விளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளா
விளாம் பழம்
விளாம் பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Aurantioideae
Tribe: Citreae
பேரினம்: Limonia
L.
இனம்: L. acidissima
இருசொற்பெயர்
Limonia acidissima
L.

விளா மரம் இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து விளாம் பழம்களை தரும் ஒரு மரம். விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது

விளாம்பழம்[தொகு]

விளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 170 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.

மருத்துவப் பயன்கள்[தொகு]

சதை நரம்புகளைச் சுருங்கச் செய்வது இதன் பொதுக் குணமாகும். பழம் கோழையை அகற்றிப் பசியுண்டாக்கும். பழஓடு தாதுக்களின் கொதிப்பைத் தணிக்கும். பிசின் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும். வயிற்றில் இருக்கின்ற வாயுவினை அகற்றும். புண்களை ஆற்றும். நாவறட்சி, விக்கல், வாதம், பித்தம், மற்றும் குட்டம் போக்க வல்லது. ஒவ்வாமை நோய், இரத்த போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கும்

வெவ்வேறு மொழிகளில்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Feronia elephantum on treknature
  2. S G Joshi, Medicinal Plants, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi, 2004, ISBN 81-204-1414-4, p.347
"http://ta.wikipedia.org/w/index.php?title=விளா&oldid=1790790" இருந்து மீள்விக்கப்பட்டது