சனீசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சனி
சனீஸ்வர பகவான்.JPG
அதிபதி
வகை கிரகதேவதை
கிரகம் சனி (கோள்)
மந்திரம் ஓம் சாம் சனீஸ்வராய நமோ
துணை நீளாதேவி
சனீஸ்வரன்

சனீசுவரன் ஒன்பது நவக்கிரகங்களில் ஒருவர். சூரிய தேவனின் மகன். இவரது நிறம் கருமை. வாகனம் காகம். கால் சிறிது ஊனமாக இருப்பதால், மெதுவாக நடப்பவர்.

இந்தியாவில் சனீசுவரனை சிறப்பாக வழிபடும் தலம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் ஆகும். நளன் சனி பகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சனீசுவரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.

தேனி மாவட்டம், குச்சனூரில் சனி பகவானுக்கு தனிக் கோயில் அமைந்துள்ளது.

இலங்கையில் சனீசுவரன் ஆலயம் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.

லோக நாயக சனி ஈஸ்வர பகவான் ஆலயம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், புளியகுளத்தில் அமைந்துள்ளது. இங்கு சனீசுவரனின் சிலை தனது உலோகமான எஃகினால் அமைக்கப்பட்டுள்ளது.

சனிப் பெயர்ச்சி[தொகு]

இந்திய சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செலவதையே சனிப் பெயர்ச்சி என்பர்.[1]

முக்கிய கோயில்கள்[தொகு]

  1. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில், காரைக்கால், புதுச்சேரி
  2. குச்சனூர் சனீஸ்வரன் கோயில், தேனி மாவட்டம், தமிழ்நாடு
  3. சனீசுவரன் ஆலயம் திருகோணமலை, திருகோணமலை, இலங்கை

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.ariviyal.in/2011/12/blog-post_3560.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனீசுவரன்&oldid=1864305" இருந்து மீள்விக்கப்பட்டது