ஆப்பிரிக்கப் புல் ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்பிரிக்கப் புல் ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: இசுடிரிங்கிபார்மிசு
குடும்பம்: டைடோனிடே
பேரினம்: டைடோ
இனம்: T. capensis
இருசொற் பெயரீடு
Tyto capensis
(Smith, 1834)
புல் ஆந்தை குஞ்சு தீயில் இருந்து மீட்கப்பட்டு தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில் உள்ள சுய்கர்போஸ்ராண்ட் இயற்கை காப்பகத்தில் மறுவாழ்வு அளிக்கபட்டது

ஆப்பிரிக்க புல் ஆந்தை ( African grass owl ) என்பது பார்ன் ஆந்தை குடும்பமான டைட்டோனிடேயில் உள்ள ஒரு ஆந்தை சிற்றினம் ஆகும்.

விளக்கம்[தொகு]

ஆப்பிரிக்கப் புல் ஆந்தை கூகை ஆந்தையை ஒத்திருக்கிறது. இதன் முகம் இதய வடிவமாக பாலாடை வெண்மை நிறத்தில் இருக்கும். முகத்தைச் சுற்றி மஞ்சள் நிறத்திலான தூவிகளும் அதில் அடர்த்தியாக கறுப்பு புள்ளிகளும் கொண்டிருக்கும். விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அலகு இளஞ் சிவப்பு தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். உச்சந்த் தலையில் இருந்து கீழ் முதுகு மற்றும் இறக்கை மறைப்புகள் வரை உடலின் முழு மேற்பகுதியும் ஒரே மாதிரியாக கரும்பழுப்பு நிறத்திலும், அதில் சிறு சிறு வெண்புள்ளிகளும் சாம்பல் நிறப் புள்ளிகளும் இருக்கும். இப்பறவைக்கு உள்ள முதன்மை இறகுகளும், இரண்டாம் நிலை இறகுகளும் வெளிர் பழுப்பு-சாம்பல் நிறத்தில் இருண்ட பட்டைகள் மற்றும் மஞ்சள் அடிப்பகுதியைக் கொண்டிருக்கும். இதன் குட்டையான வால் வெண்மையாகப் பழுப்பு நிறக் குறுக்குப் பட்டைகளோடு இருக்கும். உடலின் அடிப்பகுதி வெண்மையாகவும் அதில் கரும்புள்ளிகளைக் கொண்டதாகவும் இருக்கும். கால்களில் வெண்மையான இறகுகள் உள்ளன, அவை கணுக்காலின் கீழ் மூன்றில் ஒரு பகுதி வரை நீண்டுள்ளன. கீழ் காலும் பாதங்களும் வெளிர் மஞ்சள்-சாம்பல் நிறத்தில் இருக்கும். இவற்றின் உடல் நீளம் 38–42 cm (15–17 அங்), இறக்கையின் நீளம் 283–345 mm (11.1–13.6 அங்) இருக்கும். இவை 355 மற்றும் 520 g (12.5 மற்றும் 18.3 oz) இக்கு இடையிலான எடையில் இருக்கும். [3] இப்பறவைகள் மிகுந்த அளவு பால் ஈருருமை கொண்டவையாக உள்ளன. அதாவது ஆண் பறவைகளை விட பெண் பறவைகளின் உடல் நிறையும், நீளமும் கூடுதலாக உள்ளது. இது வேட்டை உத்திகள் மற்றும் அடைகாக்கும் திறன் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளின் விளைவாகும். [4]

குரல்[தொகு]

இவை கூகை ஆந்தைகளைப் போன்ற அலறல் ஒலியைக் கொண்டுள்ளன. ஆனால் அது குறைந்த கரகரப்பு உடையது. ஒன்று முதல் இரண்டு வினாடிகள் வரை நீடிக்கும் உயர்வித் தொனியுடைய குழிந்துரசொலி ஆணின் அலறலாக கருதப்படுகிறது. [3]

பரவல்[தொகு]

இது சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் பரவியுள்ளது. அங்கு இதன் முக்கிய வாழிட எல்லையில் இரண்டு தொகுதிகள் உள்ளன. ஒன்று மத்திய தென் ஆப்பிரிக்காவில் தெற்கு கொங்கோ மற்றும் வடக்கு அங்கோலா வழியாக மொசாம்பிக்கின் மத்திய கடற்கரை வரையும், மற்றொன்று தென்னாப்பிரிக்காவை மையமாக கொண்டு மேற்கு கேப் வடக்கிலிருந்து சிம்பாப்வே, போட்சுவானா மற்றும் மொசாம்பிக் ஆகியவற்றின் தெற்கு எல்லை வரை உள்ளது. எத்தியோப்பியன் உயர்நிலங்கள், கென்யா மற்றும் உகாண்டா மற்றும் கமரூனில் தனிமைப்படுத்தப்பட்ட பறவைகள் உள்ளன. [1] [3]


வாழ்விடம்[தொகு]

ஆப்பிரிக்க புல் ஆந்தை ஈரமான புல்வெளி மற்றும் திறந்த வெளி சவன்னாவில் 3,200 m (10,500 அடி) உயரம் வரை காணப்படுகிறது. கிழக்கு ஆபிரிக்காவில் இது வறண்ட புல்வெளிகளிலும், அபெர்டேர்ஸ் மற்றும் கென்யா மலையிலும் அதிக உயரத்திலும் காணப்படலாம். [3] தென்னாப்பிரிக்காவில், இந்த இனம் பொதுவாக சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழமற்ற ஏரிகளை விரும்புகிறது. அங்கு உயரமான, தரமான புற்களும், பிற தாவரங்களும் உள்ளன. [5]

வகைபிரித்தலும் கிளையினங்களும்[தொகு]

ஆப்பிரிக்கப் புல் ஆந்தை இனங்கள் சில ஆசிரியர்களால் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்கத்தியப் புல் ஆந்தை இனமாகவே கருதப்படுகின்றது. ஆப்பிரிக்க புல் ஆந்தையின் இரண்டு கிளையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [6]

  • டைட்டோ கேபென்சிஸ் கேமரூனென்சிஸ் : கேமரூன் உயர்நிலங்கள். [7]
  • டைட்டோ கேபென்சிஸ் கேபென்சிஸ் : மீதமுள்ள வாழிடப் பகுதிகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Tyto capensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22688514A93199287. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22688514A93199287.en. https://www.iucnredlist.org/species/22688514/93199287. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. 3.0 3.1 3.2 3.3 "African Grass Owl ~ Tyto capensis". The Owl pages. Deane Lewis. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  4. Ansara-Ross, Tahla M; Wepener, Victor; Verdoorn, Gerhard H; Ross, Mathew J (April 2008). "Sexual dimorphism of four owl species in South Africa". Ostrich 79 (1): 83–86. doi:10.2989/OSTRICH.2008.79.1.11.366. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-6525. 
  5. "Tyto capensis (African grass-owl)". Biodiversity Explorer. Iziko: Museums of South Africa. Archived from the original on 28 January 2018. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  6. "African Grass owl Tyto capensis (Smith, A, 1834)". Avibase. Denis Lepage. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  7. "Tyto capensis cameroonensis". HBW Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்கப்_புல்_ஆந்தை&oldid=3782586" இலிருந்து மீள்விக்கப்பட்டது