கென்யா மலை
கென்யா மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,199 m (17,057 அடி) |
கென்யா மலை கென்யா நாட்டின் யாவற்றினும் உயரமான மலையும், ஆப்பிரிக்காக் கண்டத்தின் மலைகள் யாவற்றினும் இரண்டாவது மிக உயரமான மலையும் ஆகும். கென்யா மலை ஆப்பிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலைக்கு அடுத்த மிக உயரமான மலை. கென்யா மலையில் உள்ள உயரமான மூன்று முகடுகள்: பாட்டியன் (Batian) 5,199 மீ (17,058 அடி), நெலியோன் (Nelion ) 5,188 மீ - (17,022 அடி), மற்றும் லெலானா (Lenana) 4,985 மீ (16,355 ft). கென்யா மலை கென்யா நாட்டின் நடுவே நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே 150 கி.மீ தொலைவில் நைரோபிக்கு வடக்கு-வடகிழக்காக திசையில் அமைந்துள்ளது. கென்யா மலையைச் சூழ்ந்துள்ள 620 கி.மீ2 (240 cathura mail) பரப்பளவுள்ள இடம், கென்யாவின் தேசிய புரவு இடமாக (Mount Kenya National Park) பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இவ்விடம் ஐக்கிய நாடுகள் அவையின் (யுனெசுக்கோவின்) உலக மரபு சிறப்பிடமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 15,000 பேர் இங்கு வருகை புரிகிறார்கள் [1]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
[தொகு]- ↑ Gichuki, Francis Ndegwa (August 1999). "Threats and Opportunities for Mountain Area Development in Kenya". Ambio 28 (5): 430-435. Royal Swedish Academy of Sciences.