உள்ளடக்கத்துக்குச் செல்

அரேபிய வரையாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேபிய வரையாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபல் அபீத்] அருகில் உள்ள அல் ஐன் மிருகக்காட்சிசாலையில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அரபிடிராகசு

உரோபிகுயட் & அசானின், 2005
இனம்:
அ. ஜெயகாரி
இருசொற் பெயரீடு
அரபிடிராகசு ஜெயகாரி
(தாமசு, 1894)
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கிழக்கு அரேபியா, அல் அசர் மலைத்தொடர் பகுதியில் அரேபிய வரையாட்டின் பரம்பல்
வேறு பெயர்கள்

கெமிடிராகசு ஜெயகாரி

அரேபிய வரையாடு (Arabian tahr-அரபிடிராகசு ஜெயகாரி) என்பது கிழக்கு அரேபியாவை பூர்வீகமாகக் கொண்ட வரையாட்டுச் சிற்றினமாகும். சமீப காலம் வரை, இது கெமிட்ராகசு பேரினத்தில் வைக்கப்பட்டது, ஆனால் மரபியல் சான்றுகள் இதனை அரபிடிராகசு என்ற ஒற்றை வகை உயிரலகு பேரினத்திற்கு மாற்றப்பட்டது.

விளக்கம்[தொகு]

இது மிகச்சிறிய வரையாடு சிற்றினமாகும். இதன் இரு பாலினத்திலும் பின்னோக்கிய-வளைவுகளுடன் கூடிய கொம்புகளுடன் கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பெண் மான்களை விட ஆண் மான்கள் மிகவும் வலிமையானவை. இவற்றின் தோலில் நீளமான, செம்-பழுப்பு நிற முடியைக் கொண்டிருக்கும். தோலின் மேல் பின்புறத்தில் ஓர் அடர் பட்டை ஒன்று காணப்படும். ஆண் மான்கள் மிகவும் ஈர்க்கக்கூடிய பிடரி மயிரினைக் கொண்டுள்ளன. இவை முதுகில் வலதுபுறமாக நீண்டு, வயதின் அடிப்படையில் நீளமாக வளரும். வயது முதிர்ந்த ஆண் மான்களில் முகவாய் கருமை நிறத்தில் அடர்வாகவும் கண் கோடுகள் கருமையாகவும் காணப்படும். பெரும்பாலான ஆடு-மான்களைப் போலவே, இவை செங்குத்தான, பாறை சரிவுகளில் சமநிலை மற்றும் ஏறிச்செல்லும் வகையில் நொய்மம் போன்ற காற் குளம்புகளைக் கொண்டுள்ளன.

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, இதனுடைய இயற்சூழலில் சுமார் 2,200 வரையாடுகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1]

வாழிடமும் வரம்பும்[தொகு]

அரேபிய வரையாடு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்த்தில் உள்ள அல் அசர் மலைத்தொடரின் செங்குத்தான பாறை சரிவுகளில் கடல் மட்டத்திற்கு மேல் 1,800 m (5,900 அடி) உயரத்தில் வாழ்கிறது. இது ஜெபல் அபீத் பகுதியிலும் காணப்படுகிறது.[2][3][4]

வகைப்பாட்டில்[தொகு]

இலண்டன் விலங்கியல் சங்கத்தின் தொகுப்பில்-படம்: ஜோசப் சுமித்[5]

அரேபிய வரையாடு முதன்முதலில் 1894ஆம் ஆண்டில் ஓல்டுபீல்டு தாமசு என்பவரால் விவரிக்கப்பட்டது. இவர் ஓமன் ஜெபல் தாவில் சேகரிக்கப்பட்ட விலங்கியல் மாதிரிகளுக்கு கெமிட்ராகசு ஜெயகாரி என்ற பெயரை முன்மொழிந்தார்.[6] மூலக்கூறு இனவரலாறு குறித்த ஆய்வின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட அரபிடிராகசு பேரினத்தில் வைக்கப்பட்டது.[7]

சொற்பிறப்பியல்[தொகு]

அரபிடிராகசு என்ற பேரினப் பெயர் "அரேபியன்" எனப் பொருள்படும் கிரேக்க வார்த்தைகளான அரவிகோசு என்பதிலிருந்தும் "ஆடு" எனப் பொருள்படும் டிராகோஸ் என்பதிலிருந்தும் பெறப்பட்டது.[8][9]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

மற்ற வரையாடு சிற்றினங்களைப் போலன்றி, அரேபிய வரையாடு தனிமையில் வாழக்கூடியது. ஒரு பெண் மற்றும் ஒரு குட்டி அல்லது ஓர் ஆண் ஆடு கொண்ட சிறிய குழுக்களாகவும் வாழலாம். பருவகாலங்களின் போது மந்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, சிறிய, சிதறிய குடும்பங்களில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. குட்டி ஈனுதல் ஆண்டு முழுவதும் நிகழ்கின்றன. இதனுடைய கர்ப்பக் காலம் 140 முதல் 145 நாட்கள் வரை நீடிக்கும்.

உணவு மற்றும் வேட்டையாடுதல்[தொகு]

இந்த விலங்குகள் பொதுவான மேய்ச்சல் விலங்குகளாகவும். இவை புற்கள், புதர்கள், இலைகள் மற்றும் பெரும்பாலான மரங்களின் பழங்களை உண்ணும். இவை தண்ணீரை அதிகம் நம்பியிருக்கின்றன. கோடைக் காலங்களில் இவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கும். வாடிகள் எனப்படும் நதிப் பாதைகளில் தண்ணீர் குடிப்பதற்காக இவை உயரமான இடத்திலிருந்து இறங்கி வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர் வற்றும்போது புதிய பகுதிகளுக்குச் செல்லும்.

சமீப காலங்களில் இப்பகுதியில் இருந்த சிறுத்தை அழிக்கப்படுவதற்கு முன்பு, அரேபிய வரையாடு, அரேபியச் சிறுத்தைகளால் ( பாந்தெரா பார்டசு நிம்ர்) வேட்டையாடப்பட்டிருக்கலாம்.[10]

அச்சுறுத்தல்கள்[தொகு]

அரேபிய வரையாடு தீவிர மேய்ச்சல், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிவு ஆகியவற்றால் அழிந்து வருகிறது.[10] ஓமானில், நகர்ப்புறங்களுக்கு மனித இடம்பெயர்வுகளின் சமீபத்திய அதிகரிப்பு, வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் வரையாடு வாழிடப்பகுதியில் இரை தேடுகின்றன. சாலைகள், கட்டிடங்கள் மற்றும் கனிமப் பிரித்தெடுத்தல் ஆகியவற்றின் கட்டுமானத்தின் காரணமாக வரையாட்டின் வாழ்விடச் சீரழிவு மற்றொரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மேலும், விலங்குகள் தண்ணீருக்காக மலைகளிலிருந்து கீழே இறங்கும்போது வேட்டையாடுவது அடிக்கடி நிகழ்கிறது.

காப்பு[தொகு]

1973ஆம் ஆண்டில், அரேபிய வரையாட்டினைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டன. மேலும் 1975ஆம் ஆண்டில், அல் அசர் மலைகளில் பாதுகாக்கப்பட்டன. 1980ஆம் ஆண்டில், வளரிடத்தில் இனப்பெருக்கத் திட்டம் ஒன்று ஓமானி பாலூட்டி வளர்ப்பு மையத்தில் துவக்கப்பட்டது. இதன் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்ட ஆடுகள் மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஓமானில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு என மூன்று நிறுவனங்கள் இப்போது அரேபிய வரையாடுகளை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பலர் அரேபிய ஆடுகளின் மோசமான சூழ்நிலைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. வரையாடுகளின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பிரச்சாரங்களில் கவனம் செலுத்தவும் மற்ற பாதுகாப்பு முயற்சிகளுக்கும் இந்நிறுவனங்கள் வழிவகுத்தது. ஏப்ரல் 2009-இல், புஜைரா அமீரகத்தில் உள்ள வாடி வுராயா அமீரக அரச ஆணையால் அரேபிய வரையாடு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.[4][11] ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மற்றொரு இடமான, அபுதாபியில் உள்ள சர் பானி யாசு, அரேபிய வரையாடு பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.[4][12]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Ross, S.; Al-Rawahi, H.; Al-Jahdhami, M.H.; Spalton, J.A.; Mallon, D.; Al-Shukali, A.S.; Al-Rasbi, A.; Al-Fazari, W. et al. (2019). "Arabitragus jayakari". IUCN Red List of Threatened Species 2019: e.T9918A156925170. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T9918A156925170.en. https://www.iucnredlist.org/species/9918/156925170. பார்த்த நாள்: 18 February 2022. 
  2. Emirates News Agency (2017-09-13). "EAD raises awareness on Abu Dhabi's natural heritage at ADIHEX 2017". The Gulf Today இம் மூலத்தில் இருந்து 2018-03-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180330211425/http://gulftoday.ae/portal/4afcd0d9-b997-46e3-b3bc-615332d606c3.aspx. 
  3. De Leon, J. P. (2014-05-26). "100th Arabian tahr, and twin tahrs welcomed in Al Ain". Gulf News. http://gulfnews.com/news/uae/environment/100th-arabian-tahr-and-twin-tahrs-welcomed-in-al-ain-1.1338797. 
  4. 4.0 4.1 4.2 "Newborn Arabian tahr discovered on Jebel Hafeet". The National (Abu Dhabi). 2015-03-12. https://www.thenational.ae/uae/environment/newborn-arabian-tahr-discovered-on-jebel-hafeet-1.85597. 
  5. Smit, J. (1894). "Hemitragus jayakari". Proceedings of the Zoological Society of London (May): 534. https://archive.org/stream/proceedingsofzoo1894zool#page/n534/mode/1up. 
  6. Thomas, O. (1894). "On some specimens of mammals from Oman, S.E.Arabia". Proceedings of the Zoological Society of London (May): 448–455. https://archive.org/stream/proceedingsofzoo1894zool#page/448/mode/1up. 
  7. Ropiquet, A.; Hassanin, A. (2005). "Molecular evidence for the polyphyly of the genus Hemitragus (Mammalia, Bovidae)". Molecular Phylogenetics and Evolution 36 (1): 154–168. doi:10.1016/j.ympev.2005.01.002. பப்மெட்:15904863. 
  8. Liddell, H. G.; Scott, R. (1940). "ραβία". A Greek–English Lexicon (Ninth ed.). Oxford: Clarendon Press.
  9. Liddell, H. G.; Scott, R. (1940). "τράγος". A Greek–English Lexicon (Ninth ed.). Oxford: Clarendon Press.
  10. 10.0 10.1 Edmonds, J.-A.; Budd, K. J.; Al Midfa, A.; Gross, C. (2006). "Status of the Arabian Leopard in United Arab Emirates". Cat News (Special Issue 1): 33–39. http://www.catsg.org/fileadmin/filesharing/5.Cat_News/5.3._Special_Issues/5.3.1._SI_1/Edmonds_et_al_2006_Status_of_the_Arabian_leopard_in_United_Arab_Emirates.pdf. 
  11. "Arabian Tahr gets royal protection". World Wide Fund for Nature. 2009 இம் மூலத்தில் இருந்து 2018-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180913150346/http://uae.panda.org/news/?163161/Arabian-Tahr-getsroyal-protection. 
  12. "Endangered Arabian tahr born on Sir Bani Yas Island". Gulf News. 2018. http://gulfnews.com/news/uae/environment/endangered-arabian-tahr-born-on-sir-bani-yas-island-1.2156104. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_வரையாடு&oldid=3963048" இலிருந்து மீள்விக்கப்பட்டது