லோக நாயக சனீசுவரன் கோயில்

ஆள்கூறுகள்: 11°01′16″N 76°59′49″E / 11.02111°N 76.99694°E / 11.02111; 76.99694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோக நாயக சனீசுவரன் கோயில்
லோக நாயக சனீசுவரன்
லோக நாயக சனீசுவரன் கோயில் is located in தமிழ் நாடு
லோக நாயக சனீசுவரன் கோயில்
லோக நாயக சனீசுவரன் கோயில்
Location within Tamil Nadu
ஆள்கூறுகள்:11°01′16″N 76°59′49″E / 11.02111°N 76.99694°E / 11.02111; 76.99694
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவு:புலியகுளம், கோயம்புத்தூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:சனீசுவரன்
சனி ஈஸ்வர பகவான்

லோக நாயக சனீசுவரன் கோயில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோயிலாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் எனும் ஊரில் புலியங்குளம் மாரியம்மன் கோயில் அருகே உள்ளது. இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன.[1][2]

பெயர்க்காரணம்[தொகு]

சனி பகவானுக்கு இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று பெயர் காரணம், சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டது , வாகனமான காகமும் இரும்பினால் ஆனது. ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது.[சான்று தேவை]

சனிபகவானின் விக்ரகம் தனது உலோகமான எஃகு இரும்பினால் காணப்படுவது உலகினில் இங்கு மட்டும்தான்.[சான்று தேவை]

பூசை[தொகு]

வாரம்தோறும் இவருக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று மதியம் பகவானுக்கு சிறப்பு அபிசேகம் , ஆராத்தி , அர்சனை நடைபெறுகிறது. பக்தர்கள் தாங்களாகவே அபிசேக ஆராத்தி செய்யும்வகையில் திறந்த வெளியில் ஆலயம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கோவை லோக நாயக சனீசுவரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா