கூகை ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூகை ஆந்தை
Tyto alba -British Wildlife Centre, Surrey, England-8a (1).jpg
Barn owl at the British Wildlife Centre, England
Barn Owl screams recorded in Cardiganshire, Wales
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: இசுடிரிங்கிபார்மிசு
குடும்பம்: டைடோனிடே
பேரினம்: டைடோ
இனம்: T. alba
இருசொற் பெயரீடு
Tyto alba
(Scopoli, 1769)
துணையினம்

many, see text

Schleiereule-Tyto alba-World.png
Global range in green
வேறு பெயர்கள்

Strix alba Scopoli, 1769
Strix pratincola Bonaparte, 1838
Tyto delicatula Gould, 1837

கூகை ஆந்தை (barn owl, Tyto alba) என்பது Tytonidae குடும்பத்தைச் சேர்ந்த ஆந்தை வகை ஆகும்.[2]

உடலமைப்பு[தொகு]

36 செ.மீ. - வட்ட வடிவமான இதன் முகத்தினைச் சுற்றி விறைத்து நிற்கும் பலவகை நிறங்கள் கொண்ட தூவிகள் இருக்கும். சாம்பல் நிற உடலில் கருப்பு காணலாம். மார்பும் வயிறும் ஆழ்ந்த பழுப்புப் புள்ளிகளோடு பட்டு நிறத்தை ஒத்த வெண்மையாக இருக்கும்.

கூகை ஆந்தையின் அழகிய தோற்றம்

காணப்படும் பகுதிகள், உணவு[தொகு]

தமிழகம் எங்கும், பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், புழக்கத்தில் இல்லாத கிணறு ஆகியவற்றில் பகலில் பதுங்கி இருந்து தாக்கும் ஆற்றல் இதன் கண்களுக்கு இல்லாததால் காக்கை முதலிய பறவைகள் தாக்கும்போது தன்னைக் காத்துக் கொள்ள இயலாததாக உள்ளது. சிட்டுக்குருவி, எலி, சுண்டெலி, ஆகியவற்றை உணவாகக்கொள்ளும் இது உழவர்களுக்கு உற்ற தோழன் என்ற பெருமையைப் பெறுகின்றது. பறக்கும்போது இறக்கைகளிலிருந்து ஒலி எழுவதில்லை. இதனால் எதிர்பாராது இரவில் இதனை எதிர்ப்படுவோர் அஞ்சி இதனை சாக்குருவி என அழைக்கின்றனர். பலவகைக் குரல்களில் உரக்கக் கத்தும். இதன் குரல் கரகரப்பாக வைவதுபோல அமையும்.

இனப்பெருக்கம்[தொகு]

ஆண்டு முழுவதும் மரங்களின் பொந்துகளிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் 4 முதல் 7 முட்டைகள் இடும். தோற்றத்தில் இதனை ஒத்த புல்கூகை Grass Owl, T.capensis மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பகுதிகளில் புல் உயரமாக வளர்ந்திருக்கும் காடுகளில் காணப்படுகிறது. தரையில் புல்லிடையே பகலில் பதுங்கியிருந்த இரவில் எலி முதலியவற்றை வேட்டையாடும் மரங்களை நாடிச்செல்லும் பழக்கம் இல்லாதது.[3]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Tyto alba". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2012: e.T22688504A38682217. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T22688504A38682217.en. http://www.iucnredlist.org/details/22688504/0. பார்த்த நாள்: 11 August 2016. 
  2. Bruce (1999) pp. 34–75
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:75

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகை_ஆந்தை&oldid=3366308" இருந்து மீள்விக்கப்பட்டது