சிவப்புவால் கெளிறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவப்புவால் கெளிறு
புதைப்படிவ காலம்:Miocene - Recent
[1]
Phractocephalus hemioliopterus2.JPG
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: கெளிறு
குடும்பம்: Pimelodidae
பேரினம்: சிவப்புவால் பூனைமீன்
அகாசி, 1829
இனம்: P. hemioliopterus
இருசொற் பெயரீடு
Phractocephalus hemioliopterus
(புளொக் & சினைடர், 1801)
வேறு பெயர்கள்
  • Silurus hemioliopterus Bloch & Schneider, 1801
  • Pimelodus grunniens Humboldt, 1821
  • Rhamdia grunniens Humboldt, 1821
  • Phractocephalus bicolor Spix & Agassiz, 1829

சிவப்பு வால் கெளிறு (redtail catfish, Phractocephalus hemioliopterus), நீளமான மீசை (நீண்ட- துடைப்பம் ) கொண்ட கெளிறு மீன் ஆகும். வெனிசுவேலாவில் இது கஜாரோ என்றும் பிரேசிலில் பைராரா என்றும் அழைக்கப்படுகிறது,[2] டூபி மொழிச் சொற்களான பைரா, அராரா ஆகியவற்றிலிருந்து உருவாகிறது. இது ஃபிராக்டோசெபாலஸ் பேரினத்தின் கீழ்க் காணப்படும் ஒரே ஒரு சிற்றினமாகும். இம்மீனாது நீர் வாழ் உயிரி காட்சியகத்தில் காணப்படும் பொதுவான மீனாகும். நீருயிரி காட்சி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தபோதும், இதனுடைய உருவம் மிகப்பெரியவை என்பதால் அனைத்துவகையான நீர் உயிரி காட்சியகங்களுக்கு ஏற்றதாக இல்லை.[3]

புதைபடிவ இனங்கள்[தொகு]

ஃபிராக்டோசெபாலஸ் பேரினத்தில், சிவப்புவால் கெளிறு ஒரே ஒரு உயிருள்ள பிரதிநிதி என்றாலும், புத்துயிரூழியின் முற்பிரிவின் (மியோசின்) இதனுடைய பிற இனக்குழுக்கள் வாழ்ந்தது புதை படிவ எச்சங்களிலிருந்து அறியப்படுகிது. பி. நாசி எனும் சிற்றினம் வெனிசுவேலாவின் உருமாக்கோவில் உள்ள உருமாக்கோ உருவாக்கத்திலிருந்து 2003 இல் விவரிக்கப்பட்டது. மற்றொரு புதைபடிவ இனம், பி. அக்ரோர்னடஸ் பிரேசிலின் ஏக்கர், சோலிமீஸ் உருவாக்கம் என்பதிலிருந்து அறியப்படுகிறது. [1] [2] இந்த பேரினம் குறைந்தபட்சம் 13.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகும்.

(கனோளி) நீந்திக்கொண்டிருக்கும் சிவப்புவால் கெளிறு

விளக்கம்[தொகு]

ஃபிராக்டோசெபாலஸ் ஹீமியோலியோப்டெரஸ் சுமார் 1.8 m (5 ft 11 in) நீளமும் சுமார் 80 kg (180 lb) வரை எடை உள்ளதாக இருக்கும்.[4] இருப்பினும் இது விதிவிலக்காக அரிதானதாக உள்ளது. பெரும்பாலானவை சராசரி அளவான 3.5–4.5 அடிகள் (1.1–1.4 m) நீளம் உள்ளவை. இந்த வண்ணமயமான பெரிய கேட்ஃபிஷ்கள் பழுப்பு நிற முதுகில், மஞ்சள் நிற பக்கங்களும் ஆரஞ்சு-சிவப்பு முதுகு துடுப்பு மற்றும் வால் துடுப்புகளை (எனவே பொதுவான பெயர்) கொண்டுள்ளது. இதன் மேல் தாடையில் ஓர் இணை பார்பல்களையும், கீழ் தாடையில் இரண்டு இணைகளையும் கொண்டுள்ளது.

பரவல் மற்றும் வாழ்விடம்[தொகு]

இந்த மீன் தென் அமெரிக்காவின் அமேசான், ஓரினோகோ மற்றும் எசெக்விபோ நதிப் படுகைகள், ஈக்வடார், வெனிசுலா, கயானா, கொலம்பியா, பெரு, சுரினாம், பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[2] நன்னீரில் மட்டுமே காணப்படும் இந்த மீன்கள் பெரிய ஆறுகள், நீரோடைகள் மற்றும் ஏரிகளில் வாழ்கிறது. [3]

மனிதர்களுடனான உறவு[தொகு]

இந்த மீன் இனம் (ரெட்டெயில் கேட்ஃபிஷ்) உருவத்தில் பெரியதாக உள்ளதால், விளையாட்டு மீனாகக் கருதப்படுகிறது. பன்னாட்டு விளையாட்டு மீன் கழகத்தின் (ஐ.ஜி.எஃப்.ஏ) உலக சாதனை பட்டியலில் பிரேசிலிய கில்பர்டோ பெர்னாண்டஸுக்கு சொந்தமானது மீன் 56 கிலோ (123   lb 7 oz) எடையுடன் சாதனை புரிந்துள்ளது. [5]

ரெட்டெயில் கேட்ஃபிஷின் இறைச்சி கருப்பு நிறத்தில் உள்ளதால் பூர்வீக வாசிகள் இம்மீன்களைச் சாப்பிடுவதில்லை. [6]

தாய்லாந்தில் பொது பிளெகோ, வரிக்குதிரை திலேபியா மற்றும் அலிகேட்டர் கார் போன்ற மீன்கள் மனிதர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது போல சிவப்புவால் பூனை மீனும் அறிமுகப்படுத்தப்பட்டது.[7] சோப்ரல் சாண்டோஸ் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியபோது அதில் பயணித்த பலர் மர்மமான முறையில் நீரில் மூழ்குவதற்கு இம்மீனே காரணம் என்று நம்பப்படுவதால் இம்மீன் குறித்து அச்சம் சில இடங்களில் காணப்படுகிறது.

மீன்காட்சியகத்தில்[தொகு]

மீன்காட்சியகத்தில் உள்ள பிரக்டோசெபாலஸ் ஹெமியோலியோப்டெரஸ்

ரெட்டெயில் கேட்ஃபிஷ் என்பது பொது மீன்காட்சியகங்களில் அமேசானிய பிரிவில் மிகவும் பிரபலமான மீன் ஆகும். அங்கு அவை பெரும்பாலும் கொலோசோமா மேக்ரோபோமம் அல்லது பக்கு மற்றும் பிற பெரிய கேட்ஃபிஷ் உள்ளிட்ட பெரிய மீன்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

மீன் காட்சி சாலைகளில் இம்மீனுடைய இளம் உயிரிகள் அளவில் சிறிது என்ற அடிப்படையில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சியங்களில் மீன்களுக்கு நன்கு உணவளிக்கக்கூடிய நிலையில் இம்மீன்கள் மீன்கள் மிக வேகமாக வளரக்கூடும்.[6]இம்மீன் முழு வளச்சியினை அடையும் சூழலில் மீன் வளர்த் தொட்டியானது குறைந்த பட்சம் 10,000 l (2,600 US gal) கொள்ளளவு உடையதாக இருக்கவேண்டும்.[3] இந்த கேட்ஃபிஷுக்கு வாராந்திர உணவு பொருத்தமானது; அதிக அளவு உணவூட்டம் இம் மீன் இனத்தின் இறப்புக்கு பொதுவான காரணமாக உள்ளது.[8] இது அதிக அளவில் மீன்களை வேட்டையாடியோ, இறந்த மீன்களை உண்டோ தன் உணவுத் தேவையினை பூர்த்தி செய்கிறது. ஒரு சில அங்குல நீளமுள்ள சிறிய மீன்களும், டெட்ராஸ் போன்ற பிற பொதுவான மீன்களை வேட்டையாடி உண்ணும் தன்மையுடையன. எனவே இந்த மீனை பெரிய மீன்களுடன் காட்சிப்படுத்துவதே பொருத்தமானது. ரெட்டெயில் கேட்ஃபிஷ் கடித்துச் சாப்பிட முடியாத பொருட்களை விழுங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. விழுங்கிய பொருட்களை மீள் அசைச் செய்ய முயல்வதால் இம்மீன்களுக்கு ஒருவித செரித்தல் தொடர்பான சிக்கலை ஏற்படக்கூடும், இதனைத் தவிர்க்கத் தேவையற்ற பொருள்களை மீன் காட்சித் தொட்டியில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உணவிற்கான மீனை உற்பத்திச் செய்யும் நோக்கில், டைகர் ஷோவெல்னோஸ் சூடோபிளாடிஸ்டோமா எஸ்பி போன்ற பிற மீன்களுடன் ரெட்டெயில் கேட்ஃபிஷ் கலப்பினப்படுத்தப்பட்து. இம்முயற்சியில் இயக்குநீர் பயன்படுத்தப்பட்டன. இந்த கலப்பின மீன்கள் பல்வேறு வகையான பொதுவான பெயர்களில் மீன் காட்சி சாலையில் பொழுதுபோக்கு காட்சிப்பொருளாகவும் உள்ளன. [8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்புவால்_கெளிறு&oldid=3026911" இருந்து மீள்விக்கப்பட்டது