உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐயர்
குருஆதிசங்கரர்
மதங்கள்இந்து
மொழிகள்பிராமணத் தமிழ், சமசுகிருதம், சங்கேதி
நாடுஇந்தியா
மூல மாநிலம்தமிழ்நாடு
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம்
குடும்பப் பெயர்கள்அய்யர், சர்மா, சாஸ்திரி, பட்டர்,
தொடர்புடைய குழுக்கள்பஞ்ச திராவிடப் பிராமணர், ஐயங்கார்

ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி[1], சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், பெரும்பாலும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்களுமான பிராமணர்கள் ஆவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். மேலும் கருநாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழுகின்றனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்தப் பிராமணர்களும் ஐயர் பட்டம் தரிக்கின்றனர்.

ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் கோத்திரம், வேதம் என்பதின் வகையிலும் பகுக்கப்பட்டுள்ளனர்.

சொற்பிறப்பியல்

ஐயர் என்ற சொல் அய்யா - கரு என்ற தலைப்பிலிருந்து உருவானதாகும். இது அய்யருவாக மாறியது இது பெரும்பாலும் மரியாதைக்குரிய நபர்களை அழைக்க தமிழர்களால் பயன்படுத்தப்படும் பெயராகும். அய்யா என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் பல உள்ளன. பொதுவாக இது ஒரு மூத்த சகோதரரைக் குறிக்கும், இது முதனிலைத் திராவிட மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சொற்பிறப்பியல் படி "அய்யா" என்ற சொல் ஆரிய என்ற சமசுகிருத வார்த்தையின் பிராகிருதம் பதிப்பாகும். இது சமசுகிருதத்தில் உன்னதமானது என்று பொருளாகும்.

முன்னொரு காலத்தில், ஐயர்களை அந்தணர்[2] அல்லது பார்ப்பனர்[3][4] என்றும் அழைக்கப்பட்டனர். சமீபத்திய காலம் வரை, கேரள ஐயர்களை பட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பிரிவுகள்

ஐயர் சமுகத்தில் பல பிரிவுகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Encyclopædia Britannica, śāstrī.
  2. Pillai, Jaya Kothai (1972). Educational System of the Ancient Tamils. Tinnevelly: South India Saiva Siddhanta Works Pub. Society. p. 54.
  3. Caṇmukam, Ce. Vai. (1967). Naccinarkkiniyar's Conception of Phonology. Annamalai University. p. 212.
  4. Marr, John Ralston (1985). The Eight Anthologies: A Study in Early Tamil Literature. Institute of Asian Studies. p. 114.
  • Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயர்&oldid=3272315" இலிருந்து மீள்விக்கப்பட்டது