தும்பிப்பன்றி
தும்பிப் பன்றி புதைப்படிவ காலம்: Early இயோசீன்–Holocene | |
---|---|
மலாய் தும்பிப்பன்றி | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஒற்றைப்படைக் குளம்பி
|
குடும்பம்: | தும்பிப்பன்றி
|
பேரினம்: | டபிருஸ்
Morten Thrane Brünnich, 1772
|
Species | |
Tapirus bairdii |



தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (tapir) தாவர உண்ணியான இப்பாலூட்டிகள் பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும்.[1]
தும்பிப்பன்றிகள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது. தும்பிக்கைப் பன்றி இனங்களில் பிரேசில் தும்பிப்பன்றி, மலாய் தும்பிப்பன்றி, மெக்சிகோ தும்பிப்பன்றி, அமேசான் தும்பிப்பன்றி, கபோமணி தும்பிப்பன்றி[1] மலைத்தும்பிப்பன்றி என ஐந்து வகைகள் உண்டு.
தும்பிப்பன்றிகள் அருகிய அல்லது அழியும் வாய்ப்பில் உள்ள விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
தும்பிப்பன்றிகள் குதிரை, குரங்கு, வரிக்குதிரை, மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகுகளுடன் சேர்ந்து உணவு தேடும்.
உடல் அமைப்பு
[தொகு]தும்பிப்பன்றிகளின் சராசரி உடல் நீளம் அதிக பட்சமாக 6.6 அடியாகவும் (2 மீட்டர்), உயரம் 3 அடியாகவும் (1 மீ), எடை 150 முதல் 300 கிலோ கொண்டதாக உள்ளது. இவைகள் வென்னிறம், கருநிறம் வெளிர் நிறம், செம்மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காணப்படுகிறது. பெண் தும்பிப்பன்றிகளுக்கு ஒரு ஜோடி முலைக்காம்புகள் மட்டும் உள்ளது.[2] ஆண் தும்பிப்பன்றிகளின் உடல் நீளத்தைப் பொறுத்து ஆண் குறிகளின் நீளம் அமைந்துள்ளது.[3][4][5][6][7]இதன் வால் பகுதி மிகவும் குட்டையாக காணப்படுகிறது.
மலாய் தும்பிப்பன்றிகளின் முன்னங்கால்களில் நான்கு குளம்பிகளும்; பின்னங்கால்களில் மூன்று குளம்பிகளும் கொண்டுள்ளது.
தும்பிப்பன்றிகள் 42 முதல் 44 பற்கள் வரை கொண்டது.[8][9]
ஆண் தும்பிப்பன்றிகள் பிறந்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இனச்சேர்க்கைக்கு தயாராகிவிடும். பெண் தும்பிப்பன்றிகள், ஆண் பன்றிகளை விட வெகு விரைவில் இனச்சேர்க்கைக்கு முன்னிற்கும்.[10] பெண் தும்பிப்பன்றிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு குட்டி ஈனும். பிறந்த குட்டி பதின்மூன்று மாதங்கள் தாயிடம் வளர்ந்த பின்னர் தனியாகச் சென்று உணவு தேடும்.[11] தும்பிப் பன்றிகள் காட்டிலும், உயரியல் பூங்காக்களிலும் 25 முதல் 30 ஆண்டுகள் வாழத்தக்கது.[12]
-
மலாய் தும்பிப்பன்றியின் மண்டையோடு
-
மெக்சிகோ தும்பிப்பன்றியின் மண்டையோடு
-
பிரேசிலியன் தும்பிப்பன்றியின் மண்டையோடு
-
மலைத்தும்பிப்பன்றியின் மண்டையோடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hance, Jeremy. "Scientists make one of the biggest animal discoveries of the century: a new tapir". Mongabay. http://news.mongabay.com/2013/1216-hance-new-tapir-kabomani.html. பார்த்த நாள்: 17 December 2013.
- ↑ Gorog, A. (2001). Tapirus terrestris, Animal Diversity Web. Retrieved June 19, 2006.
- ↑ Hickey, R.S. Georgina (1997). "Tapir Penis". Nature Australia 25 (8): 10–11.
- ↑ Endangered Wildlife and Plants of the World. Marshall Cavendish. 2001. pp. 1460–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7194-3.
- ↑ Prasad, M. R. N. (1974). Männliche Geschlechtsorgane. Walter de Gruyter. pp. 119–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-004974-9.
- ↑ Gade, Daniel W. (1999). Nature & Culture in the Andes. University of Wisconsin Press. pp. 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-299-16124-8.
- ↑ Quilter, Jeffrey (2004). Cobble Circles and Standing Stones: Archaeology at the Rivas Site, Costa Rica. University of Iowa Press. pp. 181–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58729-484-6.
- ↑ Ballenger, L. and P. Myers. 2001. "Tapiridae" (On-line), Animal Diversity Web. Retrieved June 20, 2006.
- ↑ Huffman, Brent. Order Perissodactyla at Ultimate Ungulate
- ↑ "Woodland Park Zoo Animal Fact Sheet: Malayan Tapir ''(Tapirus indicus)''". Zoo.org. Archived from the original on 2006-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-11-02.
- ↑ Tapir | San Diego Zoo Animals.
- ↑ Morris, Dale (March 2005). "Face to face with big nose." பரணிடப்பட்டது 2006-05-06 at the வந்தவழி இயந்திரம் BBC Wildlife. pp. 36–37.