட வேண்டும்.
  • ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழாசிரியர் (பண்டிட்) கல்வித்திட்டத்திலும் முதலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.--மணியன் (பேச்சு) 01:40, 26 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --பாட நூலில் இணைய ஊடகங்கள், இணைய உசாத்துணைகள் அல்லது தமிழ்க் கணிமை பற்றிய ஒரு பாடம் இடம்பெற வேண்டும். அதில் விக்கிப்பீடியா ஒரு அலகாக இருக்கலாம். விக்கிப்பீடியா பற்றிய பாடத்தின் போது அதன் தன்மை, அதன் நம்பிக்கைத்தன்மை, அதன் குறைபாடுகள் பற்றி தெளிவான விளக்கம் தரப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 15:12, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --Nan (பேச்சு) 18:19, 18 பெப்ரவரி 2013 (UTC)
  3. -- சுந்தர் \பேச்சு 13:55, 20 பெப்ரவரி 2013 (UTC)
  4. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  5. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. -- மயூரநாதன் (பேச்சு) 18:44, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  9. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  10. --மணியன் (பேச்சு) 01:36, 26 பெப்ரவரி 2013 (UTC)
  11. --குறுந்தகடுகளாகவோ புத்தகங்களாகவோ ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு தொகுப்பைக்கொடுக்கலாம். Wikineswar (பேச்சு) 08:32, 2 ஏப்ரல் 2013 (UTC)
  12. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:51, 2 ஏப்ரல் 2013 (UTC)
  13. --செல்வா (பேச்சு) 20:23, 9 ஏப்ரல் 2013 (UTC)

கட்டற்ற உள்ளடக்கங்கள்[தொகு]

அரசு நிதியில் உருவாகும் அறிவாக்கங்கள் அனைத்தையும் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, பல்கலைக்கழக வெளியீடுகள், அருங்காட்சியக ஆவணங்கள்.--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --Natkeeran (பேச்சு) 15:12, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  3. கட்டாயமாக. மக்களுக்காக அரசு பணம் செலவழித்து உருவாக்கும் ஆக்கங்கள் மக்கள் அனைவருக்கும் எந்தக் கட்டும் இல்லாமல் பயன்பட வேண்டும். சுந்தர் \பேச்சு 13:56, 20 பெப்ரவரி 2013 (UTC)
  4. --சோடாபாட்டில்உரையாடுக 11:25, 23 பெப்ரவரி 2013 (UTC)
  5. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. -- மயூரநாதன் (பேச்சு) 18:44, 25 பெப்ரவரி 2013 (UTC)
  9. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  10. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  11. --மணியன் (பேச்சு) 01:42, 26 பெப்ரவரி 2013 (UTC)
  12. --Wikineswar (பேச்சு) 08:33, 2 ஏப்ரல் 2013 (UTC)
  13. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:53, 2 ஏப்ரல் 2013 (UTC)

ஒருங்குறியில் தகவல் ஆதாரங்கள்[தொகு]

கட்டற்ற உரிமத்தில் அறிவிக்கப்படும் அனைத்து ஆக்கங்களையும் http://www.tamilvu.org/library/libindex.htm , http://textbooksonline.tn.nic.in/ போன்ற தளங்கள் மூலம் பொதுப்பயன்பாட்டுக்குத் தர வேண்டும். இவை PDF ஆவணமாக மட்டுமன்றி, ஒருங்குறி முறையில் உரை வடிவில் கிடைக்கப்பெற வேண்டும்--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --Natkeeran (பேச்சு) 15:12, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  3. --சோடாபாட்டில்உரையாடுக 11:56, 23 பெப்ரவரி 2013 (UTC)
  4. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  5. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  9. --மணியன் (பேச்சு) 01:43, 26 பெப்ரவரி 2013 (UTC)
  10. --Wikineswar (பேச்சு) 08:34, 2 ஏப்ரல் 2013 (UTC)
  11. --செல்வா (பேச்சு) 20:26, 9 ஏப்ரல் 2013 (UTC)

பள்ளியில் கணினியில் தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி[தொகு]

தமிழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பு பெற்ற தமிழ்99 தட்டச்சு முறையைப் பயன்படுத்த வேண்டும்--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. இது சிறப்பாக தமிழ்ப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு முக்கியம். கனடாவில் செய்யப்பட்ட ஒர் ஆய்வின் படி மாணவர்கள் இதனை விரும்புகிறார்கள், ஆனால் தமிழ் பாடத்திட்டத்தில் தமிழ்க் கணிமையோ, தகவல் தொழில்நுட்பம்/பல்லூடகங்களோ இன்னும் இல்லை. தமிழ்க் கணிமை, அது தொடர்பான பாடங்கள் தமிழ், கலை, ஊடகவியல், கணினியியல், தகவல் தொழில்நுட்பம், சமூகவியல் மாணவர்களுக்கு பாடங்களாக வழங்கப்படலாம். எ.கா பாடங்கள்: தமிழ் தட்டச்சு, தமிழ்க் கணிமை, எண்ணிம தமிழ் ஊடகவியல், தமிழ் இயற்கை மொழி முறையாக்கம், தமிழ் எண்ணிம நூலகவியல் போன்றவை. --Natkeeran (பேச்சு) 15:12, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  3. தமிழறிவு இருந்தும் பலர் விக்கிப்பீடியாவில் பங்களிக்க இயலாமைக்குத் தட்டச்சிடத் தெரியாததே காரணம். தமிழ்த் தட்டச்சுப் பயிற்சி மாணாக்கருக்கு இன்றியமையாத ஒன்று. விக்கிப்பீடியா மட்டுமின்றி தமிழ் இணையப் பரப்பை விரிவாக்க இது பெரிதும் உதவும்.# --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  4. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  5. நல்ல பரிந்துரை -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. --இது ஒரு மிகவும் பயனுள்ள நடவடிக்கையாக அமையும் என்பது எனது கருத்து. --மயூரநாதன் (பேச்சு) 18:44, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  8. --மணியன் (பேச்சு) 01:48, 26 பெப்ரவரி 2013 (UTC)
  • தற்போது பள்ளியில் தட்டச்சு பயிற்சி தருகிறார்களா என்று தெரியவில்லை. அவ்வாறு தராவிட்டால் இது செயல்படுத்த முடியாத பரிந்துரையாகவே இருக்கும். --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  • வழமையாக தட்டச்சு பயிற்சி பள்ளிகளில் தரப்படுவதில்லை; குறுக்கெழுத்தும் தட்டச்சும் இதற்கான தொழிற்முறை பள்ளிகளிலேயே வழங்கப்படுகின்றன. அங்கு தமிழ் தட்டச்சு பயிற்சிகள் (தமிழ் விசைப்பலகை) வழங்கப்பட்டு வருகின்றன. மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும் நிலையில், இதனை பள்ளிகளில் துவங்கலாம்.--மணியன் (பேச்சு) 01:48, 26 பெப்ரவரி 2013 (UTC)
  • ஓரு வேற்றுமாநில அரசு அதிகாரி ஒருங்குறியில் தட்டச்சு செய்வது பற்றிய பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதனை தட்டச்சு பயிற்சியாக கொள்ளாமல் கணினி பயிற்சியாக தரலாம் Wikineswar (பேச்சு) 08:45, 2 ஏப்ரல் 2013 (UTC)
  1. மொழி வளர்ச்சிக்கு தட்டச்சுப் பயிற்சி அவசியம் தேவை, கட்டாயமாக்கினால் நலம், கூடுதல் பயிற்சியாகவும் வழங்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:56, 2 ஏப்ரல் 2013 (UTC)

கணினியில் தமிழ் விசைப்பலகையைக் கட்டாயமாக்கும் சட்டம் அல்லது சலுகை[தொகு]

தமிழ் நிலப்பகுதிகள் விற்பனையாகும் கணினிகளில் ஆங்கில / தமிழ் விசைப்பலகைகள் இருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அல்லது, அத்தகையை கணினிகள் / விசைப்பலகைகள் விற்போருக்குச் சலுகை அளிக்க வேண்டும். குறைந்தது, அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளில் தமிழ் விசைப்பலகையைக் கட்டாயமாக்க வேண்டும்--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --Natkeeran (பேச்சு) 15:18, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  3. சுந்தர் \பேச்சு 13:58, 20 பெப்ரவரி 2013 (UTC)
  4. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  5. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  9. இந்தப் பரிந்துரை முக்கியமானதும் எளிதாக செயல்படுத்தக்கூடியதும் ஆகும். --மணியன் (பேச்சு) 01:51, 26 பெப்ரவரி 2013 (UTC)
  10. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:57, 2 ஏப்ரல் 2013 (UTC)

தமிழ்நாட்டு அரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் யாவும் தமிழிலும்[தொகு]

அரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் தகவல் தரும் முதன்மை மொழியாக தமிழ் இருக்க வேண்டும். இது ஒருங்குறி உரை வடிவில் இருக்க வேண்டும்--இரவி (பேச்சு) 14:45, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --Natkeeran (பேச்சு) 15:18, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:22, 18 பெப்ரவரி 2013 (UTC) மேலும் .இலங்கை போல் .இந்.தமிழகம் போன்ற ஆள்களப்பெயர் இருந்தால் கூடுதல் சிறப்பு.
  3. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  4. சுந்தர் \பேச்சு 13:58, 20 பெப்ரவரி 2013 (UTC)
  5. --சோடாபாட்டில்உரையாடுக 11:57, 23 பெப்ரவரி 2013 (UTC)
  6. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  9. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  10. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  11. இது தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டத்தை முறையாக செயல்படுத்தினாலே நிகழும்.--மணியன் (பேச்சு) 01:53, 26 பெப்ரவரி 2013 (UTC)
  12. தமிழில் தள முகவரி இருப்பது சிறப்பு, வழிமாற்றாகவாவது இருந்தால் நலம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:59, 2 ஏப்ரல் 2013 (UTC)

அறிவியல் கலைக்களஞ்சியம் எண்ணிமப்படுத்தப்பட்டு இணையத்தில் பகிரப்பட வேண்டும்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தரமான உசாத்துணைகளை தமிழில் பெற தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள் கட்டற்ற உரிமையில் தரப்பட வேண்டும். இவ்வாறு செய்யப்படின் இதனை தன்னார்வ அமைப்புகள் எண்ணிமப்படுத்தலாம். இது கால தாமதம் ஆகின் விரைவில் அறிவியற் கலைக்களஞ்சியம் எண்ணிமப்படுத்தப்பட்டு இணையத்தில் பகிரப்பட வேண்டும். இதன் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவில் நமக்கு இருக்கும் தமிழ் உசாத்துணை, கலைச்சொற்கள் சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக அமையும். --Natkeeran (பேச்சு) 15:18, 18 பெப்ரவரி 2013 (UTC)

ஆதரவு[தொகு]

  1. --Nan (பேச்சு) 18:17, 18 பெப்ரவரி 2013 (UTC)
  2. சுந்தர் \பேச்சு 13:59, 20 பெப்ரவரி 2013 (UTC)
  3. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:46, 25 பெப்ரவரி 2013 (UTC)
  4. --பவுல்-Paul (பேச்சு) 17:22, 25 பெப்ரவரி 2013 (UTC)
  5. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:31, 25 பெப்ரவரி 2013 (UTC)
  6. -- மயூரநாதன் (பேச்சு) 18:44, 25 பெப்ரவரி 2013 (UTC)
  7. --குறும்பன் (பேச்சு) 23:50, 25 பெப்ரவரி 2013 (UTC)
  8. ---ஸ்ரீதர் (பேச்சு) 00:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
  9. --மணியன் (பேச்சு) 01:54, 26 பெப்ரவரி 2013 (UTC)
  10. --122.167.231.107 08:47, 2 ஏப்ரல் 2013 (UTC)
  11. --Wikineswar (பேச்சு) 08:53, 2 ஏப்ரல் 2013 (UTC)
  12. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:00, 2 ஏப்ரல் 2013 (UTC)

விக்கிமீடியா அமைப்புகளுக்கு முன் வைக்கும் பரிந்துரைகள்[தொகு]

பி. கு. இப்பக்கத்துக்கு வேறு பொருத்தமான பெயர் வைக்கலாம் என்றாலும் தெரிவியுங்கள் :)

உறவாட்டம் என்பது உங்கள் சொல்லாக்கமா ? உறவாடல் என்ற சொல் தெரியும். உறவாட்டம் புதியதாக உள்ளது :) ஊடாடுவது ஊடாட்டமாக அமையும்.--மணியன் (பேச்சு) 01:57, 26 பெப்ரவரி 2013 (UTC)

கல்விக் கூடங்களில் விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்ட முடியாது[தொகு]

"பொதுக் கல்வி / பாட நூலில் விக்கிப்பீடியா" என்ற பரிந்துரை சற்றுச் சிக்கலானது என்றே கருதுகிறேன். இதுவரைக்கும் எந்த அல்லது பெரும்பான்மைக் கல்விக்கூடங்கள்/பல்கலைக்கழகங்கள் விக்கிப்பீடியாவை மேற்கோள் காட்ட அனுமதிப்பது இல்லை. ஆகவே நாம் எவ்வாறு, எந்த வகைப் பாடம் இடம்பெற வேண்டும் என்று கோருவது. குறிப்பாக அரசு பேன்ற நிறுவனங்களுடம் நாம் எந்தளவுக்கு விக்கியின் தன்மையை புரிய வைக்க முடியும் ?? விக்கிப்பீடியா பல குறைபாடுகளைக் கொண்டது, அவை எவ்வாறு இடம்பெறும். இணைய வளங்களைப் பயன்படுத்தல், அல்லது critically examing sources என்ற பெரும் பாடத்திட்டத்தின் ஒர் அலகாகவே அமைய முடியும் என்று கருதுகிறேன். --Natkeeran (பேச்சு) 02:31, 18 ஏப்ரல் 2013 (UTC)