விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு84

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புக் கட்டுரை - நட்சத்திரக் குறியீடு[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரைகள் நட்சித்திரக் குறியீடு பெற்றுள்ளன.. (இங்கு சொடுக்கிப் பார்க்கவும்) அதே போல் நமது சிறப்புக் கட்டுரைகளையும் குறியிட இயலுமா? :) --sethupathy (பேச்சு) 14:28, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழிலும் சிறப்புக் கட்டுரைகள் உள்ளன. (ஏறத்தாழ 50 என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் 1000 கட்டுரைகள்.). கட்டுரைகளை குறியிட முடியாது. சிறப்புக் கட்டுரையாக்கக் கோரலாம். தற்போது தமிழில் சிறப்புக் கட்டுரைகள் அவ்வளவாக நடைமுறையில் இல்லை. சிறப்புக் கட்டுரை அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். - தமிழ்க்குரிசில்

சரி :) --sethupathy (பேச்சு) 15:04, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

[1] என்பதனுள் தற்போதய தமிழ் விக்கிப்பீடியா சிறப்புக்கட்டுரைகள் அடங்கியுள்ளன, அக்கட்டுரைகளின் வலது மூலையில் நட்சத்திரக்குறி இருக்கும், ஒரு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க விரும்பினால் முதலில் சிறப்புக்கட்டுரையாக்க பரிந்துரைக்க வேண்டும், மேலதிக தகவலிற்கு இதை வாசித்துப்பாருங்கள் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:38, 28 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

மீண்டும் சிறப்பு கட்டுரைப்பணியை ஆரம்பித்தால் என்ன? 50,000 கட்டுரைகளை நெருங்கும் தமிழ் விக்கியில் 10 சிறப்பு கட்டுரைகள் மட்டும் தான் உள்ளன. 1000த்துக்கு ஒன்றாவது இருந்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

செய்வோம். :) சிறப்புக் கட்டுரைகளாகத் தகுதி பெறும் கட்டுரைகள் பல உள்ளன. எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூடிய விரைவில் செய்வோம். :)

வேடிக்கை என்னவென்றால் தற்போது சிறப்புக்கட்டுரைகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரைவாசிக் கட்டுரைகளில் ஒரு மேற்கோளேனும் சுட்டப்படவில்லை.--சங்கீர்த்தன் (பேச்சு) 12:27, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

Navigation menu[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:15, 7 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரைகளின் தரம்[தொகு]

தமிழ் விக்கிக் கட்டுரைகள் தரமுயருவதற்கு உக்திகள் வகுக்கப்பட்டிருக்கின்றனவா? Particularly, owing to the collaborative editing system followed, readability of content will suffer. Is there any way of overcoming problems arising as a result of collaborative editing in use. How can we bridge the gap between stylistic differences found in the language used by collaborative editors of the Tamil wikipedia. If you have any information on the above kindly send me for reference.−முன்நிற்கும் கருத்து Musanage (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

திரு முருகையன், விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்#கையேடுகள் என்னும் பகுதியைப் பாருங்கள். இவற்றைப் பயனர்கள் பயன்படுத்தலாம். கட்டுரையின் நீளம், செறிவு, நடை, சீர்மை, பொதுவாகத் தரம் என்பன யாவுமே கூட்டாக உழைத்து நிலைநிறுத்துவது, மேம்படுத்துவது. அதற்கு ஒருபக்கச் சாய்வு இல்லாமல், நடுநிலை காத்து எழுதுதல் (விக்கித்தூண்களில் ஒன்று) போன்று பல கொள்கைகளும் பரிந்துரைகளும் உள்ளன. கட்டுரையின் தரத்தைச் செம்மைப் படுத்துவதும் உயர்த்துவதும் கூட்டாக்கப் பங்களிப்பாளர்கள் கையில்தான் இருக்கின்றன. ஒரு செய்திக்குறிப்பைத் திருத்தினாலோ, விரிவு படுத்தினாலோ, அது தரம் உயர்த்தப்படும் நோக்கில்தான். நீங்கள் கூறுவது போல "readability of content will suffer" என்று பொதுப்பட சொல்ல இயலாது என நினைக்கின்றேன். சில இடங்களில் அப்படியும் ஆகலாம், அப்பொழுது அடுத்து வருபவர்கள் சீர் செய்யலாம், செய்ய வேண்டும். மேலே உள்ள கையேடுகளும் நடையை மேம்படுத்தப் பயன்படும். விக்கிப்பீடியா:நடைக் கையேடு என்னும் பக்கத்தில் உதவக்கூடிய பல செய்திகள் உள்ளன, பார்க்கவும். இதனையும் விரிவுப்படுத்தலாம். தகவல் செறிவு முதல் நடையமைப்பு வரை அனைத்துமே கூட்டாக்க தொடர் வினையால் மேம்பட வேண்டும், மேம்படும் என்பதே விக்கிப்பீடியா போன்ற கூட்டாசிரியப் படைப்பின் அடிப்படை நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். மிக மிகப் பெரும்பாலும் இதுவே உண்மையாகவும் உணர்கின்றேன் (மிக மிக சில விதிவிலக்குகள் இருக்கலாம், மறுக்கவில்லை). பொதுவாக கூட்டாக்க கூட்டுத் தொகுப்பில் நேரும் பெரிய குறைபாடு நடையில் சீரின்மை. இதற்குத் தீர்வு, ஒருவரோ பலரோ சிலமுறையாவது படித்துப்பார்த்துச் சீர்மை பெருக்க வேண்டும். ஒரு கட்டுரையில் ஆக்சிசன் என இரண்டு மூன்று பத்திகள் இருந்து, பின்னர் வேறு ஒருவர் வந்து விரிவாக்கும்பொழுது ஆக்சிஜன் என்று எழுதுவதும், இன்னொருவர் வந்து அடுத்த சில பத்திகளில் ஆக்ஸிஜன் என்று எழுதுவதும் சீர்மையற்ற போக்குகள். ஒரே சீராக ஆக்சிஜன் என்றோ, ஆக்சிசன் என்றோ, ஆக்ஸிஜன் என்றோ இருத்தல் வேண்டும். இங்கு பரிந்துரைகள் ஏற்று செயல்பட வேண்டும். அறியாது செய்ய நேர்ந்தால், பின்னர் வருபவர் திருத்தி சீர்மை நாட்ட வேண்டும். இது வெறும் ஒரு சொல்லின் வடிவம். இது போக ஒருவர் செயற்பாட்டு வினைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கலாம், மற்றொருவர் நேர்மொழியாக (செய்மொழியாகவே) எழுதியிருக்கலாம். இங்கெல்லாம், சீர்மைப்படுத்துதல் தேவை. ஒருவரே எழுதிய கட்டுரை அல்லது நூல் என்றாலும் கூட இப்பிழைகள் அல்லது மாறுபாடுகள் வர நேரிடலாம் (கூட்டாக்கத்தால் மட்டுமே வர வேண்டும் என்றில்லை). எப்படி ஒரு தொகுப்பாசிரியர் (editor) சீரொழுக்கம் கூட்டுவாரோ, அதே போல நாமும் செய்ய வேண்டும். --செல்வா (பேச்சு) 19:03, 7 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையின் தரத்தைச் செம்மைப் படுத்துவதும் உயர்த்துவதும் கூட்டாக்கப் பங்களிப்பாளர்கள் கையில்தான் இருக்கின்றன. என்பது நல்லது. ஆனால் இந்த செம்மைப் படுத்தவதிலும் உயர்த்துவதிலும் உங்களுடைய கூட்டாக்கப் பங்களிப்பு எத்தகையது என்பதை நான் அறிய விளைகிறேன்.

பொதுவாக கூட்டாக்க கூட்டுத் தொகுப்பில் நேரும் பெரிய குறைபாடு நடையில் சீரின்மை. நடையில் சீரின்மை என குறிப்பிடும் நீங்கள் உங்களின் நடைக்கு உகந்தவாறு நடை இருப்பதே சீரான நடை என்பது போல் பல இடங்களில் பேசி இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் உங்கள் கொள்கைகளை வலிந்து மற்றவர் மீது திணிப்பது சரியா எனவும் கேட்டறிய விளைகிறேன்.

ஒருவரோ பலரோ சிலமுறையாவது படித்துப்பார்த்துச் சீர்மை பெருக்க வேண்டும். இதனை நீங்கள் செய்கிறீர்களா? ஒரு நாளைக்கு எத்தனை முறை? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை அப்படி செய்ய வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்பது ஒரு அதிகாரி தனது கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளின் மீது அதிகாரம் செய்வது போன்று உள்ளது.

எப்படி ஒரு தொகுப்பாசிரியர் (editor) சீரொழுக்கம் கூட்டுவாரோ, அதே போல நாமும் செய்ய வேண்டும். நாமும் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள் செய்துவருகிறீர்களா? நீங்கள் செய்யாமல் மற்றவர்களை செய்ய வேண்டும் என்பது நீங்கள் ஒரு ஆசிரியராகவும் மற்றவர்கள் மாணவர்களாகவும் உங்கள் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்பது போது போன்ற கடுமையான அதிகாரம் தெரிகிறது. இது நல்லதா? இதனை இங்கே உள்ள எல்லோரும் ஏற்கிறார்களா? இங்கே பலர் கருத்துக்கந்தசாமிகளாகவும், கட்டப் பஞ்சாயத்து தலைவர்களாகவும் தகவமைத்துக்கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இது போன்ற அதிகார அலப்பறைகளினால் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வரும் பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவது உங்களுக்கு தெரியுமா? எனவும் கேட்டறிய விளைகிறேன். வணக்கம்.--சாட்டை (பேச்சு) 08:16, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

சாட்டை, புதிய பயனர் ஒருவரின் ஐயத்துக்குச் செல்வா பொதுப்படவே விளக்கமளித்துள்ளார். இதே விளக்கம் எல்லா விக்கிப்பீடியாக்களுக்கும் பொருந்தும். செல்வாவின் பங்களிப்புகளை அவரது பயனர் பக்கத்தில் காணலாம். உரையாடலுக்குத் தொடர்பில்லாத தனியாள் தாக்குதலில் ஈடுபடாமல் வளர்முக பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். தங்களிடம் இருந்து இதே போக்கு தொடருமானால் தங்கள் பயனர் கணக்கைத் தடை செய்ய வேண்டி வரும். நன்றி.--இரவி (பேச்சு) 12:30, 8 சனவரி 2013 (UTC) :👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 9 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பயனர் சாட்டை, என்னுடைய பங்களிப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் மேலே இரவி சொன்னது போல பார்க்கலாமே. பல கட்டுரைகளைப் படித்து தகவல் சேர்ப்பது, படம் சேர்ப்பது, தகவல் பிழை திருத்துவது, உரை திருத்துவது, கணிதச் சமன்பாடு சேர்த்தல் போன்ற பற்பல பணிகளை எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நான் செய்து வருகின்றேன். ஆனால் புதிதாகச் சேர்ந்துள்ள பயனர் Musanage மேலே கேட்ட கேள்விக்கு நான் எனக்குத் தெரிந்த மறுமொழியை இட்டுள்ளேன். அவ்வளவுதான். நீங்கள் என் கூற்றுகளைப் பிறழ உணர்ந்து தனிமாந்தக் காய்தல் காட்டுவதாகத் தோன்றுகின்றது. --செல்வா (பேச்சு) 15:01, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இந்தி விக்சனரியில் தமிழ்ச் சொற்கள்[தொகு]

இந்தி விக்சனரியில் பல சொற்கள் புரியாதவாறு உள்ளன. இவை தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்ட மந்திரங்கள் என்று நினைக்கிறேன். என்ன பிழை என்று யாராவது பாருங்களேன். குப்பையாய் இருந்தால் நீக்கக் கோரலாம். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:55, 11 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இவை தானியங்கியால் உருவாக்கப்பட்டுள்ளன. குப்பை தான். நீக்குமாறு கோரலாம்.--Kanags \உரையாடுக 10:34, 11 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

எஸ்.ஆர்.எம் பல்கலையில் 17 அன்று பட்டறை[தொகு]

தமிழ் விக்கி மின் குழுமம், மற்றும் [சென்னை விக்கி மின் குழுமம் ஆகியவற்றில் வந்த மின்னஞ்சல்கள் உங்கள் பார்வைக்கு. வருகிற 17ம் தேதி அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலையில் விக்கிமீடியாவைச் சேர்ந்த நூபூர் ராவல் விக்கி பட்டறைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னொரு மின்னஞ்சல்: டிங்கி காய்ச்சல் பற்றிய கட்டுரைக்கு அழைப்பு. நன்றி -- மாகிர் (பேச்சு) 15:07, 13 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா குறித்து தமிழ்நாடு அரசு செயலாளர் பேச்சு[தொகு]

16-12-2012 அன்று சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் வளர்ச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப அவர்கள் கணினித் தமிழ் குறித்துப் பேசும்பொழுது, உலக இணையதள பயன்பாட்டில், "விக்கிபீடியா" தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் பேசிய செய்தியின் கடைசிப் பகுதி மட்டும் இங்கு பார்வைக்காக...

”கணினி தமிழ் வளர்ச்சிக்கு, அரசு மட்டுமே செயல்பட வேண்டும் என இருக்கக் கூடாது. தமிழ் மொழியில் ஆர்வம் உள்ள எவரும் முன்வரலாம். ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி என, 25 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் தமிழ் வலைப்பூக்கள், தனியாரால் உருவாக்கப்பட்டுள்ளன.

"விக்கிபீடியா" உலக இணையதள பயன்பாட்டில், தமிழுக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. உலகில் உள்ள 285 மொழிகளில், "விக்கிபீடியா' உள்ளது. இதில், இந்திய மொழிகளான இந்திக்கு 40வது இடமும், தெலுங்குக்கு 60வது இடமும், தமிழுக்கு 61வது இடமும் கிடைத்து உள்ளது.இந்திய மொழிகளுக்குள்,தமிழ் விக்கிபீடியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழில் சிறந்த நூல்களுள் ஒன்றாக, தமிழ் விக்கிப்பீடியா நூலுக்கும் பரிசளிக்கப்பட்டு உள்ளது.” என்று பேசினார். (பார்க்க: தினமலர் செய்தி)

தமிழ் விக்கிப்பீடியா குறித்தும், நான் எழுதிய “தமிழ் விக்கிப்பீடியா” நூலுக்குப் பரிசளிக்கப்பட்டது குறித்தும் பேசிய அரசுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:14, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி தேனி.--Kanags \உரையாடுக 10:15, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி தேனி சுப்பிரமணி. அரசுச் செயலாளர் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றியும் தமிழ் விக்சனரியைப் பற்றியும் விரிவாகவும் பெருமையாகவும் தன் பேச்சில் குறிப்பிட்டார். தேனி சுப்பிரமணி எழுதிய நூலுக்கு அரசு பரிசளித்ததைப் பற்றியும் குறிப்பிட்டார். மயூரநாதன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கியதையும் தெளிவாகக் குறிப்பிட்டார் ("இலங்கையில் பிறந்து வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ. மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முதற்பக்கத்தை உருவாக்கினார்."). திசம்பர் 16, 2012 அன்று இலயோலா கல்லூரில் நிகழ்ந்த கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள், இம்மாநாட்டைத் திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை செய்த காட்சி அருகே காட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசுச் செயலாளர் முனைவர் மூ.இராசாராம் அவர்கள், இம்மாநாட்டைத் திட்டமிட்டு நடத்திய பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமை செய்த காட்சி

இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளும் நல்வாய்ப்பைப் பெற்றேன். --செல்வா (பேச்சு) 10:33, 17 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 12:58, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:18, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

50,000 கட்டுரைகள்[தொகு]

50,000மாவது கட்டுரையாக பெ. மாதையன் கட்டுரையை எழுதிய தேனி சுப்பிரமணிக்கு வாழ்த்துகள் :) எப்படியும் நான் தான் போட வேண்டும் என்று கட்டுரையை எழுதி வைத்துக் கொண்டு விடிய விடிய காத்திருந்ததில் தூங்கிப் போய் விட்டேன் :)--இரவி (பேச்சு) 05:20, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

//எழுதி வைத்துக் கொண்டு விடிய விடிய காத்திருந்ததில் தூங்கிப் போய் விட்டேன்// அப்படியா...இரவி?! அதனை அப்படியே 1,00,000 கட்டுரையாக போடுவதற்கு தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். :) --HK Arun (பேச்சு) 11:03, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

1,00,000ஆவது கட்டுரையை எழுத முன்பதிவு செய்த தேனியார் அதை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் உண்ணாவிர்ஃஅதம் தான். :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:53, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மற்றொரு மைல்கல்லில் நாம்.......--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:57, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Anton (பேச்சு) 07:24, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிபீடியாவின் முதல் பக்கத்தில் மொழிவாரி பட்டியலில்
More than 50,000 articles: български · eesti · Ελληνικά · English (simple) · euskara · galego · עברית · hrvatski · norsk (nynorsk)‎ · slovenščina · srpskohrvatski / српскохрватски · ไทย
தமிழ் இடம்பெறுவது எப்போது? --ஸ்ரீதர் (பேச்சு) 07:50, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அருமையான செய்தி. :) ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தில் 50,000+ வரிசையில் தமிழை இணைத்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 09:28, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
நன்றி சுந்தர்! --செல்வா (பேச்சு) 10:46, 18 திசம்பர் 2012 (UTC) 👍 விருப்பம்--HK Arun (பேச்சு) 11:06, 18 திசம்பர் 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 04:00, 24 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்.--Kanags \உரையாடுக 10:21, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் எனதும்!!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --அஸ்வின் (பேச்சு) 15:30, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அடடா!!!! வட போச்சே......?  :) (ஒரு வாரமாகவே இணையக் கோளாறு இல்லையென்றால் நான் தான்..... தயாராக இருந்தேன்)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:12, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐம்பதாயிரம் கட்டுரைகள் என்பது மிக்க மகிழ்ச்சியானதுதான் (பிரியாணி போடலாம்). இனி நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைக் கூட்டுவதைப் பற்றி ஆராய்ந்தாக வேண்டும். விக்கியில் எத்தனையோ கட்டுரைகளை மிகச் சிறப்பாக ஆக்க வேண்டுமென்ற எண்ணம் என்னுள்ளும் இருந்து கொண்டே இருந்தாலும், வேலைப் பளு எங்கே விட்டது? இங்கே ஜகார்த்தாவில் எல்லோரும் உறக்கத்திலிருக்கும் வேளையில், தன்னந்தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனினும் இடையிடையே விக்கிப்பீடியாவையும் எட்டிப் பார்க்கிறேன். பாரவதிஸ்ரீ, நீங்கள் வடை போச்சே என்கிறீர்கள். நான் இங்கே வடை எங்கு கிடைக்குமெனத் தேடுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:29, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா அரை இலட்சம் கட்டுரைகளைக் கடந்து முன்னேறிச் செல்வதைக்காண மகிழ்ச்சியாக உள்ளது. இதில் பங்களித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அடுத்த 50,000 கட்டுரைகளை மிகக் குறுகிய காலத்தில் எட்டுவதற்கு உழைப்போமாக. ---மயூரநாதன் (பேச்சு) 18:31, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--Nan (பேச்சு) 18:52, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். ஒரு முக்கிய மைல்கல். ஒடியல் கூழ் காச்சலாம், வாங்கோ. --Natkeeran (பேச்சு) 01:14, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சிவம் 00:16, 24 திசம்பர் 2012 (UTC)

மிக்க மகிழ்ச்சி! அனைவருக்கும் வாழ்த்துகள்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:12, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்! நானும் மீண்டும் வந்து விட்டேன்... --மதனாகரன் (பேச்சு) 06:49, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அதிகம் எழுதப்படும் கட்டுரைகள் பகுப்பில் மாதிரி கட்டுரைகளை உருவாக்குவதன் மூலம் தரத்தைக் கூட்டலாம்[தொகு]

இங்கு அவ்வப்போது கட்டுரைகளின் தரம் குறித்து விவாதிக்கப்பட்டு கிடப்பில் போடப்படுகிறது. அதை பற்றிய பேச்சில தொடர்ச்சி இல்லை. தரத்தைக்கூட்டுவது என்றால் எப்படி அதை எளிதாக்குவது என்பதையும் தெளிவாக அறிய வேண்டுமல்லவா. அதற்கான மாதிரிக்கட்டுரைகளை உருவாக்கினால் என்ன?

உதாரணத்திற்கு திரைப்படங்கள் பற்றியும் நடிகர்கள் பற்றியும் ஊர் பற்றியும் அதிக கட்டுரைகள் வரும் என நினைக்கிறேன். ஆனால் அதற்கான தரவு தளங்கள் எல்லாம் ஒரே கட்டுரையில் வருமாறு உருவாக்கினால் பின்னர் அதைப்போன்று வேறு கட்டுரைளுக்கான தரவுகளை புதியவரும் எளிதாக பெற முடியும். தமிழ் நாட்டு ஊர் பற்றிய கட்டுரைகள் என்றால் தமிழக அரசின் தலங்களில் அதை மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக கொடுத்திருப்பார்கள் அது போன்ற தளங்களை மேற்கோள்களாக அம்மாதிரி கட்டுரைகளில் இடலாம். அதைப்பார்ப்பவர் அவருடைய ஊருக்கு அதே தரவுகளை அத்தளங்கள் மூலம் பெற வழி வகுக்கும். வேறு எந்தெந்த பகுப்பில் அதிக கட்டுரைகல் உருவாக வாய்புளதோ அதில் ஒவ்வொன்றிலும் மாதிரி கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:35, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 10:32, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--பாஹிம் (பேச்சு) 11:50, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஓர் ஐயம்![தொகு]

அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்! வெகுநாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறேன். ஓர் ஐயத்துடன். இங்கே, விக்கிப்பீடியாவின் கட்டுரைகளிலும், விக்கி பொது ஊடகத்திலும் உள்ள படங்கள் முதலான கோப்புகள் காப்புரிமைக்கு அப்பாற்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, இவற்றை எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா? காப்புரிமையற்ற கோப்புகள், குனு தளையற்ற ஆவணத் திட்டத்தின் கீழ் வரும் கோப்புகள் ஆகியவற்றை விக்கிப்பீடியாவிற்கு வெளியே வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாமா? --இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 10:12, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் போன்று, விக்கி பொது ஊடகத்தில் உள்ள அனைத்து படிமங்களும் வெளியில் பயன்படுத்தக் கூடியவை அல்ல. அவற்றில் பயன்படுத்தக் கூடியவையும் முடியாதவையும் உள்ளன. ஒவ்வொரு படிமங்களிலும் இடப்பட்டிருக்கும் காப்புரிமை வார்ப்புருக்களை பார்க்கவும். விக்கி பொது ஊடகக் காப்புரிமைக்கும், விக்கிப்பீடியாவின் காப்புரிமைக்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படும் நியாயப் பயன்பாட்டு படிமங்களை விக்கி பொது ஊடகத்தில் பதிவேற்றவும் முடியாது; வேறு எங்கும் பயன்படுத்தவும் இயலாது. நன்றி!--HK Arun (பேச்சு) 10:16, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மிகப்பெரும்பாலான படங்களையும், எழுத்துகளையும் பிறவற்றையும் வணிக நோக்கிலும் பயன்படுத்தலாம், ஆனால் உரிமம் கூறும்படி பின்பற்ற வேண்டும். அட்ரிபியூசன் என்னும் படைப்பாளியின் அல்லது நிறுவனத்தின் பெயர் குறிப்பிடல் பலவற்றுக்குத்தேவைப் படலாம் (பெயர் குறிப்பீட்டுவிட்டால் பயன்படுத்தலாம், ஆனால் காப்புரிமக்கட்டணம் ஏதும் தேவை இல்லை). சில படைப்புகளை ஏதும் மாற்றம் செய்யாமல் பயன்படுத்த வேண்டும் என்றோ வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளோ இருக்கலாம். ஆனால் அவற்றை முறைப்படி பின்பற்றி வணிக நோக்கிலும் (விற்பனை) காப்புரிமக் கட்டணம் (இராயல்ட்டி) ஏதும் கட்டாமல் பயன்படுத்தலாம்.--செல்வா (பேச்சு) 15:36, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
ஆம்! விக்கிப் பொது ஊடகத்தில் நியாயப் பயன்பாட்டு படிமங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் செல்வாவின் விளக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம். மேலும் "வணிக நோக்கற்ற பயன்பாட்டிற்கு மட்டும்", "விக்கிப்பீடியா பயன்பாட்டிற்கு மட்டும்" போன்ற நியாயப் பயன்பாட்டு படிமங்கள் பற்றிய விளக்கங்களை இங்கே பார்த்து அறிந்துக்கொள்ளலாம்: Non-Free, Non-Free Content, Non Free Content Criteria.--HK Arun (பேச்சு) 18:36, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பர்களே! உங்கள் வழிகாட்டுதல்படியே நடக்கிறேன்.

--இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 08:47, 20 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் இனி...[தொகு]

தமிழர் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு குரும்படம்: தமிழ் இனி...--HK Arun (பேச்சு) 10:24, 19 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

சிறப்பாக இருந்தது.

புலம்பெயர்ந்தோரின் நிலை என்னவோ! :-( −முன்நிற்கும் கருத்து 101.220.39.171 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

புறநானூறு - பன்னாட்டு மாநாடு[தொகு]

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து ”புறநானூறு” எனும் தலைப்பில் பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இந்த மாநாடு வாசிங்டன் வட்டாரத்தில் ஆகஸ்ட் 31 2013 தொடங்கி செப்டம்பர் 2 2013 வரை நடக்கவுள்ளது. புறநானூறு குறித்த கட்டுரைப் போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு... பார்க்கலாம்]--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 12:11, 23 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]


நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்[தொகு]

அனைத்து விக்கி உறவுகளுக்கும் எனது இதயம் கனிந்து நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.−முன்நிற்கும் கருத்து Sivam29 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இனிய நல்வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:14, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான நத்தார், புத்தாண்டு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 03:20, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

அனைவருக்கும் நத்தார்ப் பண்டிகை வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 03:24, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

நத்தார் வாழ்த்துக்கள். விடுமுறைகள் வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 04:30, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் இனிய நத்தார்ப் பண்டிகை நல்வாழ்த்துகள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 06:57, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

காலம்/ஆண்டு, இடம்/நாடு, வகை/துறை வாரியாகப் பிரிக்கப்பட வேண்டியவை (தமிழ், தமிழர்)[தொகு]

எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: en:2012, en:Category:2012 works. தமிழ் விக்கியில் தமிழ்ப் படைப்புகளுக்குச் சிறப்புக் கவனம் தரலாம். --Natkeeran (பேச்சு) 03:25, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:58, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்
மேலும்
பகுப்பு:தமிழ் நபர்கள்
பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்

--ஸ்ரீதர் (பேச்சு) 05:06, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

இலங்கை வரலாறு[தொகு]

பார்க்க: பேச்சு:முதலாம் விஜயபாகு --மதனாகரன் (பேச்சு) 11:16, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க[தொகு]

விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து தமிழ் கம்ப்யூட்டர் இதழில் நான் எழுதும் தொடர் கட்டுரை “விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க” எனும் தலைப்பில் வெளியாகிறது. தமிழ் கம்ப்யூட்டர் ஜனவரி 1 - 15, 2013 இதழில் முதல் பகுதி வெளியாகியுள்ளது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:39, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

பல ஊடகங்களில் ஊடுருவி விக்கி பரப்புரை செய்யும் தேனியாருக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 2 சனவரி 2013 (UTC)[பதிலளி]

அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம்[தொகு]

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சிறப்புமிக்க தமிழ் உயராய்வு மையமாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் அயல்நாட்டுத் தமிழர் புலம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களைப் பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரித்துப் பராமரிப்பதும் அவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதலும் இப்புலத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன. இந்நிறுவனப் பணிகளின் தொடர்ச்சியாக இப்புலம் “அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்” எனும் பொருண்மையில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கினை 2013 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 14, 15 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசியக் கருத்தரங்கத் தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா உள்ளிட்டு 6 அமர்வுகளாக நடத்தப்படும் இக்கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாக இந்நிறுவன வெளியீடாகக் கருத்தரங்க நாளன்று வெளியிடப்பட உள்ளது. கீழ்க்காணும் ஏதாவது ஒரு பொருண்மையில் இக்கருத்தரங்கில் அளிக்கப் பெறும் ஆய்வுக் கட்டுரைகளை அமைத்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • அயலகத் தமிழரும் தமிழ் இலக்கியப் படைப்புகளும்
  • அயல்நாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகள்
  • அயலகத் தமிழ் இலக்கிய வரலாறு
  • அயலகத் தமிழ் இலக்கியமும் சமூகமும்
  • அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்
  • அயலகத் தமிழ் இலக்கியங்களில் மொழிநடை
  • அயலகத் தமிழர் படைப்பிலக்கியங்களின் பரவலாக்கமும் மொழிபெயர்ப்பும்

இத்தேசியக் கருத்தரங்கிற்கான கட்டுரைகள் அனுப்ப விரும்புபவர்கள் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம் பக்கத்தைப் பார்வையிடலாம். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:47, 5 சனவரி 2013 (UTC)[பதிலளி]

இக்குறித்த தகவல்கள் அனைத்தும் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - தேசியக் கருத்தரங்கம் பக்கத்தில் இருந்து பிரதியாக்கம் செய்யப்பட்டவை

/உரையாடுக

விருபா, நீங்கள் தந்துள்ள இணைப்பையே தேனியாரும் தந்துள்ளார். இதில் என்ன தவறு கண்டீர்கள் ஐயா.--Kanags \உரையாடுக

பெரும்பாலும் தேனியார் வரிக்கு வரி அக்குறிப்பிட்ட இணைய முகவரியில் உள்ளவற்றை அப்படியே எடுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்பினேன். .--viruba \உரையாடுக

பொதுவாக இவ்வாறான தகவல்களைத் தரும் போது வெறும் இணைப்பாக இல்லாமல் அதில் உள்ள தகவலையும் தந்தாலேயே சிறப்பாக இருக்கும். பலர் வெறும் இணைப்பைத் தேடிப் போவதில்லை. அந்த விளம்பரம் பதிப்புரிமை கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், இத்தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் தனிக்கட்டுரையாகத் தரப்படவில்லை என்பதையும் கவனியுங்கள். நூலகத்தின் ஆவண மாநாடு பற்றிய தகவலும் ஆலமரத்தடியில் எழுதப்பட்டுள்ளது. இது பொதுவாக இணையத்தில் நடைமுறையில் உள்ள ஒன்று தான்.--Kanags \உரையாடுக 11:36, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
இவ்வாறு தகவல் தந்தது தவறா என்பது குறித்து முனைவர் கு. சிதம்பரம் அவர்கள் கருத்துத் தெரிவித்தால் நல்லது.--Kanags \உரையாடுக 11:40, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
கருத்தரங்க அறிவிப்பை அப்படியே பிரதி செய்யாமல் என் போக்கில் மாற்றி எழுத வேண்டும் என்று விருபா விரும்புகிறாரோ என்னவோ...? அப்படிச் செய்தால் அதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்றுக் கொள்ளுமா? விருபாவின் கருத்துக்கள் ஏதோ விருப்பமில்லாக் கருத்துக்களாக உள்ளன...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:41, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது குறித்த மின்னஞ்சல் 5 சனவரி 2013 அன்றே நண்பர் முனைவர் கு. சிதம்பரம் அவர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவரும் எனக்கு நன்றி தெரிவித்து விட்டார். இதில் தவறு ஏதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கருத்தரங்கிற்கு விக்கிப்பீடியா வழியிலான ஒரு சிறு பரப்புரை அவ்வளவுதான். இதில் தவறு ஏதுமிருக்கிறது என்று விருபா கருதுவாரேயானால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நண்பர் முனைவர் கோ. விசயராகவன் அவர்களிடம் நான் நேரிலோ/தொலைபேசி வழியாகவோ பேசிக் கொள்கிறேன். விருபாவிற்கு எந்தக் கவலையும் வேண்டாம்...--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:29, 8 சனவரி 2013 (UTC)[பதிலளி]