வடமா
முத்துசுவாமி தீட்சிதர் · சே. ப. இராமசுவாமி ஐயர் · வ. வே. சுப்பிரமணியம் | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் | |
| மொழி(கள்) | |
| தாய்மொழி: தமிழ் | |
| சமயங்கள் | |
| இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| ஐயர், தேசஸ்த் பிராமணர்கள், தமிழ் மக்கள், வடகலை ஐயங்கார் |
வடமா (Vadama) அல்லது வடமர் என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைபிடித்து வந்தவர்கள். இவர்களில் பலர் வைணவத்துக்கு மாறிவிட்டு ஐயங்கார் சமூகத்தின் வடகலை ஐயங்கார் பிரிவை துவங்கினார்கள். பிரபல வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் ஒரு வடமா குடும்பத்தில் பிறந்ததாக சிலர் நம்புகின்றனர்.[1] பாரம்பரியத்துக்கு மாறாக இவர்களுக்கு ஒரு தனி வீர வரலாறு உள்ளது.[2][3]
பாரம்பரியத் தொழில்
[தொகு]சமூகவியலாளர் ஆந்த்ரே பெட்டெய்ல், தனது 'சாதி, வர்க்கம் மற்றும் அதிகாரம்: தஞ்சாவூர் கிராமத்தில் படிநிலைகளின் மாறும் வடிவங்கள்' என்ற ஆய்வறிக்கையில், அவர்களை ஐயர் சமூகத்தினரிடையே இருந்த மிகப்பெரிய மிராசிதார்கள் என்று விவரிக்கிறார். கொந்தளிப்பான காலங்களில், அக்ரஹாரங்களின் பாதுகாப்பையும் அவர்களே ஒழுங்கமைத்திருக்கலாம்; ஏனெனில், இராணுவத்தில் சேர்ந்தவர்கள் அதிகம் இல்லை என்றாலும், அவர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு குறிப்பாகத் தடை விதிக்கப்படவில்லை.[2] 19-ஆம் நூற்றாண்டில், பிற ஐயர்களைப் போலவே வடமா பிரிவைச் சேர்ந்த பலரும் பிரிட்டிஷ் இந்தியாவின், நீதித்துறையில் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் இணைந்தனர், மேலும் இந்தியக் குடிமை மற்றும் வருவாய்த் துறைகளில் பணியாற்றினர். இன்னும் பலர் திருவிதாங்கூர், மைசூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய சமஸ்தானங்களின் அரசர்களிடம் தொடர்ந்து பணியாற்றினர்.[4]
மத நடைமுறைகள்
[தொகு]
வடமாக்கள் பாரம்பரியமாக மற்ற ஐயர் வகுப்பினரை விட உயர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.
சிவன் மற்றும் தேவி வழிபாட்டைப் பிரபலப்படுத்துவதிலும், பரப்புவதிலும் வடமாக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.[5][6]
பிரிவுகள்
[தொகு]- வடதேசத்து வடமா
- சோழதேசத்து வடமா
- சபையர்
- இஞ்சி
- தும்மாகுண்ட திராவிடர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramanuja". Stephen Knapp.
- 1 2 N. Subrahmanian (1978). History of Tamilnad: to A.D. 1565. Koodal Publishers. p. 334.
- ↑ "Journal of the Andhra Historical Society", Andhra Historical Research Society, Rajahmundry, Madras Presidency, 1929
- ↑ "From Landlords to Software Engineers: Migration and Urbanization among Tamil Brahmans", C. J. Fuller and Haripriya Narasimhan, London School of Economics and Political Science, 2008
- ↑ "A Kali Yuga woman saint". Chennai Online. 30 November 2003 இம் மூலத்தில் இருந்து 2008-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080503082723/http://www.chennaionline.com/musicnew/Devotional/aavadai.asp.
- ↑ "A Genius of Syama Sastri". www.carnatica.net. 17 April 2002. Retrieved 2008-09-11.