சங்கேதி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கேதி மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கர்நாடகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3

சங்கேதி மொழி ஒரு திராவிட மொழியாகும். முன்னர் கன்னடத்தின் வட்டார வழக்காகக் கருதப்பட்ட இது, தமிழின் கிளைமொழி என்ற கருத்தும் உண்டு.]][1] சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இது ஒரு தனி மொழியாகும். தமிழிலும் கன்னடத்திலும் இருந்து சற்றே வேறுபட்டது. கன்னடத்தின் வட்டார வழக்கு எனக் கருதப்பட்டாலும், கன்னடர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாதது ஆகும். தமிழுடன் நெருங்கிய தொடர்பு உடையது. இதுவரை இம்மொழி எழுத்துவடிவம் பெறவில்லை எனினும், இம்மொழி பேசும் மக்கள் தென் கருநாடகத்தில் வசிப்பதால் கன்னட எழுத்துகளைக் கொண்டு சிலர் எழுதுகின்றனர்.

சங்கேதி மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டின் மதுரைப் பகுதியிலிருந்து 15ம் நூற்றாண்டளவில் கர்நாடகத்துக்குப் புலம்பெயந்தவர்கள் எனக் கருதப்படுகின்றது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr.Shrikaanth K.Murthy- Article in Sanketi Sangama, February 2006 (Published from Shimoga)
  2. Dravidabhashavijnana by Hampa Nagarajaiah (Published by D.V.K.Murthy publishers, Mysore, India)
  3. Sanketi jananga, samskruti mattu bhashe- C.S.Ramachandarao (Published by Chaitra Pallavi Publishers, Mysore)
  4. Nacharammana Jivana Carite- M.Keshaviah (published from Mysore)
  5. Shreyash S -Article in Sanketi Sangama [Published by Chaitra Pallavi Publishers, Bangalore]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கேதி_மொழி&oldid=2229057" இருந்து மீள்விக்கப்பட்டது