பயனர் பேச்சு:Parthiban Rajasekaran
வாருங்கள்!
வாருங்கள், Parthiban Rajasekaran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:19, 4 சூலை 2013 (UTC)
வாழ்த்துகள்[தொகு]
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், Parthiban Rajasekaran!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 8 சூலை 2013 (UTC)
கூரத்தாழ்வார் கட்டுரைப் பற்றி[தொகு]
முதற்கண் நண்பர் ஜெகதீசுவரனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல, வைணவ பேரொளியாம் கூரத்தாழ்வார் பற்றிய பங்களிப்பை தந்ததற்கு. தங்கள் கேள்விக்கான என்னுடைய பதிலிதோ....முதலாவதாக..."பட்டர்பெருமானின் தந்தை என்பதை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள்" என கூறியிருக்கிறீர்கள். அழிக்கவில்லை மாறாக, பராசரபட்டர்பெருமான் மட்டுமல்ல கூரத்தாழ்வாரின் இன்னொரு குமாரனான வியாசர்பட்டர் என்பவரையும் கட்டுரை முன்னுரையின் இறுதியில் சேர்ப்பித்து இருந்தேன். இரண்டாவதாக காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையேஎன்ற தகவலை பொருந்தாத ஒன்று எனக்கூறி நீக்கியுள்ளீர்கள். இத்தொண்டே பின்னாளில் இவரை ஜெகத்குரு இராமானுஜரிடம் சீடனாக கொண்டுசேர்த்தது. இதற்கு ஆதாரமாக வைணவ குருப்பரம்பரை கதை, கூரத்தாழ்வான் சரிதம், திருவரங்க கோயிலொழுகு, சுதந்திர போராட்டவீரர் சுப்பிரமண்ய சிவா எழுதிய இராமானுஜ விஜயம், கூரத்தாழ்வன் கோயில் தலவரலாறு, ஆகியவற்றோடு, அடியேனுக்கு எங்கள் மடத்தில் சொல்லப்பட்டதும் இதுவே ஆம். மேலும் கீழ்க்கண்ட வலைப்பின்னலிலும் காண்க. http://www.saranagathi.org/acharyas/kuresar/life.htm, http://www.mudaliandan.com/kooresa.php & http://www.kuresan.com/azhwan-vaibhavam.asp
கட்டுரையை நான் முடிப்பதற்கு முன்பே, தாங்கள் கண்டதால் இப்பிழை நேர்ந்திருக்கலாம் எனக்கருதுகிறேன். இருப்பினும் தாங்களின் விமர்சனத்திற்கும், கட்டுரைக்கும் மனமார்ந்த நன்றி.
கூரத்தாழ்வார் கட்டுரைப் பற்றி[தொகு]
கூரத்தாழ்வார் கட்டுரையில் தாங்கள் மாற்றம் செய்வித்திருக்கின்றீர்கள். அதில் பட்டர்பெருமானின் தந்தை என்பதை முற்றிலுமாக அழித்துவிட்டீர்கள். இவ்வாறு செய்வதை தவிருங்கள். தாங்கள் காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே என்ற வரியை இணைத்துள்ளீர்கள். இடையில் இந்த மாற்றம் சரிவர பொருந்தாமையினால் பழைய நிலைக்கு மீள்வித்திருக்கிறேன். தயைகூர்ந்து கவனத்துடன் கட்டுரையில் பங்களியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:15, 17 சூலை 2013 (UTC)
வாழ்த்துக்கள்[தொகு]
தங்கள் பங்களிப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள். வெங்கடேச சுப்ரபாதம் கட்டுரையை நன்றாய் எழுதியிருக்கிறீர்கள். தங்கள் அறிமுகத்தையும் பார்த்தேன். வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி -- நி ♣ ஆதவன் ♦ (உரையாட படத்தை சொடுக்கவும்) 09:53, 30 சூலை 2013 (UTC)
- தோழர் ஆதவனுக்கு மனமார்ந்த நன்றி. என்னை போன்ற புதியவர்களுக்கு இது போன்ற தங்களின் உற்சாகம் மனமகிழ்ச்சியோடு மேலும் பல படைப்புகளுக்குண்டான ஆர்வத்தையும் தூண்டுகிறது. தங்களுக்கு எப்படி பதிலனுப்புவது என்று தெரியாமல் இப்பக்கத்திலேயே பதிலனுப்புகிறேன். தவறாயின் உரிய ஆலோசனைகளை வழங்கவும். நன்றி தோழா:)
- பார்த்திபன், யாராவது தங்கள் பேச்சுப்பக்கத்திலே செய்தி அனுப்பினால், அவர் அனுப்பிய செய்தியின் கீழ் ':' இக்குறியீட்டை இட்டுவிட்டு கூறலாம். அல்லது அவரது பேச்சுப்பக்கம் சென்று கூறலாம். எனது பேச்சுப் பக்கத்திற்கு வர அருகிலுள்ள பூப்படத்தை சொடுக்கலாம். மற்றவர்களுக்கு அவர்களது கையொப்பத்தின் அருகில் பேச்சு என இருக்கும்.தங்களது கையொப்பத்தை இட ~~~~ இக்குறியீட்டைப் பயன்படுத்தலாம். அல்லது கருவிப்பட்டையில் உள்ள பென்சில் அடையாளத்தை சொடுக்குங்கள். மேலும் ஏதும் உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேளுங்கள். தங்களது பதிலை இதைற்குக் கீழ் நகர்த்தியிருக்கிறேன். நன்றி -- நி ♣ ஆதவன் ♦
(உரையாட படத்தை சொடுக்கவும்) 13:22, 30 சூலை 2013 (UTC)
- பார்த்திபன், யாராவது தங்கள் பேச்சுப்பக்கத்திலே செய்தி அனுப்பினால், அவர் அனுப்பிய செய்தியின் கீழ் ':' இக்குறியீட்டை இட்டுவிட்டு கூறலாம். அல்லது அவரது பேச்சுப்பக்கம் சென்று கூறலாம். எனது பேச்சுப் பக்கத்திற்கு வர அருகிலுள்ள பூப்படத்தை சொடுக்கலாம். மற்றவர்களுக்கு அவர்களது கையொப்பத்தின் அருகில் பேச்சு என இருக்கும்.தங்களது கையொப்பத்தை இட ~~~~ இக்குறியீட்டைப் பயன்படுத்தலாம். அல்லது கருவிப்பட்டையில் உள்ள பென்சில் அடையாளத்தை சொடுக்குங்கள். மேலும் ஏதும் உதவி வேண்டுமென்றால் தயங்காமல் கேளுங்கள். தங்களது பதிலை இதைற்குக் கீழ் நகர்த்தியிருக்கிறேன். நன்றி -- நி ♣ ஆதவன் ♦
விருப்பம் பார்த்திபன் அவர்களே, வணக்கம்! உங்களை உங்கு சந்திப்பதில் மகிழ்கிறேன். எனக்கும் மொழியியல் என்றால மிக விருப்பம். இருவரும் சேர்ந்து இது தொடர்பாக ஆலோசித்து எழுதுவோம். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:54, 30 சூலை 2013 (UTC)
':'
- ஆதவன்,' தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஆயினும் தங்களின் ஆலோசனைப்படி அருகிலுள்ள பூப்படத்தை சொடுக்கினாலோ அல்லது உரையாட/ பேச்சு என்ற பொத்தானை அழுத்தினால் அந்நாரின் பக்கத்திற்கு செல்கிறது. அப்பக்கத்தில் என்னுடைய பதில்களை பதிவுசெய்வதிற்குண்டான தளங்களை அறிய முடியவில்லை. கனிவுக்கூர்ந்து என்னுடைய அறியாமையை மன்னிக்கவும்.
- தமிழ்க்குரிசில், மிக்க மகிழ்ச்சி. தங்களோடு இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன்.
பதக்கம்[தொகு]
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
# மற்றவர் தொடங்கிய கட்டுரைகளை விரிவுப்படுத்துவது
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம், தொடர்ந்து பங்களிப்பதற்காக, இதே பதக்கத்தை நான் உங்களுக்கு வழங்குகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:36, 1 ஆகத்து 2013 (UTC)
- திருவாளர் தென்காசி சுப்பிரமணியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தங்களின் இந்த விருது இப்பணியில் மேலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ள தூண்டுகிறது. மிக்கநன்றி.
- தமிழ்க்குரிசிலுக்கு மிக்கநன்றி....
வாசிக்க[தொகு]
இப்பக்கங்களை முழுமையாக வாசித்துவிடவும்.
- http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)-- நி ♣ ஆதவன் ♦
(உரையாட படத்தை சொடுக்கவும்) 15:56, 1 ஆகத்து 2013 (UTC)
- http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)-- நி ♣ ஆதவன் ♦
- – தோழா மிக்க நன்றி....ஆயினும் இப்பக்கங்களுக்கான் பொத்தானை சொடுக்கினால் பிழையுள்ள பக்கம் என்ற தகவலைத் தவிர வேறொன்றையும் காண இயலவில்லை.....தொல்லைக்கு மன்னிக்கவும்....–
- நீங்கள் இலகுவில் கற்றுக்கொண்டது கண்டு மகிழ்ச்சி, தாங்கள் ஒரு செய்தியை இட்டதும் உங்களது கையொப்பத்தை இட்டுவிடுங்கள். மேலே கருவிப்பட்டையில் நீலநிறப் பேனை அடையாளத்தைக் கிளிக் செய்வதன் மூலம் இடலாம். எதற்கும் நீங்கள் மன்னிப்புக் கேட்க அவசியமில்லை. தவறாக இணைப்புத்தந்ததற்கு மன்னிக்கவும் இப்போது அப்பக்கத்தைக் காணலாம். மேலே இணைப்பு உள்ளது. நன்றி-- நி ♣ ஆதவன் ♦
(என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:48, 2 ஆகத்து 2013 (UTC)
- நீங்கள் இலகுவில் கற்றுக்கொண்டது கண்டு மகிழ்ச்சி, தாங்கள் ஒரு செய்தியை இட்டதும் உங்களது கையொப்பத்தை இட்டுவிடுங்கள். மேலே கருவிப்பட்டையில் நீலநிறப் பேனை அடையாளத்தைக் கிளிக் செய்வதன் மூலம் இடலாம். எதற்கும் நீங்கள் மன்னிப்புக் கேட்க அவசியமில்லை. தவறாக இணைப்புத்தந்ததற்கு மன்னிக்கவும் இப்போது அப்பக்கத்தைக் காணலாம். மேலே இணைப்பு உள்ளது. நன்றி-- நி ♣ ஆதவன் ♦
செவ்விய தொண்டு[தொகு]
![]() |
சீரிய பணி பார்த்திபன் இராசசேகரன் கட்டுரைகளை உன்னிப்பாகப் படித்து எழுத்துப்பிழை திருத்தியும், உள் இணைப்புகள் தந்தும் சீரிய பணிகளைச் செய்துவருகிறார். |
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:32, 4 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி[தொகு]
செங்கைப் புதுவன் அவர்களுக்கும், செல்வசிவகுருநாதன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி....அடியவனின் படைப்புகளுக்கும் நேரம் ஒதுக்கியதோடு அதனை அங்கீகரித்ததற்கும் மீண்டும் நன்றி....
வேண்டுகோள்...[தொகு]
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:46, 27 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம், Parthiban Rajasekaran!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 07:35, 2 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி...[தொகு]
வணக்கம் பார்த்திபன்! அக்டோபர் மாதத்து தொடர் கட்டுரைப் போட்டியில் பங்குகொண்டு கட்டுரைகளை தாங்கள் எழுதி வருவது குறித்து மகிழ்ச்சி. ஆனால் இப்போட்டியின் குறிக்கோள் வேறு. ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்துதலே இதன் குறிக்கோள். விவரங்களுக்கு விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்பதனைப் பாருங்கள். பட்டியலிடப்பட்டுள்ள தலைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து கட்டுரைகளை விரிவுபடுத்துங்கள். உங்களுக்கு தெளிவுபடுத்தவே இந்த செய்தி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 24 அக்டோபர் 2013 (UTC)
ஊக்கம் குறைய வேண்டாம். தங்களால் தமிழ் விக்கிக்கு இப்போது நல்ல கட்டுரைகள் 5 கிடைத்துள்ளன. நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:21, 24 அக்டோபர் 2013 (UTC)
பதில்[தொகு]
தெளிவுபடுத்தியமைக்கு செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனில் கட்டுரை போட்டியில் குறிக்கப்பட்டுள்ள என்னுடைய பட்டியல்களை நீக்கிடலாமா? என்றும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்
- நீக்குதலே சரியானது. ஏனெனில் இக்கட்டுரைகள், கட்டுரைப் போட்டிக்கான ஆக்கங்களாக கருதப்படாது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 24 அக்டோபர் 2013 (UTC)
தங்கள் ஆணைப்படி தகவல்கள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன:(
தயவுசெய்து ஆணை எனக் கருதாதீர்கள். வழிகாட்டல் என்று கொள்ளுங்கள். இப்பகுதியில் நீங்கள் 20 கட்டுரைகள் எழுதியபிறகு பரிசு கிடைக்காமல் இருக்கும்போது உங்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும். போட்டியை நடத்தும் பொறுப்பாளர்களுக்கும் சங்கடமான சூழ்நிலை ஏற்படும். இதனைத் தவிர்த்தலே எனது நோக்கம். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:40, 25 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி[தொகு]
- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)
தங்கள் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றி தோழரே..என்னால் இயன்றதை முயல்கிறேன்....
வேண்டுகோள்...[தொகு]
வணக்கம்! உங்களின் பேச்சுப் பக்கத்தில் அல்லது மற்றவரின் பேச்சுப் பக்கத்தில் எழுதி முடித்தபிறகு, கையொப்பமிடுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:17, 8 நவம்பர் 2013 (UTC) உங்களுக்கு (மின்னஞ்சல்) எனது தொலைபேசி எண்ணை அனுப்பியுள்ளேன். உதவி தேவையெனில் அழைக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:22, 8 நவம்பர் 2013 (UTC)
மிக்கநன்றி ஐயா! இதுபோன்ற என்மீதான தங்களின் தொடர் மேலாண்மை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. அவசியம் தங்களோடு உரையாட தொலைபேசியில் அணுகுவேன்
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]
வணக்கம் Parthiban Rajasekaran!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- மீண்டும் தமிழ் விக்கிப்பீடியருடன் இணைந்து கலக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன். --இரவி (பேச்சு) 16:49, 11 சனவரி 2015 (UTC)
உரிமம் தருக[தொகு]
படிமம்:Poigaiyazhwar.jpg என்ற கோப்பிற்குரிய உரிமம் தருக. இது உங்களது சொந்த ஆக்கம் எனில், பொதுவகத்தில் பதிவேற்றுங்கள்.--த♥உழவன் (உரை) 05:18, 16 ஏப்ரல் 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]
வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:13, 14 சூலை 2015 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]
15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)
விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]
வணக்கம்.
2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:20, 3 நவம்பர் 2018 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]
Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.