ஒ. வே. விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓ. வி. விஜயன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ. வே. விஜயன்
பிறப்பு(1930-07-02)2 சூலை 1930
பாலக்காடு, மலபார் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு30 மார்ச்சு 2005(2005-03-30) (அகவை 74)
தொழில்புதின ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், கேலிச்சித்திரர்]], பத்திரிகையாளர்
தேசியம்இந்தியாஇந்தியன்
வகைபுதினம், சிறுகதை, கட்டுரை
கருப்பொருள்சமூக அம்சங்கள்
இலக்கிய இயக்கம்நவீனத்துவம், மந்திர யதார்த்தவாதம்
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்ம பூஷண்
கேந்திரா சாகித்திய அகாதமி விருது
கேரள சாகித்திய அகாதமி விருது
வயலார் விருது
முட்டத்து வர்க்கி விருது
துணைவர்தெரசா விஜயன்
பிள்ளைகள்மது விஜயன்

ஒ. வே. விசயன்' என்றழைக்கப்படும், ஒற்றபிளாக்கல் வேலுக்குட்டி விஜயன் (Ottaplackal Velukkuty Vijayan) (யூலை 2, 1930[1]-மார்ச் 30, 2005[2]) இந்தியாவின் மலையாள மொழியின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் அறியப்படுகிறார். இவர் எழுதிய "பாதிரியார் கோன்சாலேசிடம் கூறுங்கள்" என்ற சிறுகதையே இவரது, [3] முதல் இலக்கிய முயற்சியாகும். 6 புதினங்கள், 9 குறுங்கதைகள், மற்றும் 9 கட்டுரைகள் எழுதியுள்ளார். "கசாக்கின் இதிகாசம்" என்ற நாவல் சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. [4].

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

விசயன், இந்தியாவின் கேரளா மாநிலம் கோழிக்கோடு விளயஞ்சாதனூர் என்னுமிடத்தில், 1930 சூலை 2ஆம் திகதி பிறந்தார். விசயன் பிறந்த 7ம் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனது குழந்தை பருவத்தை அறையிலேயே கழிக்க நேர்ந்தது. இவரது தந்தை ஓ. வேலுக்குட்டி, இந்திய மதராஸ் மாகாண மலபார் காவல் துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். இவரது இளைய சகோதரி ஓ. வி உஷா மலையாள கவிஞர் ஆவார்.[5] விசயன் மழலைகல்வியை பெரும்பாலும் வீட்டிலேயே பயின்றார். 12வது அகவையில், மலபார் கோட்டக்கல் ராஜாஸ் உயர்நிலை பள்ளியில் நேரிடையாக 6ஆம் வகுப்பில் இனைந்து பயின்றார். பள்ளிக்குச் செல்லா காலங்களில் முறைசாரா கல்விகற்க அவரது தந்தை ஏற்பாடு செய்திருந்தார். அடுத்து வந்த காலங்களில், வேலுக்குட்டி பணிமாற்றத்தால் பாலக்காடு கொடுவாயூர் பகுதிக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள பள்ளியில் சேர்ந்தார். விசயன், பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் (Victoria College) இளங்கலைபட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் ( Presidency College, Madras) ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[6]

இலக்கிய வாழ்க்கை[தொகு]

1969ல் வெளியான, "கசாக்கின் இதிகாசம்" (The Legends of Khasak), என்ற நாவல் ஓ.வி. விசயனின் முதல் நாவலாகும் அது மலையாள மொழியில் ஒரு இலக்கிய பெரும்புரட்சியை ஏற்படுத்திய இந்நாவல், 12 ஆண்டுகள் எழுதப்பெற்றது. ("கசாக்கின் இதிகாசம்",முந்தைய கசாக்,[7] பிந்தைய கசாக் என இரு பிரிவுகளைகொண்டது)

சான்றாதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ._வே._விஜயன்&oldid=3546836" இருந்து மீள்விக்கப்பட்டது