ஆங்கில இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம் எனப்படுவது ஒரு மேற்கு செருமானிய மொழி. இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி. ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்றியமையாததாக உள்ளது. தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை, பெயர்ச்சொல்(1.Noun, 2.Pronoun), வினைச்சொல்(3.Verb), உரிச்சொல்(4.Adjective, 5.Adverb), இடைச்சொல்(6.Preposition, 7.Conjunction, 8.Interjection). இதனை Parts of speech (சொற்களின் வகை) என்பர்.

பொருளடக்கம்

சொற்களின் வகை(Parts of speech)[தொகு]

ஆங்கிலத்தில் சொற்களின் வகை(Parts of speech) 8 ஆகும். அவை,

 1. Noun
 2. Pronoun
 3. Adjective
 4. Verb
 5. Adverb
 6. Preposition
 7. conjunction
 8. Interjection என்பனவாம்.

பெயர்ச்சொல்[தொகு]

௧.பெயர்ச்சொல்(Noun)[தொகு]

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்கவே உதவுகின்றது. (எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது.

ஆங்கிலப் பெயர்ச்சொற்களின் வகைகள்(Types of Nouns)[தொகு]

1.Proper Nouns

2.Common Nouns

3.Abstract Nouns

4.Collective Nouns

5.Countable Noun

6.Uncountable Nouns

பெயர்ச்சொற்குறிகள்(The Articles)[தொகு]

ஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும்.

௧.நிச்சய பெயர்ச்சொற்குறி (The Definite Article)[தொகு]

The எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது.

 • (எ-டு) the boy, the cap, the cup.
௨.நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (The Indefinite Article)[தொகு]

A, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்பதுத்தப்பட மாட்டாது.

 • (எ-டு) a tree, an apple, a banana.

எண்(Number)[தொகு]

தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை,

௧.ஒருமைப் பெயர்ச்சொல்(Singular Noun)

௨.பன்மைப் பெயர்ச்சொல்(Plural Noun)

 • (எ-டு)
 1. light-lights (விளக்கு-விளக்குகள்)
 2. child-children (குழந்தை-குழந்தைகள்)
 3. candy-candies (இனிப்பு-இனிப்புகள்)

பால்(Gender)[தொகு]

ஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender(ஆண்பால்), feminine gender(பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்).

௧.ஆண்பால்(Masculine gender)[தொகு]

ஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும்.

௨.பெண்பால்(Feminine gender)[தொகு]

பெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும்.

௩.ஒன்றன் பால்(Neuter gender)[தொகு]

ஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால்(Neuter gender) எனப்படும்.

 • (எ-டு)
 1. boy-girl-baby (சிறுவன்-சிறுமி-குழந்தை)
 2. man-woman-child (ஆண்-பெண்-குழந்தை)
 3. bull-cow-calf (காளை-பசு-கன்று)

வேற்றுமை(Case)[தொகு]

ஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, முதலாம் வேற்றுமை(nominative case), இரண்டாம் வேற்றுமை(accusative case), நான்காம் வேற்றுமை(dative case) என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.)

௨.பிரதிப் பெயர்ச்சொல்(Pronoun)[தொகு]

பெயர்ச்சொற்களுக்கு பதிலாக பெயர்ச்சொற்களைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது. (எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.

இடம் தன்னிலை ஒருமை முன்னிலை ஒருமை படர்க்கை ஒருமை தன்னிலை பன்மை முன்னிலை பன்மை படர்க்கை பன்மை கேள்வி வாக்கியம்
Nominative Pronoun I you (thou1) he, she, it we you (y’all2) they who
Objective Pronoun me you (thee1) him, her, it us you (y’all2) them whom (who3)
Possessive Pronoun my your (thy1) his, her, its our your (all y’all’s 2) their whose
Reflexive Pronoun myself yourself (thyself1) himself, herself, itself ourselves yourselves themselves  
Pronominal Adjective mine yours (thine1) his, hers, its ours yours theirs  

வினைச்சொல்[தொகு]

வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை என்பது ஒருவர் செய்யும் செயலாகும். ஆகையால், செயல்களைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

௩.வினைச்சொல்(Verb)[தொகு]

ஒருவர் செய்யும் செயலைக்குரிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது எப்பொழுதும் பெயர்ச்சொல்லைத் தழுவியே, அதனுடன் ஒன்றி வரும்.

வினைப் பிரிவுகள்(Verb classes)[தொகு]

௧.முக்கிய வினை(Main verbs-full verbs)[தொகு]
௨.துணை வினை(Auxiliaries-Auxiliary verbs/helping verbs)[தொகு]

வினைச்சொல் வகைகள்(Types of Verbs)[தொகு]

௧.செயப்படுபொருள் குன்றாவினை(Transitive Verb)[தொகு]

Transitive வினை, "எதை", "யாரை" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறும்.

 • (எ-டு) she ate fish(அவள் மீனைச் சாப்பிட்டாள்) "எதை" என்ற கேள்விக்குப் பதில் "மீனை" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது.
 • (எ-டு) she saw her friend(அவள் தன் தோழியைப் பார்த்தாள்)"யாரை" என்ற கேள்விக்குப் பதில் "தன் தோழியை" என்று கிடைப்பதால் இது transitive வினை எனப்படுகிறது.
௨.செயப்படுபொருள் குன்றியவினை(Intransitive Verb)[தொகு]

Intransitive வினையானது, "எதை" , "யாரை" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறுவதில்லை.

 • (எ-டு) He ran (அவன் ஓடினான்) இது intransitive வினை எனப்படுகிறது.
௩.Modal Verbs[தொகு]
௪.துணை வினை(Auxiliary Verbs)[தொகு]

தடித்த

௫.வாக்கிய வினை(Phrasal Verb)[தொகு]
௬.வினைமுற்று(Finite Verbs)[தொகு]
௭.Infinite Verbs[தொகு]
௮.எச்சம்(Participles)[தொகு]
௯.வினையெச்சம்(Gerunds)[தொகு]

உரிச்சொல்[தொகு]

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். இது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். ஆங்கிலத்தில் உரிச்சொல் இரு வகைப்படும். அவை,

 • ௧.பெயர் உரிச்சொல்
 • ௨.வினை உரிச்சொல்

௪.பெயர் உரிச்சொல்(Adjective)[தொகு]

ஒரு பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adjective எனப்படும்.

 • (எ-டு)
 1. The sky is blue.
 2. He is a tall boy.
 3. That is a big pot.
 • மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள blue, tall, big என்னும் வாத்தைகள் பெயர்ச்சொல்லைப் பற்றி பேசுவதால் அவை இவ்வாக்கியங்களில் adjective(பெயர் உரிச்சொல்) எனப்படும்.

ஆங்கில பெயர் உரிச்சொல் வகைகள்(Types of adjectives)[தொகு]

௧.உடைமைப் பெயர் உரிச்சொல்(Possessive adjective)[தொகு]

(எ-டு) my house(என்னுடைய வீடு), our house(எங்களுடைய வீடு), your house(உன்னுடைய வீடு, உங்களுடைய வீடு), his house(அவனுடைய வீடு), her house(அவளுடைய வீடு), their house(அவர்களுடைய வீடு). my, our, your, his, her, their போன்றவை உடைமைப் பெயர் உரிச்சொற்கள்(Possessive adjective) ஆகும்.

௨.Demonstrative adjective[தொகு]

௩.வினாப் பெயர் உரிச்சொல்(Interrogative adjective)[தொகு]

௫.வினை உரிச்சொல்(Adverb)[தொகு]

ஒரு வினைச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adverb(வினை உரிச்சொல்) எனப்படும்.

 • (எ-டு)
 1. The Sun shines brightly.
 2. The rabbit runs swiftly.
 3. It rains heavily.
 • மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள shines, swiftly, heavily என்னும் சொற்கள் அவ்வக்கியங்களில் உள்ள வினையைச்சொல்லைப் பற்றி பேசுவதால் அவை adverb என்று கூறப்படுகின்றது.

இடைச்சொல்[தொகு]

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வரும்.

௬.இடைபடுஞ்சொல்(Conjunction)[தொகு]

இரண்டு வாக்கியங்களை ஒன்றாக இணைக்கும் சொற்களை ஆங்கிலத்தில் conjunctions என்று அழைப்பர்.

 • (எ-டு) and(மற்றும்), but(ஆனால்), yet(ஆயினும்).

௭.முன்விபக்தி(Preposition)[தொகு]

முன்விபக்தி(Prepositions) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் எழுவாய்க்கு முன்னே எழுதப்படுகின்றன.

 • (எ-டு) on, to, for, by, with.

௮.வியப்பிடைச்சொல்(Interjection)[தொகு]

வியப்பிடைச்சொல்(Interjection) எனப்படுவது பொதுவாக தமிழில் விளி வேற்றுமையின் கீழுள்ள சொற்களைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, Hi!, Hello!, Good morning! போன்ற வாழ்த்துவதற்கு பயன்படும் சில வார்த்தைகளும் இதன் கீழ் வரும்.

 • (எ-டு) ஆஹா!(bravo!), ஐயோ!(alas!), Oh!, Bye!

இடம்(Person)[தொகு]

இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும்.

தன்மை(First person)[தொகு]

 • I (நான்) - தன்மை ஒருமை (First person singular)
 • We (நாம், நாங்கள்) - தன்மை பன்மை (First person plural)

முன்னிலை(Second person)[தொகு]

 • You (நீ) - முன்னிலை ஒருமை (Second person singular)
 • You (நீவீர், நீங்கள்) - முன்னிலைப் பன்மை (Second person plural)

படர்க்கை(Third person)[தொகு]

 • He (அவன்), she(அவள்), it(அது) - படர்க்கை ஒருமை (Third person singular)
 • They (அவர்கள், அவைகள்) - படர்க்கைப் பன்மை (Third person plural)

வினை வாக்கியம்(Voice)[தொகு]

மையக் கட்டுரை: ஆங்கில வினை வாக்கியங்கள்

௧.செய்வினை வாக்கியம்(Active Voice)[தொகு]

ஒரு செயலை எழுவாயின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செய்வினை வாக்கியம் ஆகும்.

 • (எ-டு) Kumar sang this song. (இந்தப் பாடலை குமார் பாடினான்.)

௨.செயப்பாட்டுவினை வாக்கியம்(Passive Voice)[தொகு]

ஒரு செயலைச் செய்யப்படும் பொருளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செயப்பாட்டுவினை வாக்கியம் ஆகும்.

 • (எ-டு) This song was sung by Kumar. (இந்தப் பாடல் குமாரால் பாடப்பட்டது.)
 • Passive voice - Personal passive voice, Impersonal passive voice என இருவகைப்படும்.

Personal passive voice[தொகு]

Impersonal passive voice[தொகு]

௩. நடுவினை வாக்கியம்(Middle Voice)[தொகு]

ஆங்கிலத்தில் "The classic MIDDLE voice"உடன் தொடர்புடைய நடுவினை வாக்கியம்(middle voice) எனப்படும் மூன்றாவது voiceசும் உள்ளது. இதில், எழுவாய் passive voiceசிலும் செய்யப்படு பொருள் active voiceசிலும் இருக்கும். மேலும், அந்த வாக்கியத்திலுள்ள மொத்த அமைப்பும் ஒரு adverbialலைச் சார்ந்து வரும்.

 • (எ-டு)
 1. She does not frighten easily.
 2. This bread slices poorly.
 3. His novels sell well.

எண்ணம் (Mood)[தொகு]

௧.Indicative அல்லது Declarative mood[தொகு]

௨.ஏவல் வினை(Imperative mood)[தொகு]

௩.எதிர்கால வினையெச்சம்(Subjunctive mood)[தொகு]

௪.நிபந்தனை(Conditional mood)[தொகு]

நோக்கம்(Aspect)[தொகு]

ஆங்கில வினைகளின் காலங்களை இக்கீழ்காணும் பட்டியலில் கண்டுகொள்ளலாம். ஆங்கிலத்தில் Prior, Complete, Incomplete என மூன்று Aspect-கள் உள்ளன. இப்பட்டியல் முக்காலங்களிலும் நடக்கும் உண்மைச்சம்பவங்கலையே பிரதிபலிக்கிறது. "Would"ஐ கொண்டு வரும் unreal conditionalகள் உண்மையற்றதால், அவை இங்கு குறிப்பிடப்படவில்லை.

PAST(இறந்த காலம்) PRESENT(நிகழ் காலம்) FUTURE(எதிர் காலம்)
முதலான நோக்கம்(PRIOR ASPECT) Past Perfect Present Perfect Future Perfect
முழுமைபெற்ற நோக்கம்(COMPLETE ASPECT) Simple Past Simple Present Simple Future
முழுமையற்ற நோக்கம்(INCOMPLETE ASPECT) Past Continuous Present Continuous Future Continuous

ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம்(Comparison)[தொகு]

ஆங்கிலத்தில் மூன்று வகையில் ஒப்பிடலாம். அவை, positive degree, comparative degree மற்றும் superlative degree எனப்படும்.

௧.ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree)[தொகு]

ஒரு பொருளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வது positive degree ஆகும்.

 • (எ-டு) The rose is a beautiful flower. (உரோசாப் பூ ஓர் அழகான பூ.) (Positive degree)

௨.இரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree)[தொகு]

ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிடுவது comparative degree ஆகும்.

 • (எ-டு) The rose is more beautiful than the lily. (உரோசாப் பூ லில்லிப் பூவை விட அழகாக உள்ளது.) (Comparative degree)

௩.அனைத்துப் பொருள்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree)[தொகு]

ஒரு பொருளை மற்ற எல்லாப் பொருள்களோடும் ஒப்பிட்டுப் பேசுவது superlative degree ஆகும்.

 • (எ-டு) The rose is the most beautiful flower. (உரோசாப் பூ தான் மிகவும் அழகிய பூ.) (Superlative degree)

காலம்(Tense)[தொகு]

தமிழைப் போலவே ஆங்கில வினைச்சொற்களும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் குறிக்கும். ஆனால், ஆங்கிலத்தில் 16 வித்தியாசமான காலங்கள்(tenses) உள்ளன. அவை,

நிகழ் காலம்(Present tense):
Simple Present
Present Continuous
Present Perfect
Present Perfect Continuous
இறந்த காலம்(Past tense):
Simple Past
Past Perfect
Past Continuous
Past Perfect Continuous
எதிர் காலம்(Future tense):
Simple Future
Future Continuous
Future Perfect
Future Perfect Continuous அல்லது Future Imperfect
நிபந்தனை காலம்(Conditional tense):
Present Conditional
Present Continuous Conditional
Conditional Perfect
Conditional Perfect Continuous

ஆகையால், ஆங்கிலத்தில் காலத்தை இவ்வாறும் வகைப்படுத்தலாம்:

 1. சாதாரண காலம் (Simple tense)
 2. பரிபூரண காலம் (Perfect tense)
 3. தொடர்ச்சியான காலம் (Continuous tense)
 4. பரிபூரண தொடர்ச்சியான காலம் (Perfect continuous tense)

வேற்றுமை(Case)[தொகு]

வேற்றுமை தன்னிலை முன்னிலை படர்க்கை
ஒருமை பன்மை ஒருமை பன்மை கேள்விச் சொல்
ஆண்பால் பெண்பால் ஒன்றன் பால்
Subjective I(நான்) we(நாம்/நாங்கள்) you(நீ/நீங்கள்) he(அவன்) she(அவள்) it(அது) they who(யார்)
Objective me(நான்) us(நாங்கள்) him(அவன்) her(அவளுடைய) them whom(யார்) (colloq. who)
Genitive determiner my(என்னுடைய) our(எங்களுடைய) your(உன்னுடைய/உங்களுடைய) his(அவனுடைய) its(அதனுடைய/அதனுடையது) their(அவர்களுடைய/அவைகளுடைய) whose(யாருடைய/எவருடைய)
nominal mine(என்னுடையது) ours(எங்களுடையது) yours(உன்னுடையது/உங்களுடையது) hers(அவளுடையது) theirs(அவர்களுடையது/அவைகளுடையது)

ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்(Sentence construction)[தொகு]

ஆங்கில வாக்கிய அமைப்பு முறை(Word order)[தொகு]

வாக்கியப் பொருத்தம்(Sentence Agreement)[தொகு]

நிறுத்தற் குறியிடுதல்(Punctuation)[தொகு]

ஆங்கில வாக்கிய வகைகள்(Types of Sentences)[தொகு]

உடன்பாடு வாக்கியம்(Assertive sentence)[தொகு]

கேள்வி/வினா வாக்கியம்(Interrogative sentence)[தொகு]

வினா வாக்கிய வகைகள்(Types of Interrogative sentences)[தொகு]

ஆம்/இல்லை வகை வினாக்கள்(Yes/No type questions)[தொகு]
Wh-வகை வினாக்கள்(Wh-type questions)[தொகு]
பின்தொடுக்கப்படும் வினாக்கள்(Tag questions/Disjunctive questions)[தொகு]

Question tags[தொகு]

ஏவல் வாக்கியம்(Imperative sentence)[தொகு]

வியப்பிடை வாக்கியம்(Exclamatory sentence)[தொகு]

எதிர்மறை வாக்கியம்(Negative sentence)[தொகு]

ஆங்கில வாக்கிய மாற்றம்(Transformation of Sentences)[தொகு]

=== தனிவாக்கியம் Simple comples compund

 Being   As/since   and 

(Simple sentence) === Phrase+Main clause:- Phrase is not getting the SUBJECT and VERB CLAUSE is getting SUBJECT and VERB CLAUSE is getting Main clause and Subordinate clause For example:- Being clever,Raman gets good marks (this is simple sentence.)

Complex sentence:-Subordinate clause+Main clause:- As/since :- As Raman is clever, he gets good marks.


Compound sentence :-Main clause + Main clause :- Raman is clever and he gets good marks.

தொடர்வாக்கியம்(Complex sentence)[தொகு]

கலவைவாக்கியம்(Compound sentence)[தொகு]

நேர்கூற்று-அயற்கூற்று[தொகு]

தலைப்பு எழுத்துக்கள்[தொகு]

நேர்கூற்று(Direct Speech)[தொகு]

அயற்கூற்று(Indirect Speech)[தொகு]

அலகிடுதல்(Syllabification)[தொகு]

ஆங்கில மரபு வாக்கியங்கள்(Idiomatic Expressions)[தொகு]

முக்கியக் குறிப்புகள்[தொகு]

 • தமிழுக்கு உள்ளது போல் ஆங்கிலத்திற்குத் தனி எண்களைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள் இல்லை. அது Indo-Arabic எண்களையே பயன்படுத்துகிறது.
 • தமிழைப் போல் ஆங்கிலத்தில் தன்மைப் பன்மையில் inclusive pronoun, exclusive pronoun என இரண்டு வெவ்வேறு வடிவங்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. நாம் என்பது inclusive pronoun, மற்றும் நாங்கள் என்பது exclusive pronoun ஆகும். ஏனெனில், 'நாம்' என்பது சொல்வோரை (தன்மைப் பன்மை) மட்டுமின்றி கேட்போரையும்(முன்னிலை ஒருமை/பன்மை) சேர்த்துக்கொள்கிறது. ஆனால், 'நாங்கள்' என்று கூறும் பொழுது அது சொல்வோரை (தன்மைப் பன்மை) மட்டுமே குறிக்கிறது; கேட்போரை(முன்னிலை ஒருமை/பன்மை) சேர்த்துக்கொள்வதில்லை.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

l http://aangilam.blogspot.in/

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_இலக்கணம்&oldid=1765660" இருந்து மீள்விக்கப்பட்டது