பயனர் பேச்சு:Payarneeswarar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Payarneeswarar, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:37, 12 ஏப்ரல் 2013 (UTC) பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Payarneeswarar!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 12 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்கள் ஊரான உடையார்பாளையம் தொடர்பான கட்டுரையை நன்றாக திருத்துகிறீர்கள். உங்கள் திறமை கண்டு மகிழ்கிறேன். மேலும், நீங்கள் படித்த நூல், உங்கள் துறை சார்ந்த தலைப்புகள், வாழும் ஊர், அறிந்த சட்டம், வரலாறு, அறிவியல் என அனைத்தைப் பற்றியும் எழுதலாம். என் வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும். தொடர்ந்து எழுதுங்கள் :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:24, 17 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி அய்யா.....−முன்நிற்கும் கருத்து Payarneeswarar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
👍 விருப்பம் வாழ்த்துக்கள் நண்பரே! மேலும், பல கட்டுரைகளில் திருத்தம் செய்து உதவுங்கள். நீங்கள் தேடி கிடைக்காத தலைப்புகளைச் சொன்னால் நாங்கள் கட்டுரையாக எழுத முயல்வோம். உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் கட்டுரைகளில் சேர்க்கலாம். சந்தேகம் இருந்தால் கீழே கேளுங்கள். எந்த கட்டுரையிலும் திருத்தலாம், தயங்க வேண்டாம். தங்களிடம் ஏதாவது யோசனை இருந்தாலும் தெரிவிக்கலாம். நன்றி! தொடர்ந்து எழுதுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:15, 18 ஏப்ரல் 2013 (UTC)

படங்கள்[தொகு]

அரியலூர் மாவட்டத்திலேயே உடையார்பாளையம் திரு பயற்ணீசுவரர் ஆலயம் மிகவும் பழைமையானது(1400 ஆண்டுகள்). இக்கோயில் பற்றிய வரலாறு எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இத்திருக்கோயில் உள்கட்டமைப்பில் தமிழகளவில் மூன்றாமிடத்தில் உள்ளது.. திருக்கோயிலின் புகழை அனைவரும் அறியவேண்டும் என்று எண்ணுகிறேன்... நான் என்ன செய்யவேண்டும்...? நான் விக்கிபீடீயா தளத்திற்கு புதியவன்...

புகைப்படங்களை தரவேற்றம் செய்வது எப்படி?

நிச்சயமாக!! நான் இங்கு வந்த புதிதில் ரொம்ப கூச்ச சுபாவம். அப்புறம் நிறைய சந்தேகம் கேட்டு தெரிந்து கொண்டேன். எனவே எந்த நேரத்திலும் எந்த கேள்வியையும் கேட்கலாம். யாராவது ஒருவர் உதவுவார்.

இனி, உங்கள் கேள்விகளுக்கு பதில்கள்:

படத்தை தரவேற்ற சில விதிமுறைகள் உள்ளன. முதலில் நீங்கள் பதிவேற்றும் படம் உங்களுடையதாய் இருக்க வேண்டும் (சொந்த படமாக இருக்க வேண்டும். உங்கள் காமிராவில் எடுத்ததாக இருக்கலாம் )

தரவேற்ற சிறப்பு:Upload என்ற பக்கத்துக்குச் செல்லுங்கள். (இதற்கான இணைப்பு பக்கத்தின் இடது பக்கத்தில் கருவிப் பெட்டி என்பதற்கு கீழே இருக்கும்.) மாடம், கோபுரம், விமானம், முகப்பு, சுற்றுப் புறம் என வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்து அசத்துங்கள். மேலும் அறிய விரும்பினால் தயங்காமல் கேட்கலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 18 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி நன்றி நன்றி −முன்நிற்கும் கருத்து Payarneeswarar (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
படம் சிறப்பாக உள்ளது. :) உங்கள் படத்தினுள் ஆங்கிலத்தில் எழுதுவதை தவிர்க்கலாம். தமிழ்க் கட்டுரையில் ஆங்கிலத்தில் எழுதிய படம் இருந்தால் நன்றாக இருக்காது. படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருத்தல் நலம், தமிழிலும் இருக்கலாம். இனிமேல் தரவேற்றும் சொந்த படங்களை காமன்சு(இங்கு) பதிவேற்றினால், ஆங்கிலம் உட்பட அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் பயன்படுத்த முடியும். உரிமம் (லைசன்சு) தொடர்பாக ஏதாவது கேட்டால் உங்கள் சொந்த படிமம் என்று தேர்வு செய்யுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:48, 18 ஏப்ரல் 2013 (UTC)
படங்கள் அருமையாக இருக்கின்றன. கடைசியாக பதிவேற்றிய படம் நீக்கப்படும். இந்த படத்தில் வீர வன்னிய, பெருமை போன்ற சொற்கள் உள்ளன. விக்கிப்பீடியாவில் யாருக்கும் ஆதரவாய் எழுத முடியாது. அந்த வாசகத்தை படத்தில் இருந்து நீக்கவும். மேலும், படம் தெளிவாக இல்லை. வேறு படம் இருந்தால் நல்லது. திருத்தம் செய்ய வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:04, 24 ஏப்ரல் 2013 (UTC)

நல்லது நண்பரே.... ஓரு சந்தேகம்.... உடையார்பாளையம் நகரை பற்றி தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்த கட்டுரையை உடையார்பாளையம் பக்கத்தில் பதிவு செய்யலாமா.....?

கவனத்துடன் இருப்பதற்கு நன்றி! மற்ற இணைய தளங்களில் இருந்தோ, புத்தகங்களில் இருந்தோ அப்படியே இங்கு ஒட்ட வேண்டாம். ஆனால், அங்குள்ள செய்தியில் சில வரிகளை இங்கே இட்டு, ஆதாரமாக, சான்றாக தெரிவிக்கலாம். எ.கா: "உடையார்பாளையம் கோயில் கல்வெட்டுகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை, - உ. வே. சா. நூலில் இருந்து" என்பது போல் எழுதலாம். வன்னியர்கள் பற்றி எழுதலாம். புகழ்ந்து, திட்டி எழுதினால் அத்தகையவை நீக்கப்படும். சந்தேகம் இருந்தால் கேட்கலாம். அடிக்கடி கட்டுரைகளில் திருத்தம் செய்பவரின் பேச்சுப் பக்கத்தில் கேட்டால் உடனே பதில் கிடைக்கும். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:09, 24 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி

ஆலோசனை[தொகு]

உடையார்பாளையம் கட்டுரையில் அந்த பேரூராட்சியைப் பற்றிய தகவல்களை மட்டும் தரவும். சுற்றியுள்ள ஊர்களைப் பற்றியும், பிற பொதுவான தகவல்களையும் உடையார்பாளையம் வட்டம் கட்டுரைக்கு நகர்த்துங்கள். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி, சிறுகடம்பூர், கீழையூர், மருவத்தூர், கிளிமங்கலம் ஊர்களை பற்றிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறேன். பிழைகளை திருத்தி உதவுங்கள். தெரிந்த தகவல்களைச் சேருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:53, 25 ஏப்ரல் 2013 (UTC)

நல்லது.... தங்கள் ஆலோசனைக்கு நன்றி...

Sengai Podhuvan வேண்டுகோள்[தொகு]

அன்புள்ள பயனேசுவரர், முதலில் உங்களை அடையாளம் காட்டுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:33, 25 ஏப்ரல் 2013 (UTC)

என்னை அடையாளம் காட்டுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் நண்பரே.....

  • நீங்கள் விக்கிப்பீடியாவில் நுழைந்ததும் தலைப்புப் பகுதியில் உங்கள் பெயர் சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டிருக்கும். அதனைச் சொடுக்கினால் ஒரு பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதிச் சேமியுங்கள். அவ்வளவுதான். மிக எளிது. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:28, 26 ஏப்ரல் 2013 (UTC)
  • பேச்சுப் பகுதியில் எழுதும்போது மட்டும் உங்களது கையொப்பத்தைத் தவறாமல் இடுங்கள். அது இன்னார் எழூதியது என்பதை அறிய உதவும்.
  • மேலே உள்ள உதவு-குறிகளில் உங்களது எழுது முனையை வையுங்கள். அதைச் சொடுக்கினால் அது என்ன செய்யும் என்பதை அது சொல்லும். அதில் உள்ள மூன்றாவது குறி நேரமுத்திரையுடன் கையொப்பம் என்று இருக்கும். உங்கள் செய்திகளைப் பேச்சுப் பகுதியில் எழுதி முடித்த பின்னர் எழுத்தோட்டக் கோட்டுக் குறி உங்கள் எழுத்து முடிவில் இருக்கும்போது கையொப்பக் குறியைச் சொடுக்குங்கள். பதிவாகிவிடும். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:28, 26 ஏப்ரல் 2013 (UTC)
மிகவும் நன்றி.... அன்புள்ள --பயறணீநாதர் 08:58, 28 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம் நண்பரே... என்னுடைய பயனர் பக்கத்தில் என்னைப் பற்றிய அடையாளங்களை பதிவு செய்வதற்கான விருப்பங்கள் எதுவும் இல்லை... அதற்கு நான் என்ன செய்யவேண்டும்....? --பயறணீநாதர் 09:26, 28 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம், உங்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பது இங்கு கட்டாயமில்லை. அடையாளம் காட்டாமலே உங்கள் பங்களிப்புகளை உங்கள் பயனர் பெயரில் தொடரலாம்.--Kanags \உரையாடுக 10:29, 28 ஏப்ரல் 2013 (UTC)
  • புகுபதிகை செய்துவிட்டுப் பாருங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 12:21, 28 ஏப்ரல் 2013 (UTC)
    • வாழ்த்துக்கள். உங்கள் அறிமுகம சிறப்பாக உள்ளது. தொடர்ந்து உதவுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 22:26, 29 ஏப்ரல் 2013 (UTC)

மிகவும் நன்றி.... தவறேதும் செய்தால் சுட்டிக்காட்டுங்கள்... திருத்திக்கொள்கிறேன்.....அன்புள்ள...... --பயறணீநாதர் 13:04, 30 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம், பயனர் பக்கத்தில் நிறைய பெட்டிகளை வைத்துக்கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, இந்த பயனர் அறிவியலில் ஆர்வம் உள்ளவர், இந்த பயனர் மாணவர் என்பது போல. நிறைய பயனர்கள் தங்கள் பக்கங்களை அழகாக வைத்திருக்கின்றனர். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:44, 30 ஏப்ரல் 2013 (UTC)

vanakkam en madikaninee'yil irunthu thamizh mozhiyil ezhutha mudiyavillai.... uthavungal......?--பயறணீநாதர் 13:22, 29 சூன் 2013 (UTC) vanakkam ... ennal thamizhil ezhutha mudiyavillai..... thayavu seithu uthavungal.....--பயறணீநாதர் 11:28, 2 சூலை 2013 (UTC)

nhm எழுத்துகளை download செயதுகொள்ளுங்கள். tamil 99 விசைப்பலகையைப் பயன்படுத்தி அச்சாக்குங்கள். இது எளிய வழி. --Sengai Podhuvan (பேச்சு) 03:38, 3 சூலை 2013 (UTC)

தங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.... --பயறணீநாதர் 18:23, 3 சூலை 2013 (UTC)

குறுங்கட்டுரைகள்[தொகு]

தங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்கிறேன். விக்கிபீடியாவில் ஓரிரண்டு வரியுடன் உருவாக்கப்படும் கட்டுரைகள் விரைந்து நீக்கப்படலாம். ஆகையால் காரைக்குறிச்சி , குருவாலப்பர்கோயில் , அழகாபுரம் , இடையார் போன்ற கட்டுரைகளை விரிவாக்கவும். நன்றி தொடர்ந்து பங்களியுங்கள். -- :) நிஆதவன் ( உரையாட ) 10:52, 25 சூலை 2013 (UTC)

பாராட்டு[தொகு]

அடேயப்பா! உங்கள் ஈடுபாட்டைக் கண்டு வியக்கிறேன். உடையார்பாளையம் தொடர்பான கட்டுரையில் பல தகவல்கள் உள்ளன. பிற தளங்களின் இணைப்பு, படங்கள், அதிக தகவல்கள் ஆகியவற்றைச் சேர்த்திருப்பதன் மூலம் உங்கள் ஆர்வத்தை அறிய முடிகிறது. மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:41, 16 ஆகத்து 2013 (UTC)

நன்றிகள்[தொகு]

உங்கள் கருத்துகளுக்கு நான் தலைவணங்குகிறேன் நண்பரே!. தங்களின் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் எனக்கு புதிய உத்வேகத்தை தருகிறது. மகிழ்ச்சியாக உள்ளது.. எனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன். --கௌதம் 17:01, 17 ஆகத்து 2013 (UTC)

உடையார்பாளையம்‎[தொகு]

உடையார்பாளையம்‎ கட்டுரையை நன்றாக வளர்த்தெடுப்பதற்குப் பாராட்டுகள். எனினும் அதில் விக்கி நடைக்கேற்றவாறு செய்யப்படும் மாற்றங்களை மீண்டும் சேர்க்கிறீர்கள். தகவல்களுக்கு ஆதாரம் தருவது அவசியம். யூ டியூபில் உள்ளவற்றை வெளி இணைப்பாகத்தான் தரமுடியும். அதிகாரபூர்வமான ஆதாரங்களை இணைத்து கட்டுரையை மேம்படுத்துங்கள். நல்ல கட்டுரை. தகுந்த ஆதாரங்களும் கலைக்களஞ்சிய நடையும் இக்கட்டுரையை முதற்பக்கத்துக்கு இட்டுச் செல்லும். --Booradleyp1 (பேச்சு) 04:03, 24 ஆகத்து 2013 (UTC)

நன்றி[தொகு]

மிகவும் நன்றி.... எனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன்.--கௌதம் 18:46, 25 ஆகத்து 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)

நீக்கல் காரணம்[தொகு]

நண்பருக்கு வணக்கம் கட்டுரைகள் எழுதுவதற்கு மிக்க நன்றி தங்களது அறிமுகத்தில் அரசை பற்றி விமர்சனம் செய்வது போல் இருந்ததினால் அதை நீக்கினேன் நன்றி.ஞா. ஸ்ரீதர் (பேச்சு) 01:42, 22 திசம்பர் 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Payarneeswarar&oldid=2616912" இருந்து மீள்விக்கப்பட்டது