அகச்சுரப்பித் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
{{சான்றில்லை}} |
||
[[படிமம்:Illu endocrine system-ta.svg|right|thumb|227px|முக்கியமான அகச்சுரப்பிகள். ([[ஆண் (பால்)|ஆண்]] வலம், [[பெண்]] இடம்.) '''1.''' [[கூம்புச் சுரப்பி]] '''2.''' [[மூளையடிச் சுரப்பி]] '''3.''' [[கேடயச் சுரப்பி]] '''4.''' [[தைமசு சுரப்பி]] '''5.''' [[அண்ணீரகச் சுரப்பி|அண்ணீரகச் சுரப்பி (அட்ரீனல் சுரப்பி)]] '''6.''' [[கணையம்]] '''7.''' [[சூலகம்|சூல்பை]] '''8.''' [[விந்துச் சுரப்பி]]]] |

'''அகச்சுரப்பித் தொகுதி''' அல்லது '''அகஞ்சுரக்குந் தொகுதி''' (Endocrine system) என்பது [[இயக்குநீர்]]கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, [[வளர்சிதைமாற்றம்]], வளர்ச்சி, [[இழையம்|திசுக்களின்]] செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை [[உட்சுரப்பியல்|அகச்சுரப்பியியல்]] எனப்படுகின்றது. |

வரிசை 44: | வரிசை 44: | ||
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறந்மிக்கவையாகக் காணப்படுகின்றன. |
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறந்மிக்கவையாகக் காணப்படுகின்றன. |
||
== |
==மூளையடிச் சுரப்பி(Pituitary Gland) == |
||
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் |
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் மூளையடிச் சுரப்பி ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால் இது நாலமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது. |
||
=== |
===மூளையடிச் சுரப்பியின் கதுப்புகள்=== |
||
மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது. |
|||
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்==== |
====அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்==== |
||
வரிசை 61: | வரிசை 61: | ||
# ஆக்சிடோசின் : இவ்வியக்குநீர் பெண்களில் கருப்பையைச் சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தைப்பேறு நிகழ்வை விரைவுபடுத்துகின்றது. |
# ஆக்சிடோசின் : இவ்வியக்குநீர் பெண்களில் கருப்பையைச் சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தைப்பேறு நிகழ்வை விரைவுபடுத்துகின்றது. |
||
# வாசோ பிரக்சின் மற்றும் சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone) : இந்த வகை இயக்குநீர், நீர் மீள உறிஞ்சப்படவும் அடர்த்தியான சிறுநீரைக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்திடவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வியக்குநீரில் பாதிப்புகள் ஏற்பட்டுச் சுரப்பின் அளவு குறையும்போது, மிகை நீரிழிவு நோய் (Diabetes insipidue) உண்டாகின்றது. இதன் காரணமாக, சிறுநீர் நீர்த்து அதிக அளவு வெளியேறுகிறது.<ref>அறிவியல் பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 45.</ref> |

==கூம்புச் சுரப்பி (Pineal Gland)== |
|||
இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது. |
|||
== இவற்றையும் பார்க்கவும் == |
== இவற்றையும் பார்க்கவும் == |
09:13, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகச்சுரப்பித் தொகுதி அல்லது அகஞ்சுரக்குந் தொகுதி (Endocrine system) என்பது இயக்குநீர்கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.
அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
சைகைகளின் வகைகள்
கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.
அகங்சுரக்கும் சுரப்பிகளும் அவற்றினால் இயக்குநீர்களும்
பரிவகக் கீழ்
இயக்குநீர்
வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறந்மிக்கவையாகக் காணப்படுகின்றன.
மூளையடிச் சுரப்பி(Pituitary Gland)
நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் மூளையடிச் சுரப்பி ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால் இது நாலமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
மூளையடிச் சுரப்பியின் கதுப்புகள்
மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்
- வளர்ச்சி இயக்குநீர் (Somatotrophic Harmone): இந்த இயக்குநீர் பொதுவாக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இதன் குறைவான சுரப்புக் காரணமாகச் சிறியவர்களுக்கு, வளர்ச்சிக் குன்றிக் குள்ளத் தன்மையும், மிகைச் சிறப்புக் காரணமாக அத்தகையோருக்கு, வளர்ச்சி மிகுந்து அசுரத் தன்மையும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இம்மிகைச் சுரப்பினால் கை கால்கள், கீழ்த்தாடை ஆகியவை நீண்டதாக (அக்ரோமேகலி) அமையும்.
- கேடயச் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் (Thyrotrophic Harmone): இந்த வகை இயக்குநீர் கேடயச் சுரப்பியின் வளர்ச்சியைத்தூண்டி, கேடயச் சுரப்பியக்குநீர் (Thyroxine) உற்பத்தியை அதிகரிக்கிறது.
- அண்ணீரகப் புறணியைத் தூண்டும் இயக்குநீர் (Adrenocorticotropic Hormone) : அல்டோஸ்டீரோன் (Aldosterone) மற்றும் கார்டிசோன் இயக்குநீர் உற்பத்தியை இது தூண்டுகின்றது.
- பாலிக்கிள் உயிர்மியைத் தூண்டும் இயக்குநீர் : பெண்களில் கிராமியன் பாலிக்கிள் அண்டச் சுரப்பியின் முதிர்வடைவதைத் தூண்டி அண்ட உற்பத்தியை அதிகரிக்கின்றது. அதுபோல், ஆண்களில் விந்து உருவாதலைத் தூண்டுகிறது.
- லூட்டினைசிங் இயக்குநீர் (பெண்) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (ஆண்) : கிராபியன் பாலிக்கிளிலிருந்து அண்டம் வெளியேறுதல் என்னும் அண்ட விடுபடும் நிகழ்விற்கு லூட்டினைசிங் இயக்குநீர் பயன்படுகிறது. ஈத்திரோசென் (Estrojen), புரோ ஈத்திரோசென் (Progesterogen) முதலான பெண்மை இயக்கு நீர்களின் உற்பத்திக்கு அடிகோலுகிறது. ஆண்களில் இடையீட்டுச் செல்கள், ஆண் இன இயக்குநீரான இரெசுத்தோசத்தெரோன் (Testosterone) இயக்குநீரைச் சுரக்கச் செய்கின்றன.
- பால் சுரப்பு இயக்குநீர் (Lactogenic hormone) : இது பெண்களில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தைப் பெற்றிற்குப் பின்னர், பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.[1]
நியுரோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்
- ஆக்சிடோசின் : இவ்வியக்குநீர் பெண்களில் கருப்பையைச் சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தைப்பேறு நிகழ்வை விரைவுபடுத்துகின்றது.
- வாசோ பிரக்சின் மற்றும் சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone) : இந்த வகை இயக்குநீர், நீர் மீள உறிஞ்சப்படவும் அடர்த்தியான சிறுநீரைக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்திடவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வியக்குநீரில் பாதிப்புகள் ஏற்பட்டுச் சுரப்பின் அளவு குறையும்போது, மிகை நீரிழிவு நோய் (Diabetes insipidue) உண்டாகின்றது. இதன் காரணமாக, சிறுநீர் நீர்த்து அதிக அளவு வெளியேறுகிறது.[2]
கூம்புச் சுரப்பி (Pineal Gland)
இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
- புறச்சுரப்பித் தொகுதி (Exocrine gland)