உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமிநாத் பாசுபரூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமிநாத் பாசுபரூவா
பிறப்பு1864 அக்டோபர் 14
அகத்குரி, நகோன், காலனித்துவ அசாம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு1938 மார்ச் 23
திப்ருகார், அசாம் ,இந்தியா
பணிஎழுத்தாளர், புதின எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர், செம்மையாக்கல், நையாண்டி எழுத்தாளர், மர வியாபாரி
பெற்றோர்தினநாத் பாசுபரூவா (தந்தை)
தானேசுவரி (தாயார்)
வாழ்க்கைத்
துணை
பிரக்யாசுந்தரி தேவி

லட்சுமிநாத் பாசுபரூவா (Lakshminath Bezbarua) (1864 அக்டோபர் 14 - 1938 மார்ச் 26) இவர் ஓர் இந்திய கவிஞரும், புதின ஆசிரியரும் மற்றும் நவீன அசாமிய இலக்கியத்தின் நாடக ஆசிரியருமாவார். இவர் தனது கட்டுரைகள், நாடகங்கள், புனைகதைகள், கவிதை மற்றும் நையாண்டிகள் மூலம், அன்றைய தேக்க நிலையில் இருந்த அசாமி இலக்கியத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தார். இவர் ஜோனாகி சகாப்தத்தின் இலக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1921 இல் குவகாத்தியில் நடந்த அனைத்து அசாம் மாணவர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் [1]

அப்போது நடைமுறையில் இருந்த சமூக சூழலுக்கு இவர் தனது நையாண்டி படைப்புகள் மூலம் பதிலளித்தார். இவரது இலக்கியம் அசாம் மக்களின் ஆழ்ந்த தூண்டுதல்களை பிரதிபலித்தது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பாசுபரூவா, 1864 அக்டோபர் 14ஆம் தேதி அசாமில் உள்ள நகாமோ மாவட்டதிலுள்ள அகத்குரி என்ற இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் ஒரு படகில் பிறந்தார். இவரது தந்தை தினநாத் பாசுபரூவா, பிரிட்டிசு அரசாங்கத்தில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்தார். அவர், அலுவலக இடமாற்றம் காரணமாக பார்பேட்டாவுக்குச் சென்றார்.[3]

பாசுபரூவா தனது குழந்தைப் பருவத்தை அசாமின் வெவ்வேறு இடங்களில் கழித்தார். இவரது தந்தை தனது குடும்பத்தினரை பார்பேட்டாவிலிருந்து தேஜ்பூருக்கு அழைத்து வந்தார். தேஜ்பூரிலிருந்து இவர்கள் வடக்கு லக்கீம்பூருக்கு மாறினர். குடும்பத்தினரிடையே குவகாத்தியில் சிறிது காலம் குடியிருந்து, இறுதியாக சிவசாகரில் குடியேறினர்.[3]

கல்வி[தொகு]

பாசுபரூவா தனது ஆரம்பக் கல்வியை சிப்சாகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். அதன் பிறகு நகரக் கல்லூரியில் படித்து, பின்னர் கொல்கத்தாவில் உள்ள பொதுச் சபை நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் சட்டப் பட்டங்களை பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

பாசுபரூவா கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் மருமகள் பிரக்யாசுந்தரி தேவியை மணந்தார்.

மரியாதை[தொகு]

1968இல் வெளிடப்பட்ட இந்திய அஞ்சல் முத்திரையில் பாசுபரூவா

1931ஆம் ஆண்டு திசம்பர் 29 ஆம் தேதி பாசுபரூவா சிவசகரில் நடைப்பெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் மாநாட்டில் 'இராக்சோராஜ்' என கௌரவிக்கப்பட்டார். அசாம் இலக்கிய மன்றத்தின் பாராட்டு கடிதத்தில், 'சாகித்யாரதி' என்ற வார்த்தை முதல் முறையாக பாசுபரூவாவுக்கு பயன்படுத்தப்பட்டது. ராக்சோராஜ் என்பது அசாமிய இலக்கியத்தில் 'நகைச்சுவையின் ராஜா' என்று பொருள்படும் .[4]

1921 இல் குவகாத்தியில் நடந்த அனைத்து அசாம் மாணவர் மாநாட்டிற்கும் தலைமை தாங்கினார்.[5] 1924இல் குவகாத்தியில் நடைபெற்ற அசாம் இலக்கிய மன்றத்தின் 7 வது ஆண்டு அமர்வுக்கு இவர் தலைமை தாங்கினார்.[6] இவர் மார்ச் 26 அன்று தனது எழுபது வயதில் திப்ருகாரில் இறந்தார். அசாம் இலக்கிய மன்றம் ஆண்டுதோறும் இந்த நாள் சாகித்யா திவாசு என்றப் பெயரில் கடைப்பிடிக்கிறது.[3]

இலக்கிய வாழ்க்கை[தொகு]

பாசுபரூவா தனது இலக்கிய வாழ்க்கையை ஜோனாகி பத்திரிகையின் முதல் இதழிலிருந்து "லிட்டிகாய்" என்ற நையாண்டியுடன் தொடங்கினார். இவர் எட்டு நாடகங்கள், நான்கு நையாண்டிகள், மூன்று வரலாற்றுப் படைப்புகள், ஒரு செயல் நாடகம், மூன்று சுயசரிதைகள் மற்றும் இரு தன் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். மேலும் இவர் குழந்தைகளுக்காகவும் எழுதினார். இவர் அசாமின் (சாதுகோதா) நாட்டுப்புறக் கதைகளை சேகரித்து தொகுத்தார். பாசுபரூவா அசாமில் முன்னோடி சிறுகதை எழுத்தாளராக இருந்தார்.[1] இவரது சிறுகதைகள் அசாமிய சமுதாயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களை உள்ளடக்கியது. ஆனால் நகைச்சுவையான உணர்வைக் கொண்டிருந்தன. பாசுபரூவா ஒரு தேசபக்தி நாடக ஆசிரியராக குறிப்பிடப்பட்டார். அதே நேரத்தில் இவர் 'சக்ரதாஜ் சிங்கா', 'ஜாய்மோதி கொன்வோரி' மற்றும் 'பெலிமார்' ஆகிய மூன்று வரலாற்று நாடகங்களையும் இயற்றினார்.

ஓ முர் அப்புனர் தெக்ஸ், என்று இவர் இயற்றிய தேசபக்தி பாடல், அசாமின் மாநில தேசியகீதமானது.[7]

இலக்கியப் படைப்புகள்[தொகு]

இலட்சுமிநாத் பாசுபரூவா
லட்சுமிநாத் பாசுபரூவா தனது பெற்றோருடன் 1878 முதல் 1938 வரை ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள மண்டேலா சௌக் அருகே வசித்து வந்த வீடு இந்த வீட்டை ஒடிசா அரசு தனது அருங்காட்சியக மாற்ற திட்டமிட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Amaresh Datta (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo. Sahitya Akademi. pp. 417–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1803-1. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  2. Empire’s Garden: Assam and the Making of India. Duke University Press. 1 August 2011. pp. 147–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-5049-1. பார்க்கப்பட்ட நாள் 25 April 2013.
  3. 3.0 3.1 3.2 "Lakshminath Bezbaroa | Assam Portal". Assam.org. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  4. "Life & Works". sahityarathi.com. Archived from the original on 30 June 2013. பார்க்கப்பட்ட நாள் 19 May 2013.
  5. "Lakshminath Bezbaroa". Indianpost.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.
  6. "Lakshminath Bezbaroa". Vedanti.com. 19 July 2011. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Roy interacts with readers". Telegraphindia.com. 31 December 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lakshminath Bezbaroa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமிநாத்_பாசுபரூவா&oldid=3927896" இலிருந்து மீள்விக்கப்பட்டது