வாத்திமா
ஏ. சேசைய்ய சாஸ்திரி | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
சோழ நாடு, சென்னை | |
மொழி(கள்) | |
பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர், தமிழர் |
வாத்திமா (அல்லது வாத்திமர், மாத்தியமர்) என்றழைக்கப்படுவோர் தமிழ்நாட்டில் வாழும் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைப்பிடிக்கும் இவர்கள் ஸ்மார்த்த மரபைச் சேர்ந்த பஞ்ச திராவிடப் பிராமணர் ஆவர்.[1] வாத்திமாக்கள் வாழ்ந்த 18 கிராமங்களில் தேதியூரும் ஒன்றாகும்.
புவியியற் பரம்பல்
[தொகு]இவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் செறிந்து வாழ்வதனால், தனிப்படுத்தப்பட்டும், பிற பண்பாடுகளின் தாக்கங்களுக்கு அதிகம் உட்படாதவர்களாகவும் உள்ளனர்.[2] இதனால், ஆங்கில மொழியையும், மேனாட்டுப் பண்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் போக்கு இவர்கள் மத்தியில் மிகவும் தாமதமாகவே ஏற்பட்டது.
தொழில்
[தொகு]பழைய காலத்தில் இவர்கள் மத்தியில் இருந்த முக்கியமான தொழில் பணம் கடன் கொடுப்பது ஆகும். வாத்திமாப் பெண்களும் தொழில் செய்வது உண்டு. இவர்கள் வேளாண்மை, பாய் பின்னுதல், கடன் கொடுத்தல் ஆகிய தொழில்களில் ஈடுபடுவர். இவர்கள் சமய இலக்கியங்களிலும் அறிவு பெற்றவர்கள்.[3] தேதியூர் வாத்திமாவான சுப்ரமணிய சாஸ்திரிகள் 1929ஆம் ஆண்டில் பிரம்ம வித்யா எனும் நூலை தொகுத்துள்ளார்.[4]
பிரிவுகள்
[தொகு]- பதினெட்டு கிராமத்து வாத்திமா
- நன்னிலம்
- ராதாமங்களம்
- தேதியூர்
- மேலப்பாளையூர்
- சேங்காலிபுரம்
- செம்மங்குடி
- முடிகொண்டான்
- விஷ்ணுபுரம்
- கோனேரிராஜபுரம்
- அரசவனங்காடு
- திப்பிராஜபுரம்
- ஆனந்ததாண்டவபுரம்
- மொழையூர்
- புலியூர்
- சித்தன் வாழுர்
- மாபடுகை
- மரத்துறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vathimas in the list of Brahmin communities
- ↑ Sruti, Issues 53-64, Pg 338
- ↑ Paramacharya: life of Sri Chandrasekharendra Saraswathi of Sri Kanchi, Pg 25
- ↑ தேதியூர் ப்ரம்மஶ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரிகள் தொகுத்த பிரம்ம வித்யா நூல்
வெளி இணைப்புகள்
[தொகு]- Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. pp. 337–338.