காக்கநாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்கநாடன்

ஜார்ஜ் வர்கீஸ் காக்கநாடன் (ஏப்ரல் 23, 1935 - அக்டோபர் 19, 2011.[1]) சாகித்ய அகாதமி விருது பெற்ற[2] மலையாள எழுத்தாளர்களில் புகழ் பெற்றவர். சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதி வந்த காக்கநாடன் நவீன மலையாள இலக்கியத்திற்கு வித்திட்டவராக அறியப்படுகிறார்.

பணி வாழ்வு[தொகு]

திருவல்லாவில் பிறந்து கொட்டாரக்கராவில் வாழ்ந்த காக்கநாடன் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தென்னக இரயில்வேயில் அதிகாரியாக சேர்ந்தார். பத்தாண்டுகள் இரயில்வேயில் பணி புரிந்த காக்கநாடன் பின்னாட்களில் தில்லியில் இரயில்வே அமைச்சகத்தில் பணிபுரிந்தார். இயற்பியலில் தமக்கிருந்த நாட்டத்தால் பணியைத் துறந்து செருமனிக்குப் பயணமானார். அங்கு இயல்பியல் ஆய்வுகளை மேற்கொண்டு முடிக்காது பகுதியிலேயே திரும்பினார். 1984ஆம் ஆண்டு தமது ஒரோதா என்ற புதினத்திற்காக கேரள சாகித்திய விருது பெற்றார். 1960களிலும் 70களிலும் மலையாள இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. காக்கநாடன் காலமானார் பரணிடப்பட்டது 2011-10-20 at the வந்தவழி இயந்திரம் நக்கீரன் செய்தி
  2. "Kakkanadan not elated at winning award". The Hindu. December 25, 2005. Archived from the original on 2006-03-02. https://web.archive.org/web/20060302112507/http://www.hindu.com/2005/12/25/stories/2005122506700500.htm. பார்த்த நாள்: 2008-12-28. 
  3. "Novelist Kakkanadan passes away". The Hindu. Oct 19, 2011. http://www.thehindu.com/arts/article2550870.ece. பார்த்த நாள்: 2011-10-19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கநாடன்&oldid=3239072" இருந்து மீள்விக்கப்பட்டது