அல் அசர் மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நக்ஹல் கோட்டையின் பின்னணியில், அல் அசர் மலைத்தொடர்

அல் அசர் மலைத்தொடர் (ஆங்கிலம்: Al Hajar Mountains; அரபு: جبال الحجر, கல் மலைகள்) தென்மேற்கு ஆசியாவில் உள்ள வடகிழக்கு ஓமான், மற்றும் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கிழக்கு ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் ஊடே அமைந்துள்ள இது, கிழக்கு அரேபிய தீபகற்பத்தில் உள்ள மிக உயர்ந்த மலைத்தொடராக உள்ளது. இது ஓமானின் உயரமான பாலைவன பீடபூமியில் இருந்து பிரிந்து, கடற்கரை சமவெளியிலும், மற்றும் கடற்கரையிலிருந்து அப்பாலுள்ள ஓமான் குடாவிலிருந்து சுமார் 50-100 கிலோமீட்டர் தொலைவில் அந்நாட்டின் உட்பகுதியில் அமைந்துள்ளது.[1]

சொற்பிறப்பு[தொகு]

அரபு மொழியில் "அல்" (Al) என்றால் "இந்த" என்றும், மற்றும் "அசர்" (Hajar) என்றால் "கல்" (stone) அல்லது "பாறை" என்றும் பொருள். அதனால், "அல் ஹஜர்" "கல்" அல்லது "பாறை" என வரையறுக்கலாம். எனவே, "அல் அசர் மலைத்தொடர்" (Al Hajar Mountains) "கல்லாலான மலைகள்" அல்லது "பாறையாலான மலைகள்." என்ற பொருளை இது தருகிறது.[2]

நிலவியல்[தொகு]

புவியியலில் அல் அசர் மலைத்தொடர், சக்ரோசு மலைத்தொடரின் தொடர்ச்சியாகும். மேலும், புவியியலின் முதல் சகாப்தத்தின் காலமான "நியோஜென்" (Neogene) காலகட்டத்தில்,[3] அதாவது 23.03 மில்லியனிலிருந்து 5.332 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னும் (Ma), மற்றும் புவியியலின் நேரஅளவு சகாப்தத்தின் காலமான "பிளியோசீன்" (Pliocene) காலத்திலும்,[4] அதாவது 5,333 மில்லியன் 2.58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் (BP), அரேபியத் தட்டோடு ( Arabian Plate), ஈரானியத் தட்டு ( Iranian Plate) எதிராக மோதி மற்றும் தள்ளப்பட்டு இம்மலைத் தொடர் உருவாயின.[5] மேலும் இந்த மலைத்தொடரின் பிரதானமானப் பகுதிகள், "ஒபியோலைட்ஸ்" (ophiolites) என்னும் மேலோடும், சுண்ணக்கல் படிவப்பாறையும், கிரீத்தேசியக் காலகட்டத்தில் உருவாகியுள்ளது.[6]

அமைவிடம் மற்றும் அதன் விவரம்[தொகு]

இந்த அல் அசர் மலைத்தொடர், தென்மேற்கு ஆசியாவில் உள்ள அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ள ஓமான் நாட்டின் "முசண்டம் பிரதேச" (Musandam Governorate) தீபகற்பப் பகுதியில் வடக்கு நோக்கி தொடங்குவதாக உருவாகியுள்ளது.[7] அங்கிருந்து, வடக்கு அசர் மலை (அசர் அல் கார்பி), தென்கிழக்கு பக்கமாக ஓடி, கடற்கரைக்கு இணையாகவும், அதேவேளையில் சற்று தொலைவிலேயே அது படிப்படியாக சென்று நகருகிறது.[8] மேலும் இம்மலைத் தொடரின் நடுப்பகுதியில், அரபு மொழியில் (لجبل الأخض) பச்சை மலை எனப்படும் "ஜெபல் அக்தர்" (Jebel Akhdar ) என்னும் பயங்கர காடடர்ந்த நிலப்பரப்பு உள்ளது. அந்நிலப் பரப்பு, அந்த நாட்டின் மிக உயர்ந்த (9,834 அடி (2,980 மீட்டர்) நிலப்பரப்பாக கருதப்படுகிறது.[9] செபல் அக்தர் (Jebel Akhdar ), (மற்றும் சிறிய "ஜெபல் நகல்" (Jebel Nakhl) வரம்பு), மற்றும் கிழக்கில் வரம்புடைத்து தாழ்வில், சமைல் பள்ளத்தாக்கு (Samail Valley) உள்ளது. (இது வடகிழக்கு மஸ்கத்திற்கு இட்டுச் செல்கிறது), மேலும், கிழக்கத்திய அல் அசர் மலைத்தொடர் பிராந்தியத்தில், கிழக்கு சமைல், மற்றும் (ஹஜ்ஜர் சாம்பல் ஷர்கி) உள்ளது. மேலும் இது, கிட்டத்தட்ட ஓமன் கிழக்கு கட்டத்தில் (கடற்கரைப் பகுதியில் மிகவும் நெருக்கமாக) சுர் மீன்பிடி நகரத்தின் கிழக்காகச் செல்கிறது, இது மொத்தம் 500 கிலோமீட்டர்கள் கொண்ட மலைத்தொடராக நீண்டுள்ளது.[10]

பிற குறிப்புகள்[தொகு]

தாழ்வான கடற்கரைப் பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஜெபல் அஜ்ஜர் (Jebel Hajjar), அல் பதினா பகுதி (Al Batinah Region) (தொப்பை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றும் உள்நாட்டு பர்வதங்களின் நிலப்பரப்பு அத் தஹிரா பிரதேசம் (Ad Dhahirah Governorate) (முதுகு) ஆகும்.[11]

இந்த மலைத்தொடர், ஒரு முக்கியமான சூழ்நிலைப்பிரதேசத்தில் உள்ள இது, சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் உள்ள கிழக்கு அரேபியாவின் ஒரே வாழ்விடமாகும். மேலும் இங்குள்ள காலநிலையானது, டிசம்பரிலிருந்து குளிர் மற்றும் ஈரமாக இருப்பதுடன், வெப்பமாகவும், ஆனால் இன்னும் ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரையிலான அவ்வப்போது மழை உடனான காலமாகும்.[12]

சான்றாதாரங்கள்[தொகு]

 1. "Al Hajar Mountains". www.abercrombiekent.co.uk (ஆங்கிலம்) -1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
 2. "Al-Hajar al-Aswad". www.irfi.org (ஆங்கிலம்) - 1988-2012. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
 3. Neogene Period
 4. Chapter 13 - The Neogene Period Lesson 64: The Pliocene Epoch
 5. "Tertiary–Quaternary faulting and uplift in the northern Oman Hajar Mountains" (PDF). Archived from the original (PDF) on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
 6. "The Al Hajar Mountains". wallpprs.com (ஆங்கிலம்) - 2016. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
 7. SULTANATE of OMAN |Oman Geography
 8. Oman Guide |Western Hajar Mountains
 9. Recently tagged — Jebel Akhdar
 10. "Hamada in the Western Hajar Mountains". es.treknature.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "Temperate grasslands, savannas, and shrublands Location and description". www.scribd.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
 12. "LOCATION AND DESCRIPTION". read.schoollibrary.com (ஆங்கிலம்) - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்_அசர்_மலைத்தொடர்&oldid=3833592" இலிருந்து மீள்விக்கப்பட்டது