தமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

தமிழ் மொழியின் பேச்சிலோ எழுத்திலோ ஆங்கில சொற்களின் பயன்பாடும் ஆங்கில இலக்கணக் கட்டமைப்பும் அதிகம் காணப்படும் பொழுது அந்த பேச்சையோ எழுத்தையோ தமிங்கிலம் எனலாம். தமிங்கிலிஷ், தங்லிஷ் என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம் ஆங்கிலத்தின் வட்டார மொழி வழக்கு அல்ல. இது தமிழ் மொழியின் திரிபே ஆகும். தமிங்கிலத்தை தமிழில் அதிக சமசுகிருதச் சொற்களின் பயன்பாட்டால் தோன்றிய மணிப்பிரவாள நடையோடு ஒப்பிடுவது தகும். சில தமிழர்கள் தமிழரோடு ஆங்கிலத்தில் உரையாடும்பொழுது தமிழ்ச் சொற்களை இடையிடையே பயன்படுத்துவதும் உண்டு.

காரணங்கள்

குடியேற்றவாதம்

ஆங்கில காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் கல்வி, நிர்வாக, சட்ட, அரச மொழியாக இருந்தது. அது ஆங்கில மொழி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பரவ வழி வகுத்தது. தமிழ் மொழி பேச்சு வழக்கில் ஆங்கில மொழியின் பல சொற்களை உள்வாங்கியது.

வர்க்கவாதம்

தமிங்கிலம் பேசுவதால், அதாவது அதிக ஆங்கில சொற்கள் பயன்படுத்திப் பேசினால், தம்மை படித்தவராக, அல்லது உயர் வர்க்கத்தவராக அடையாளப்படுத்தலாம் என்று தவறாக எண்ணிப் பலர் பயன்படுத்துகிறார்கள். இது இவர்களின் அறியாமையே. ஆங்கிலம் ஒரு பொருளீட்டு மொழி மட்டுமே என்பதை உணராததே ஆகும். இது காலனித்துவ காலத்தில் உயர் கல்வியை அல்லது உயர் பதவிகளை ஆங்கிலம் படித்தோர் மட்டும் பெற்றதன் தொடர்ச்சியான மனப்பாங்கு ஆகும்.

ஊடகங்கள்

இன்று ஊடகங்களில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் தெரியாத அல்லது சரியான தமிழ் உச்சரிப்புத் தெரியாத தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைப் பின்பற்றி பலரும் தமிங்கிலம் பேசுகிறார்கள். இந்த இழிநிலையை நீக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளில் இத்தகைய இழிநிலை இல்லை.

உலகமயமாதல்

மொழிக் குறைபாடுகள்

தமிழ் மொழியில் இலகுவாக உயர் கல்வி பெறும் வசதி இல்லை.. குறிப்பாக கணிதம், பொறியியல், வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியில் ஆக்கங்கள் அரிது. இதனால் அன்றாடம் பயன்படும் மொழியாக ஆங்கிலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ளது. இப்படி துறைசார் உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம் பேசுப்படுவது, அறிவியல் தமிழ் போதிய வளர்ச்சி பெறாமை காரணம் ஆகும்.

தமிங்கிலச் சொற்கள் பட்டியல்

தமிங்கிலச் சொல் ஆங்கிலம் இணையான தமிழ்ச் சொல் மம்மி Mommy அம்மா
டாடி Daddy அப்பா
ஃபிரண்ட் friend நண்பர், தோழர்
ஃபமிலி family குடும்பம்
லவ் love காதல்
கலோ Hello வணக்கம்
சொறி, சாரி Sorry மன்னிக்க, மன்னிக்கவும்
பிளீஸ் Please தயந்து, தயவுசெய்து
தேங்ஸ் Thanks நன்றி
குட் னைற் Good night நல்லிரவு, 'நாளைய பொழுது நன்றாக விடியட்டும்'
பாய் Bye போய் வருகிறேன்.
கான்சப்ட் Concept கருத்துரு, கருத்துருவம், கரு, கருத்துப்படிமம், கருப்பொருள்,
ஐடியா Idea எண்ணம், எண்ணக்கரு, யோசனை
கிளாசிக் Classic செவ்வியல்
இசுக்கூல் school பள்ளிக்கூடம், பாடசாலை
கார்பேய் garbage குப்பை, கழிவு
கம்பியூட்டர் computer கணினி
இண்டர்னெட் internet இணையம்
டிரிங்ஸ் drinks பானம், குடிபானம்
ரயிஸ் rice சோறு
கான்வெண்ட் convent பள்ளி
இசுபெசல் special சிறப்பு
லன்ச் lunch மதிய உணவு
டின்னர் dinner இரவு உணவு
ஸ்டூன்ஸ் students மாணவர்கள், மாணவர், மாணவன், மாணவி
ஃபீலிங் feeling உணர்ச்சி, உணர்வு
காம்பட்டிசன் competition போட்டி
கம்பிளைன் complain முறையீடு
போலிசு Police காவல்துறை
நைட் night இரவு
சுயசைட் suicide தற்கொலை
ஃபோரின் foreign வெளிநாடு
ஃபிளட் flat மாடி, அடுக்குமாடி
பிறதர் brother அண்ணன், தம்பி
சிஸ்டர் sister அக்கா, தங்கச்சி/தங்கை

ஊடகங்களில் தமிங்கிலம்

தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில் தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம் எனக் கருதுவோர் உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

திரைப்படங்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிங்கிலம்&oldid=2484023" இலிருந்து மீள்விக்கப்பட்டது