உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் (Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka) என்பது 1978 செப்டம்பர் 7 ஆம் நாள் முதல் தேசிய அரசுப் பேரவை விடுத்த அறிவிப்பை அடுத்து இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் ஆகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டமும் ஆகும். செப்டம்பர் 2010 வரை இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.[1][2][3]

வரலாறு

[தொகு]

1977 சூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசியலமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (சனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 இல் அரசுத்தலைவரானார். 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் படி, ஐதேக ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்ற ஓரவை முறைமையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது. அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14வது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரித்தது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Soulbury Commission".
  2. "1.3 The Consolidation of British Power in Sri Lanka" (PDF). Archived from the original (PDF) on 2014-12-04.
  3. "An Insider's Perspective - The Sri Lankan Republic at 40" (PDF).