சனநாயகக் கட்சி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜனநாயகக் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஜனநாயகக் கட்சி
Democratic Party
சிங்களம் nameප්‍රජාතන්ත්‍රවාදී පක්ෂය
நிறுவனரும் தலைவரும்சரத் பொன்சேகா
தொடக்கம்1 ஏப்ரல் 2013 (2013-04-01)
கொள்கைதாராண்மையியம்
நிறங்கள்     ஊதா
இலங்கை நாடாளுமன்றம்
1 / 225
இலங்கை மாகாணசபைகள்
17 / 455
தேர்தல் சின்னம்
எரியும் விளக்கு
இணையதளம்
www.democraticparty.lk

சனநாயகக் கட்சி (Democratic Party, ஜனநாயகக் கட்சி) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[2]

மாகாண சபைத் தேர்தல், 2013[தொகு]

சனநாயகக் கட்சி முதற் தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வடக்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. இவற்றில் வடமேற்கு மாகாணத்தில் 46,114 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மத்திய மாகாணத்தில் 45,239 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 170 வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.

மாகாணசபைத் தேர்தல், 2014[தொகு]

2014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் இக்கட்சி போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியது. தெற்கு மாகாணசபையில் 109,032 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மேற்கு மாகாணசபையில் 203,767 வாக்குகளைப் பெற்று 9 இடங்களையும் கைப்பற்றியது. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 6.076 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka's former army chief registers a new political party". colombopage (12 மார்ச் 2013). மூல முகவரியிலிருந்து 2013-03-14 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-05-22.
  2. "Fonseka’s party wins recognition". தி இந்து (1 ஏப்ரல் 2013). பார்த்த நாள் 2013-05-22.