பசுமைக்கரங்கள் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசுமைக்கரங்கள் திட்டம் என்பது தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற ஈசா அறக்கட்டளை அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இத்திட்டம் 17 அக்டோபர் 2006 அன்று ஈசா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. 17 அக்டோபர் அன்று ஒருநாளில் சுமார் 7 இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கைத் தாண்டி 8,52,587 மரக்கன்றுகள், 27 மாவட்டத்தில் உள்ள 6,284 இடங்களில் நடப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

திட்டத்தின் இலக்குகள்[தொகு]

உடனடி இலக்குகள்[தொகு]

  1. விழிப்புணர்வு, பரப்புரை, தன்னார்வலர் சேர்ப்பு: இந்த இலக்கு எட்டப்பட்டது.
  2. ஆரம்பமாக அக்டோபர் 17 2006 இல் 700, 000 மரங்களை ஒரேநாளில் நடுதல்: இந்த இலக்கு எட்டப்பட்டது.

தொலைநோக்குத் திட்டங்கள்[தொகு]

  1. தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை 33 விழுக்காடாக அதிகரித்தல். இதைச் செய்ய 114 மில்லியன் மரங்களை 2016 ஆம் ஆண்டிற்கு முன்னதாக நடவேண்டும்.
  2. சுற்றுச்சூழல் பேணுதலை உறுதிப்படுத்தும் ஒரு பண்பாட்டுச் சூழலை உருவாக்கல்.
  3. இந்தத் திட்டத்தைப் பிற இடங்களில் செயல்படுத்துதல்.

வெளி இணைப்புகள்[தொகு]