சாரா ஜோசஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாரா ஜோசஃப் (பிறப்பு 1946) ஒரு மலையாள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை ஆசிரியர்.[1] இவர் தனது ஆலாகயூடே பெண்மக்கள் எனும் நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றுள்ளார்.[2] மேலும் இதே நாவலுக்காக வயலார் விருதும் பெற்றுள்ளார். இவர் கேரளாவில் பல பெண்ணிய இயக்கங்களை முன்னின்று நடத்தியுள்ளார். மனுஷி எனும் அமைப்பை சிந்தனைப்பெண்களுக்காக இவரி நிறுவியுள்ளார்.[1][3] இவர் மலையாளத்தில் சிறந்த கதை சொல்லுபவரான மாதவிக்குட்டியுடன் இணைந்து செயல்படுபவர்.[4] இவர் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார், மேலும் 2014 மக்களவைத்தேர்தலில் திரிசூர் பகுதியில் இக்கட்சி சார்பாக போட்டியிட உள்ளார்.

வாழ்கைக்குறிப்பு[தொகு]

சாரா ஜோசஃப் 1946ல் திரிசூரின் குரியச்சிர என்னும் பகுதியில் ஒரு பழமையான கிறிஸ்துவ குடும்பத்தில் லூயிஸுக்கும் கொச்சுமரியமுக்கும் மகளாக பிறந்தார்.[1][4] இவர் ஒரு ஆசிரியராக தனது பணியை துவங்கினார். பின்னர் மலையாளத்தில் முதுகலைப்படிப்பில் சேர்ந்தார் பின் கேரள கல்லூரிகளுக்கான சேவையில் தன்னை இணைத்துக்கொண்டார். பட்டாம்பியிலுள்ள சமஸ்கிருத கல்லூரியில் மலையாள பேராசிரியராக பணியாற்றினார். அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் திரிசூர் மாவட்டத்தில் முலன்குன்னத்துக்காவு என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.

சாரா ஜோசஃப் தனது சமூக சேவைகளால் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.[5] கேரளத்தில் பல சமூகம் சார்ந்த போராட்டங்களை இவர் முன்னின்று நடத்தியுள்ளார். இவர் தீவிர இடது சாரி ஆதரவாளர் ஆனால் ஜனவரி 2014ல் ஆம் ஆத்மி[6] கட்சியில் இணைந்தார். மேலும் மக்களவைத்தேர்தலில் திரிசூர் பகுதியில் இக்கட்சி சார்பாகவும் போட்டியிட உள்ளார்[7].

இலக்கிய வாழ்க்கை[தொகு]

சாரா ஜோசஃப் ன் இலக்கிய வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது, அதாவது அவர் உயர் நிலை பள்ளியில் படிக்கும்போதே. அப்போதே இவர் தனது கவிதைகளி பெரிய கவிஞர்களிடம் ஒப்புவித்து அதற்கான கருத்துக்களை பெற்று கொண்டார். வைலோப்பில்லி ஸ்ரீதர மேனன் மற்றும் எடசேரி கோவிந்தன் நாயர்[1] போன்ற கவிஞர்களார் பாராட்டப்பட்டார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பிறகு உறுதியில்லா நிலையிலிருந்து புனைக்கதைகள் மற்றும் சிறு கதைகள் எழுதத்துவங்கினார்.இவரது சிறுகதைத்தொகுப்பு பாபத்தரா இவரின் பெண்ணிய எழுத்துக்களுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது [3]. இவர் தனது நாவல்களான ஆலாஹயுடே பெண்மக்கள், மாட்ராத்தி மற்றும் ஒதப்பு ஆகியவற்றை முத்தொகுப்பாக பிரசுரித்தார். இவரது எழுத்துக்கள் முக்கியமாக தாராளமயமாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் தரப்பை சக்தி வாய்ந்த முறையில் முறையிடுவதாகவும் இருக்கும். ஒதப்பு எனும் நாவல் பெண்களுக்கு தன் இனத்தின் மீது எதிர்பார்க்கப்படும் உண்மை புரிதலுக்கான ஏக்கம் புலப்படுகிறது. இவரது ஒதப்பு நாவல் (The Scent of the Other Side) என ஆங்கிலத்தில் வால்சன் தம்பு என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆலாஹயுடே பெண்மக்கள் நாவல் இவருக்கு மூன்று முக்கிய விருதுகளை பெற்று தந்துள்ளது அவை கேரள சாகித்திய அகாதமி விருது, கேந்திர சாகித்திய அகாதமி விருது மற்றும் வயலார் விருது.இந்நூலை நிர்மால்யா(மணி,ஊட்டி)என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 2011 ல் இவர் முட்டத்து வர்க்கி விருதை , பாபத்தரா எனும் தலைப்பில் வெளியான தனது சிறு கதைத்தொகுப்புக்காக பெற்றார். ராமாயணத்தை ஆழ்ந்து வாசித்து இவர் விமர்சித்த ராமாயண கதகள் விமர்சன ரீதியாக இவருக்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்தது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆக்ஸ் போர்டு பிரசுரத்தால் பிரசுரிக்கப்பட்டது.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ^ Jump up to:a b c d Panjikaran, Mariamma. "Sarah Joseph - A writer of women, for women". Government of Kerala. Retrieved 20 March 2010.
  2. ^ Jump up to:a b "Sarah Joseph bags Vayalar Award". Chennai, India: The Hindu. 10 October 2004. Retrieved 20 March 2010.
  3. 3.0 3.1 ^ Jump up to:a b "Women's Writing - Sarah Joseph". womenswriting.com. Retrieved 20 March 2010.
  4. 4.0 4.1 ^ Jump up to:a b D. Babu Paul (19 July 2009). "Cross Examination". Indian Express. Retrieved 20 March 2010.
  5. ^ "Kerala opens up to AAP, writer-activist Sara Joseph to join Arvind Kejriwal". India Today. January 11, 2014. Retrieved March 2, 2014.
  6. ^ "Sara Joseph joins AAP". The Hindu. January 13, 2014. Retrieved March 2, 2014.
  7. ^ "AAP fields author Sara Joseph against Chacko". The Hindu. March 2, 2014. Retrieved March 2, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_ஜோசஃப்&oldid=2339401" இலிருந்து மீள்விக்கப்பட்டது