திக்கோடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. குஞ்சானந்தன் நாயர் (பிப்ரவரி 15, 1916 – ஜனவரி 28, 2001) அவரது புனைப்பெயரான திக்கோடியன் என்ற புனைப்பெயரால் நன்கு அறியப்பட்டவரான இவர் இந்திய நாடக ஆசிரியரும் நாவலாசிரியரும் பாடலாசிரியரும் மற்றும் மலையாளத்தின் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். வானொலி நாடகங்களின் வகைக்கான பங்களிப்புகளுக்காக அவர் அறியப்பட்டார். இவரது சுயசரிதை, அரங்கு கனாதா நாடன் (மேடையில் இருந்திராத நடிகர்), இது சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் மலபாரின் சமூக-கலாச்சார வளர்ச்சியை விவரிக்கும் வகையில் அவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. கேந்திரிய சாகித்ய அகாதமி விருது, சுயசரிதைக்கான கேரள சாகித்ய அகாதமி விருது, வயலார் விருது மற்றும் ஒடக்குழல் விருது உள்ளிட்ட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

சுயசரிதை[தொகு]

திக்கோடியான் பி குஞ்சானந்தன் நாயர், 1916 பிப்ரவரி 15, அன்று பிறந்தார் Thikkodiதென்னிந்திய மாநிலமான கேரளாவின்,கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு சிறிய குக்கிராமமான திக்கோடி என்ற ஊரில், புத்தியேதாத் குஞ்சப்பா நாயர் மற்றும் பி. நாராயணி அம்மா ஆகியோருக்கு பிறந்தார். [1] அவர் சிறுவனாக இருந்தபோது பெற்றோரை இழந்தார். நாடகத்தின் ஆர்வலராக இருந்த அவரது தாத்தாவால் வளர்க்கப்பட்டார். [2] கொயிலாண்டி பாஸல் மிஷன் நடுநிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்து, 1936 இல் தனது தான் படித்தா ஒரு பள்ளியில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு, அவர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அந்தப் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1938 இல் ஒரு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார். பின்னர், அவர் பாரத் சேவ சங்கம் மற்றும் தேவதர் மலபார் புனரமைப்பு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்தார். அங்கு அவர் கே கேளப்பன் மற்றும் வி.ஆர்.நாயனாருடன் இணைந்து பணியாற்றினார். [3] மேலும் 1942 ஆம் ஆண்டில் நாயனரால் நிறுவப்பட்ட அனாதை இல்லமான நயனார் பாலிகா சதானத்தில் சிலகாலம் தங்கி பணிபுரிந்தார். [4] இந்த நேரத்தில்தான், தினபிரபா நாளிழதலில் சேர்ந்தார். 1948 வரை அங்கு பணியாற்றினார். 1950 ஆம் ஆண்டில், அவர் அகில இந்திய வானொலியில் ஒரு எழுத்தாளராக சேர்ந்தார். வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை 1979 இல் ஓய்வு பெறும்வரை ஒரு நாடக தயாரிப்பாளராக இருந்து வந்தார்.

திக்கோடியன் பார்வதி என்பவரை 1942 இல் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு புஷ்பா என்ற மகள் இருந்தார். [5] [6] அவர் 2001 ஜனவரி 28, அன்று தனது 84 வயதில் கோழிக்கோடு தனது இல்லத்தில் காலமானார். [1]


பணிகள்[தொகு]

பி. குஞ்சானந்தன் நாயர் ஆனந்த் என்ற புனைப் பெயரைப் பயன்படுத்தி தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார் . அவரது முதல் கவிதை வீந்தம் காரையத்தே என்பது மாத்ருபூமியில் வெளியிடப்பட்டது. பின்னர், அவர் நையாண்டிகளை எழுதினார். [7] புகழ்பெற்ற நகைச்சுவையாளர், சஞ்சயன், அவற்றில் சிலவற்றை விஸ்வதீபம் வார இதழில் வெளியிட்டார். திக்கோடியன் என்ற புனைப்பெயரை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார். [1] கோழிக்கோடு அகில இந்திய வானொலி நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றும் போது 1950 களின் முற்பகுதியில் நாடகங்களையும் எழுதினார். அவரது நண்பர்கள், உருப், எஸ்.கே.பொட்டெக்கட் . என்.வி.கிருஷ்ணவாரியர், எம்.வி.தேவன், வி. அப்துல்லா மற்றும் கே.ஏ. கொடுங்கல்லூர் ஆகியோர் நாடகங்களை எழுத ஊக்குவித்தனர். அவர் ஜீவிதம் என்ற நாடகத்தை எழுதினார், இது கேந்திர கால சமிதி நடத்திய நாடக போட்டியில் பரிசை வென்றது. [8]

பஜய பந்தம், அட்டுபோயா கன்னி, புஷ்பவிருஷ்டி, மகாபாரதம் மற்றும் கன்யாதனம் போன்ற 25 க்கும் மேற்பட்ட நாடகங்களில் இது முதன்மையானது. [9] நாடகங்களைத் தவிர, சுவன்னா கடல், அஸ்வாஹ்ரிதயம், பஜஸ்ஸியுடே பதவல் உள்ளிட்ட நாவல்களையும் எழுதியுள்ளார். கடலின் பின்னணி மற்றும் போர்த்துகீசிய படையெடுப்புக்கு எதிராக வரையப்பட்ட சுவன்னா கடல் மலையாளத்தின் முக்கிய வரலாற்று நாவல்களில் ஒன்றாகும். மலையாள இலக்கியத்தில் வானொலி நாடகங்களை எழுதியவர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார். குஞ்சாக்கோவின் 1964 ஆம் ஆண்டு வெளியான பழசி ராஜா திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதினார். விருது பெற்ற இயக்குனரான ஜி அரவிந்தனின் முதல் படமான உத்ரயாணம் படம் உட்பட மேலும் ஐந்து படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதினார்.[10]

குறிப்புக்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biography on Kerala Sahitya Akademi portal" (2019-04-28). மூல முகவரியிலிருந்து 2019-04-28 அன்று பரணிடப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Biography on Kerala Sahitya Akademi portal" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "Biography on Kerala Sahitya Akademi portal" defined multiple times with different content
  2. "Thikkodiyan - Veethi profile" (2019-04-28).
  3. "DMRT and its Mission" (2019-04-28).
  4. Reporter, Staff (2015-04-12). "District Collector visits Nayanar Balika Sadanam" (en-IN).
  5. MediaoneTV Live (2016-07-13). "Morning News - Guests - Pushpa ( Daughter of Thikkodiyan) and Ratnakaran".
  6. "തിക്കോടിയന്‍ വിശുദ്ധമായ മനസ്സിന്റെ ഉടമായിരുന്നുവെന്ന് എം.ടി".
  7. "News of Thikkodiyan's death". மூல முகவரியிலிருந்து 2006-07-21 அன்று பரணிடப்பட்டது.
  8. "The Hindu : Thikkodian--a multi-faceted personality".
  9. "List of works" (2019-04-28). மூல முகவரியிலிருந்து 2019-04-28 அன்று பரணிடப்பட்டது.
  10. "Profile of Malayalam Story Writer Thikkodiyan" (2019-04-28).

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கோடியன்&oldid=3272871" இருந்து மீள்விக்கப்பட்டது