ஓல்டுபீல்டு தாமசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்டுபீல்டு தாமசு
Oldfield Thomas
ஜான் எர்னட்ஸ்ட் பெருன் வரைந்த படம்
ஜான் எர்னட்ஸ்ட் பெருன் வரைந்த படம்
பிறப்பு 21 பிப்ரவரி 1858
மில்புரூக், டெட்ஃபோர்டுசயர், இங்கிலாந்து
இறப்பு16 சூன் 1929(1929-06-16) (அகவை 71)
தேசியம்இங்கிலாந்து
துறைவிலங்கியல்
அறியப்பட்டதுபாலூட்டி

மைக்கேல் ரோஜர்ஸ் ஓல்ட்ஃபீல்ட் தாமஸ் (Oldfield Thomas) எப் ஆர் எஸ் எப் இசட் எஸ் (21 பிப்ரவரி 1858 - 16 ஜூன் 1929) என்பவர் இங்கிலாந்து நாட்டினைச் சார்ந்த விலங்கியல் நிபுணர். [1] [2]

தொழில்[தொகு]

தாமஸ் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பணியாற்றினார். இவர் பாலூட்டிகளில் 2,000 புதிய இனங்கள் மற்றும் கிளையினங்களை விவரித்தார். இவர் 1876ஆம் ஆண்டில் அருங்காட்சியக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர் 1878ஆம் ஆண்டு விலங்கியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

1891ஆம் ஆண்டில், தாமஸ், சர் ஆண்ட்ரூ கிளார்க்கின் மகள் மேரி கேனை மணந்தார். இதன் மூலம் பாலூட்டி சேகரிப்பாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அவர்களின் மாதிரிகளை அருங்காட்சியகத்திற்கு வழங்குவதற்கும் நிதி வழங்க வழிவகுத்தது. [3] இவர் மேற்கு ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் களப்பணிகளை மேற்கொண்டார். இவரது மனைவி இயற்கை வரலாற்றில் தனது ஆர்வத்தை இவருடன் பகிர்ந்து கொண்டு, பயணங்களை இவருடன் மேற்கொண்டு மாதிரிகளைச் சேகரிப்பதில் உதவினார்.[1] 1896ஆம் ஆண்டில், வில்லியம் ஹென்றி ஃப்ளவர் துறையின் கட்டுப்பாட்டைப் பெற்றபோது, கண்காட்சிகளை மறுசீரமைக்க ரிச்சர்ட் லிடெக்கரை பணித்தார்.[4] புதிய மாதிரிகளில் தாமஸ் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.[5][6]

தாமஸ் தனது வகைபிரித்தல் முயற்சிகளை இங்கிலாந்தின் ஏகாதிபத்தியத்தின் நோக்கத்திலிருந்து பார்த்தார். "நீங்களும் நானும் எங்கள் விஞ்ஞான வாழ்க்கையில் உலகின் பாலூட்டிகளின் பொது அறிவை பிரமாதமாக முன்னேற்றம் கண்டிருக்கிறோம் - இனி சில அல்லது வெற்று பகுதிகள் இல்லை" என்று கெரிட் ஸ்மித் மில்லருக்கு எழுதிய கடிதத்தில் இவர் கூறினார்.[3]

1923இல் அதிகாரப்பூர்வமாக அருங்காட்சியகத்திலிருந்து ஓய்வு பெற்ற இவர், தனது பணிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்தார். அலுவலகத்தில் இருந்தபோது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக வதந்திகள் தெரிவித்தாலும் இவர் தந்து வீட்டில்தான் இறந்தார் [7] 1929 இல், 71 வயதில், அவரது மனைவி இறந்த ஒரு வருடம் கழித்து, அவர் நினைவில் உயிர்துறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Alfred Cort Haddon (1929). "MR. M. R. Oldfield Thomas, F.R.S". Nature 124 (3116): 101–102. doi:10.1038/124101a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 
  2. Haddon, Albert Cort (9 May 1901). "M. R. Oldfield Thomas". Nature 64 (1645): 37–38. doi:10.1038/064038a0. https://books.google.com/books?id=7soKAAAAYAAJ&pg=PA37. 
  3. 3.0 3.1 "Between Science and Empire: Oldfield Thomas and Anglo-American Zoology". Smithsonian Institution Archives. 19 January 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.
  4. The Natural History Museum at South Kensington, William T. Stearn ISBN 0-434-73600-7
  5. Oldfield Thomas, Catalogue of the Marsupialia and Monotremata in the Collection of the British Museum (Natural History) Dept of Zoology (1888), Taylor and Francis, London Catalogue of the Marsupialia... full text retrieved 21 March 2007
  6. Oldfield Thomas F. R. S., The History of the Collections Contained in the Natural History Departments of the British Museum Vol. II, Separate Historical accounts of the Historical Collections included in the Department of Zoology, I. Mammals,(1906) William Clowes and Sons Ltd. London. retrieved 21 March 2007 The History of the Collections..." full text
  7. Portch, Lorraine (18 November 2015). "Michael Rogers Oldfield Thomas – a resolved ending to a suicide mystery". London: Blogs from the Natural History Museum. Archived from the original on 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்டுபீல்டு_தாமசு&oldid=3113124" இலிருந்து மீள்விக்கப்பட்டது