பேச்சு:இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் அரசியலமைப்பு என்றிருக்க வேண்டும். இலங்கை கல்வியிலும் இச்சொல் பாவனையேயுள்ளது. --AntanO 15:16, 10 செப்டம்பர் 2015 (UTC)

அரசியலமைப்பு என்பது இலங்கையில் மிகப்பரந்த அளவில் பயன்பாட்டில் உள்ளதே. ஆனாலும், சிறந்த சொல்லை எழுதுவதே நல்லது. அரசியலமைப்பு கூடுதல் பொருத்தமாக இருந்தால் மாற்றுவதற்கு உடன்பாடே. இலங்கையில் பாராளுமன்றம் அதிகாரபூர்வமாக இருந்தாலும், நாடாளுமன்றம் இப்போது பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் விக்கிப்பீடியா தான் என்பதை பெருமையாகச் சொல்ல முடியும்.--Kanags \உரையாடுக 20:46, 10 செப்டம்பர் 2015 (UTC)
  • இலங்கையின் அரசியலமைப்பு என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது. இலங்கைப் பாடசாலை முதல் பல்கழைக்கழகம் வரை இலங்கையின் அரசியலமைப்பு அல்லது இலங்கையின் யாப்பு என்றே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு என்றுதான் அழைக்கப்படுகிறது. constitution என்பது உண்மையில் அரசமைப்புச் சட்டம் அல்ல. அதன் பேச்சுப்பக்கத்தைப் பாருங்கள். constitution சட்டத்தை மட்டும் கொண்டிருக்காது அரசியலமைப்பையும் கொண்டுள்ளது. --AntanO 17:44, 11 செப்டம்பர் 2015 (UTC)