ஆசிய நீலச் சிட்டு
ஆசிய நீலச் சிட்டு | |
---|---|
கேரளத்தின் மறையூரில் ஒரு ஆண்பறவை | |
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மவுண்ட் ஹாரியட் தேசிய பூங்காவில் பெண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Irena |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/IrenaI. puella
|
இருசொற் பெயரீடு | |
Irena puella (Latham, 1790) | |
Range includes I. tweeddalii | |
வேறு பெயர்கள் | |
Coracias puella |
ஆசிய நீலச் சிட்டு (Asian fairy-bluebird, Irena puella ) என்பது நடுத்தர அளவிலான, ஆர்போரியல் குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இந்த நீலச் சிட்டு வெப்பமண்டல தெற்கு ஆசியா, இந்தோசீனா மற்றும் சுந்தா பெருந் தீவுகள் முழுவதும் உள்ள காடுகளில் காணப்படுகிறது. இது மரத்தில் சிறிய கிண்ண வடிவில் கட்டும் கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். இது 1790 இல் பிரித்தானிய பறவையியலாளர் ஜான் லாதம் என்பவரால் விவரிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் ஃபேரி-நீலச்சிட்டு ஆசிய நீலட் சிட்டு ஆகிய இரண்டு இனப் பறவைகளும் தகலாகு மக்களுக்கு புனிதமானவையாக கருதப்படுகின்றன. ஏனெனில் அவை திக்மாமனுகன் என்னும் சகுனங்களாக கருதப்படுகின்றன.
முதிர்ந்த ஆசிய நீலச்சிட்டு 24 முதல் 27 சென்டிமீட்டர்கள் (9.4 முதல் 10.6 அங்) நீளம் இருக்கும். ஆணின் உடலின் மேற்பகுதி பளபளப்பான, மாறுபட்ட நீல நிறமாக இருக்கும். உடலின் கீழ்ப்பகுதியும், பறக்கும் இறகுகளும் கருப்பாக உள்ளன. பெண் பறவையும், முதல் ஆண்டு ஆண் பறவையும் முற்றிலும் மங்கிய நீலந் தோய்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
ஆசிய நீலச் சிட்டு பழங்கள், தேன் போன்வற்றை விரும்பி உண்ணும். சில பூச்சிகளையும் தின்பது உண்டு. இது பலவகைப்பட்ட மென்மையான குரலில் ஒலி எழுப்பும்.
விளக்கம்
[தொகு]ஆசிய நீலச் சிட்டு 24 முதல் 27 cm (9.4 முதல் 10.6 அங்) நீளம் இருக்கும். விழிப்படலம் கருஞ்சிவப்பாகவும், கண் இமைகள் இளஞ்சிவப்பாகவும் அலகு, கால்கள், நகங்கள் போன்றவை கருப்பாகவும், வாய் சதை நிறத்திலும் இருக்கும். இப்பறவை பால் ஈருருமை தெளிவாக கொண்டுள்ளது. ஆணின் மேல் இறகுகள், இறக்கையின் சிறிய இறகுகள் வால் போர்வை இறகுகளின் கீழ் இளஞ்சிவப்பு பளபளப்பான நல்ல நீல நிறத்தில் இருக்கும். அதே சமயம் அதன் தலையின் பக்கங்களும் முழு கீழ் இறகுகளும் ஆழ்ந்த கருப்பாக இருக்கும். இறக்கையின் பெரிய இறகுகள், வாலடி போன்றவை நீல நிறத்தில் இருக்கும்.
பெண் பறவை நீலந்தோய்ந்த பசுமையான நிறங் கொண்டது. கண்ணின் முன் பகுதி கறுப்பாக இருக்கும். இளம் பறவைகள் பெண் பறவையை ஒத்திருக்கும். ஆண் இளம் பறவைக்கு மார்ச் மாதத்தில் முதிர்ந்த பறவைக்குரிய இறகுகள் தோன்றுகின்றன.
பரவலும் வாழ்விடமும்
[தொகு]ஆசிய நீலச் சிட்டு இலங்கையிலும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் திருவிதாங்கூர் முதல் சீமக்கா, பெல்காம் , சாவந்த்வாடி வரையிலும், சிக்கிம் மற்றும் இமயமலையின் தாழ்வான பகுதிகள் முதல் அசாமில் திப்ருகார் வரையும், காசி மலை ; கசார் ; மணிப்பூர் ; வங்காளதேசம்; அர்ரகன்; பர்மாவில் பெகு மற்றும் தாநின்தாரி பிரதேசம் ; அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தோசீனாவின் பெரும்பாலான பகுதிகள் ( தீபகற்ப மலேசியா உட்பட), சுமாத்திரா, போர்னியோ, சாவகம் மற்றும் அருகிலுள்ள சிறிய தீவுகளிலும் காணப்படுது. இந்தியப் பகுதியில் இதன் வாழிட எல்லையில் மலைகள் மற்றும் சமவெளிகளின் பசுமையான காடுகளில் மட்டுமே உள்ளது. ஆனால் மற்ற இடங்களில் இது பல்வேறு வகையான ஈரப்பதமான மற்றும் இலையுதிர் காடுகளில் சுமார் 1,600 மீட்டர்கள் (5,200 அடி) உயரம் வரையிலான தாழ்நிலங்களில் பொதுவாக உள்ளது. காபி தோட்டங்களை விட முதிர்ந்த மழைக்காடுகளிலும், பாரம்பரிய நிழல் தரும் மரங்களின் கீழ் உள்ள பழமையான ஏலக்காய் தோட்டங்களிலும் இந்த இனம் அடிக்கடி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]
பலவானில் இருந்து அறியப்பட்ட துணையினம் இப்போது ஒரு தனித்துவமான இனமாக பலவான் ஃபேரி-நீலச் சிட்டு ( I. tweeddalii ) என்ற பெயரில் அறியப்படுகிறது.[3]
நடத்தையும் சூழலியலும்
[தொகு]இந்த பறவை சிறு கூட்டங்களிலோ அல்லது இணையாகவோ காணப்படும்.
இனப்பெருக்கம்
[தொகு]இது பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கிறது. அடர்ந்த பசுங்காடுகளின் நடுவே மரங்களின் உயர் கிளைப் பிரிவில் பாசி மற்றும் நீண்ட உலந்த குச்சிகளால் ஆழமற்ற கின்ன வடிவக் கூடுகளை உருவாக்குகிறது. பொதுவாக இரண்டு முட்டைகளை இடும். முட்டைகள், ஆலிவ் கலந்த சாம்பல் நிறமாகவோ, பசுமை தோய்ந்த வெண்மையாகவோ இருக்கும். முட்டைகள் 177 செ.மீட்டருக்கு 1.14 செ.மீட்டர் இருக்கும்.[4]
உணவு
[தொகு]இது பொதுவாக பெரிய காட்டு மரங்களில் உள்ள பழங்களை உண்கிறது.
காட்சியகம்
[தொகு]-
இந்தியாவின் கோவாவில் ஆண் பெண் பறவைகள்
-
காவோ யாய் தேசிய பூங்காவில் - தாய்லாந்து
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Irena puella". IUCN Red List of Threatened Species 2016: e.T103775156A93991401. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103775156A93991401.en. https://www.iucnredlist.org/species/103775156/93991401. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Raman, T. R. Shankar (2006). "Effects of Habitat Structure and Adjacent Habitats on Birds in Tropical Rainforest Fragments and Shaded Plantations in the Western Ghats, India" (in en). Biodiversity & Conservation 15 (4): 1577–1607. doi:10.1007/s10531-005-2352-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0960-3115.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
- ↑ Oates, E. W. (1889) Fauna of British India.
வெளி இணைப்புகள்
[தொகு]- Asian fairy bluebird videos, photos & sounds on the Internet Bird Collection