இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
சச்சிதானந்தம், ஓர் இந்தியக் கவிஞர் ஆவார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதும் இவர், சாகித்ய அகாதெமியின் இதழான இந்திய இலக்கியத்தின் ஆசிரியர் ஆவார். ஆங்கிலப் பேராசிரியரானாலும், கதை எழுதுவதிலும், மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆக்கங்கள் தமிழ், இந்தி, பெங்காலி, ஆங்கிலம், அரபு, பிரெஞ்சு, இடாய்ச்சு, இத்தாலியம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள எழுத்தாளர்களில் முதன்மையானவர். இவர் பல இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.